ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ராஜேஷ்குமார் அக்ரவால் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ராஜேஷ்குமார் அக்ரவால்  பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக 7–2–2013 அன்று ராஜேஷ்குமார் அக்ரவால் பதவி ஏற்றுக்கொண்டார். இவரை (நிரந்தர) தலைமை நீதிபதியாக நியமித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்தவாரம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை ராஜ்பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் வைத்து பதவி ஏற்பு விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஐகோர்ட்டு நீதிபதிகள், அட்வகேட் ஜெரனல், அரசு வக்கீல்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கவர்னர் ரோசய்யா, முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால் ஆகியோர் தர்பார் மண்டபத்துக்கு காலை 10.5 மணிக்கு வந்தார்கள்.
அப்போது, ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வாசித்தார். பின்னர், தலைமை நீதிபதியாக ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி கவர்னர் ரோசய்யாவுக்கு தலைமைச் செயலாளர் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, தலைமை நீதிபதியாக ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு, கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக பதவி ஏற்றவுடன் ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, கவர்னர், ஐகோர்ட்டு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அரசு வக்கீல்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் அனைவருக்கும் தேனீர் விருந்து வழங்கப்பட்டது.
உத்தரபிரேதச மாநிலத்தில் 5.5.1953 அன்று ராஜேஷ்குமார் அக்ரவால் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, 14.8.1976 அன்று வக்கீலாக பதிவு செய்துக்கொண்டார்.
இவரது தந்தை ராஜாராம் அகர்வால், உத்திரபிரதேச மாநில அரசின் அட்வகேட் ஜெனரலாகவும், அலகாபாத் ஐகோர்ட்டில் மூத்த வக்கீலாகவும் பணியாற்றியவர்.
அதேபோல, அலகாபாத் ஐகோர்ட்டில் ராஜேஷ்குமார் அக்ரவால், மத்திய அரசின் வக்கீலாக பணியாற்றினார். பின்னர், 5.2.1999 அன்று அலகாபாத் ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ராஜேஷ்குமார் அக்ரவால், நேற்று தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: