அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. நடப்பாண்டு, 1.21 லட்சம் மாணவ, மாணவியர், ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என, கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி துவக்கப்பட்டது தொடர்பாக, நேற்று, சட்டசபையில் விவாதம் நடந்தது. 
அதன் விவரம் வருமாறு: 
மா.கம்யூ., பாலகிருஷ்ணன்: அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி துவக்கப்பட்டுள்ளதால், தமிழ் மொழி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பழனியப்பன்: ஆங்கிலம் தொடர்பு மொழியாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களில், வேலைவாய்ப்பு பெற, ஆங்கிலத் திறன் அவசியமாகிறது. ஆங்கிலவழிக் கல்வி கற்றவர்கள், எளிதாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை, தனியார் ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில், சேர்க்கின்றனர். அங்கு கட்டணம் அதிகம் இருந்தாலும், சிரமப்பட்டு படிக்க வைக்கின்றனர். இதை மனதில் கொண்டு, அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தமிழுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தொடக்கப் பள்ளிகளில் இருந்து, கல்லூரி வரை, தமிழ் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின், அரசு பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Leave a comment