கல்விச்சோலை | டி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு: 4 சதவீதம் பேர் தேர்ச்சி -முழு விவரம்.

செய்தி 

டி.ஆர்.பி., மூன்றாவது முறையாக, ஆகஸ்ட்டில் நடத்திய டி.இ.டி., தேர்வு முடிவை, நேற்றிரவு வெளியிட்டது. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில், வெறும், 4.09 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். முந்தைய தேர்வை விட, 1.1 சதவீதம் பேர், கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. தமிழகத்தில், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர் பணி), 2.62 லட்சம் பேரும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியர் பணிக்கானது), 4 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக இருந்தன. இரு வாரங்களாக, தேர்வு முடிவை, தேர்வர் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு, தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவு வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில், 27,092 பேர், தேர்ச்சி பெற்றனர். வெறும், 4.09 சதவீதம் பேர் மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட, 60 சதவீத மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த தேர்வை விட, 1.1 சதவீதம் பேர், கூடுதாலாக தேர்ச்சி பெற்றனர். கடந்த தேர்வில், 2.99 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர்.

புள்ளி விவரம்

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள்தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் தாள் தேர்வை இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 187 பேர் எழுதினர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். அந்த வகையில் தமிழகத்தில் இரண்டு தாள்களையும் 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேர் எழுதினர்.

முதல் தாள் எழுதிய இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் ஆண்கள் 63ஆயிரத்து 717 பேர், பெண்கள் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 470 பேர். இவர்களில் 12 ஆயிரத்து 596 பேர், 60 சதவீதம் மார்க்குக்கு மேல் (தேர்ச்சிக்கான மதிப்பெண்) பெற்றுள்ளனர்.முதல் தாள் தேர்வு எழுதியவர்களில் 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் இரண்டாயிரத்து 908 பேர் (4.56 சதவீதம்) ஆண்கள்; 9 ஆயிரத்து 688 பேர் (4.88 சதவீதம்) பெண்கள்.

முதல் தாளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, கன்னடா ஆகிய மொழிக்கான தேர்வு நடத்தப்பட்டன. தமிழ் தேர்வில் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 990 பேர் (ஆண்கள் 62 ஆயிரத்து 190, பெண்கள் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 800) பங்கு பெற்றனர். அவர்களில் 12 ஆயிரத்து 433 பேர் (ஆண்கள் 2,823, பெண்கள் 9,610) 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டாம் தாளை எழுதிய 4 லட்சத்து 311 பேரில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 954 பேர் ஆண்கள், இரண்டு லட்சத்து 84 ஆயிரத்து 357 பேர் பெண்கள். இவர்களில் 14 ஆயிரத்து 496 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மார்க் எடுத்து தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்துள்ள 14,496 பேரில்,4,835 பேர் ஆண்கள், 9,661 பேர் பெண்கள். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் 3.62 ஆகும். ஆண்கள் 4.16 சதவீதம், பெண்கள் 3.39 சதவீதம் பேர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டு தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில், 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் சதவீதம் 4.21 ஆகும்.

புதுச்சேரிக்கான முதல் மற்றும் இரண்டாம் தாள்களை 7 ஆயிரத்து 991 பேர் எழுதினர். முதல் தாளை 3 ஆயிரத்து 857 பேரும் (642 ஆண்கள், 3,215பெண்கள்), இரண்டாம் தாளை 4 ஆயிரத்து 134 பேரும் (875 ஆண்கள், 3,259 பெண்கள்) எழுதினர்.முதல் தாளை எழுதிய 3,857 பேரில் 181 பேர், 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்த 181 பேரில் 28 பேர் ஆண்கள் (4.36 சதவீதம்), 153 பேர் பெண்கள் (4.75சதவீதம்). அந்த வகையில் முதல் தாளை எழுதியவர்களில் மொத்தம் 4.69 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.இரண்டாம் தாளை எழுதிய 4,134 பேரில், 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் ஆண்கள் (0.08 சதவீதம்), 51 பேர் பெண்கள் (1.56 சதவீதம்). இரண்டாம் தாளை எழுதியவர்களில் 1.40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisements

28 responses

 1. thank for information

 2. When will come cv progress.

 3. என்ன படிக்கறாங்க, சும்மா டிகிரி முடிக்கனும்னு படிச்சுபுட்டு என்ன சொல்றதுன்னு தெரியல

 4. TET Result looks pretty good by filtering the talented people, Let me know when the next TET Exam is praposed to start by TRB Board ……

 5. subject vice vaccant tell me sir

 6. how much Urdu language candidates passed? pls give the details of TRB notice board.

 7. If you know the mean pls tell to me also. my mail id manikandangssm@gmail.com

 8. thank you very much kalvisolai for every information .

 9. i think why not conducted test for every edn secretary and all edn directors,how is going edn improvement .all are giving wrong information to govt. for our own development.

 10. please give subjectwise vaccant details and subjectwise passed cadidates

 11. I got 94 marks. Paper2. BC. Weightage 74. Wil I get job?. Reply friends!!!!

 12. i got 95 in papaer 1 SC REG 2010 will i get job???

 13. may i know what is the weightage u have mentioned?

 14. may i know what is that weightage you have mentioned?

 15. Surely u get job i am also got 77(weightage

 16. Thanks for latest TNTET information…

 17. It is easy to give details about the no.of passed candidates. Why they don't publish that details? No.of vacancies also they can publish approximately.

 18. How can v come to know whether v will get job r not based on weightage.. Pls tel me how to calculate

 19. can u publish subject wise tet passed list?

 20. sir please publish district and subject wise passed list and vacancy list ?

 21. Sahaya Amsa Rani.A
  My TET Mark Paper 1 is 103/150, Seniority 2008 any chance for job this Acadamic year?

 22. when will the certificate verification sheduled

 23. when will the certificate verification scheduled

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: