வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் மேலும் தீவிரம் அடைந்தது தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்று அறிவிப்பு

வங்க கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தது.அது இப்போது வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகி தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ளது.அது மேலும் தீவிரம் அடைந்து தாழ்வு மண்டலமாக மாற உள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சியின் மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:–தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தீவிரம் அடைந்துள்ளது. அது இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
ஏற்கனவே வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று தூரத்தில் உருவாகி இருந்தது. அதுவும், இப்போது உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் ஒன்றாக சேர்ந்துள்ளன. இவை இரண்டும் சேர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் தாழ்வு மண்டலமாக மாறும்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை அநேக இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும். இந்த மழை அல்லது கனமழை சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
எண்ணூர் 10 செ.மீ., பாம்பன் 9 செ.மீ., பாபநாசம் 6 செ.மீ., காரைக்கால், குன்னூர் தலா 5 செ.மீ., குந்தாபாலம், முதுகுளத்தூர் தலா 4 செ.மீ., ஆயக்குடி, செங்கோட்டை, சங்கரன்கோவில், திருவாரூர், கேளம்பாக்கம், சத்தியமங்கலம், ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், ராமேசுவரம் தலா 3 செ.மீ., தென்காசி, குழித்துறை, மணிமுத்தாறு, கோத்தகிரி, விழுப்புரம், தம்மம்பட்டி, சேத்தியாதோப்பு, கழுகுமலை, சோழவரம், நாங்குனேரி, செங்குன்றம், பொன்னேரி, துறையூர் தலா 2 செ.மீ.மேலும் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், வத்திராயிருப்பு, விருத்தாசலம், சீர்காழி, குளச்சல் உள்பட 50–க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: