சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித்துறை அலுவலகங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, புதிதாக கட்ட இருந்த "அறிவுசார் பூங்கா" திட்டம் அமலுக்கு வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித்துறை அலுவலகங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, புதிதாக கட்ட இருந்த “அறிவுசார் பூங்கா” திட்டம் அமலுக்கு வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் “அறிவுசார் பூங்கா&’ திட்டம் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. “டி.பி.ஐ., வளாகத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ள இயக்குனர் அலுவலகங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, “அறிவுசார் பூங்கா” என்ற பெயரில் பிரம்மாண்ட கட்டடம் கட்டப்படும்” என தெரிவிக்கப்பட்டது. 
“சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகமும் இந்த கட்டடத்திற்கு மாற்றப்படும்” என தெரிவிக்கப்பட்டது. திட்டத்தை செயல்படுத்த முனைந்தபோது டி.பி.ஐ., வளாகத்தின், வடக்குப்பகுதியில் கூவம் ஆற்றை ஒட்டியுள்ள கட்டடம் வளாகத்தின் மையப்பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி மைய கட்டடம் உள்ளிட்ட நான்கு கட்டடங்கள் தொன்மையான கட்டடங்கள் என தெரியவந்தது.
இந்த கட்டடங்களை தவிர்த்து இதர பகுதிகளை ஒருங்கிணைத்து “அறிவுசார் பூங்கா” கட்டடத்தை கட்ட அரசு முடிவு எடுத்தது. ஆனால் தற்போது வரை இந்த திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகமும், பாரம்பரிய கட்டடங்கள் பட்டியலில் இருப்பதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், “இல்லை” என கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அனைத்து கட்டடங்களையும் இடித்தால் தான் திட்டமிட்டபடி, கட்டடம் கட்ட முடியும் என்றும் இல்லையெனில் சரிவராது என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி பல்வேறு பிரச்னைகள் காரணமாக, “அறிவுசார் பூங்கா” கட்டும் திட்டம் நீண்ட காலமாக, கிடப்பில் உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறுகையில் “அறிவுசார் பூங்கா கட்டு மானப் பணியை, பொதுப்பணித்துறை தான் மேற்கொள்ள இருந்தது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக தற்போது வரை, திட்டத்தின் நிலை என்ன என்றே தெரியாத நிலை உள்ளது” என தெரிவித்தன.
கல்வித்துறை வட்டாரம் கூறுகையில் “தீபாவளிக்குப் பின், கல்வித்துறை சார்ந்த பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து, முதல்வர் ஆய்வு செய்து முடிவை எடுக்க உள்ளார். எனவே “அறிவுசார் பூங்கா” திட்டம் குறித்த அறிவிப்பும், விரைவில் வெளிவரும்” என தெரிவித்தன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: