"ஆசிரியர் தகுதி தேர்வில், எந்த பிரிவினருக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்துவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது" என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆசிரியர் தகுதி தேர்வில், எந்த பிரிவினருக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்துவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது” என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையை, அடுத்த மாதத்துக்கு, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற, 60 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இந்த மதிப்பெண்ணை எடுத்தால் தான், தகுதி சான்றிதழை, ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கும். தகுதி மதிப்பெண்ணில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு, ஐந்து சதவீதம் தளர்த்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, ஐகோர்ட்டில், வழக்கறிஞர் எம்.பழனிமுத்து உள்ளிட்டோர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி தாக்கல் செய்த பதில் மனு: ஆசிரியராக நியமிக்க கோருபவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் தேர்வின் போது தான், ஜாதி சுழற்சி முறை, அமலுக்கு வரும். ஆசிரியர்கள் நியமனத்துக்கு, தனி தேர்வு முறையை, ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றுகிறது. 
அரசு பிறப்பித்த வழிமுறைகளின்படி, தகுதி தேர்வில் வெற்றி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். தகுதி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்ய, அரசுக்கு அதிகாரம் உள்ளது. வெவ்வேறு பிரிவினருக்கு, வெவ்வேறு மதிப்பெண்கள் இருக்க முடியாது. ஐகோர்ட் உத்தரவுக்குப் பின், ஒரு குழு அமைக்கப்பட்டு, இந்தப் பிரச்னை ஆராயப்பட்டது. குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்தக் கூடாது என, முடிவெடுக்கப்பட்டது. 
குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தரத்தில், எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. எந்தப் பிரிவினருக்கும், மதிப்பெண் தளர்த்துவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளது. 
எனவே, எந்தப் பிரிவினருக்கும் மதிப்பெண்ணை தளர்த்த தேவையில்லை. தகுதி மதிப்பெண்ணில், ஐந்து சதவீத சலுகை கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, &’முதல் பெஞ்ச்&’ முன், விசாரணைக்கு வந்தது. விசாரணையை, அக்., 22ம் தேதிக்கு, &’முதல் பெஞ்ச்&’ தள்ளிவைத்தது.
Advertisements

One response

  1. good decision.. i accept it..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: