முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.

35 responses

  1. தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு: அரசின் கருத்தைத் தெரிவிக்க நீதிமன்றம் மீண்டும் உத்தரவுBy dn, மதுரைFirst Published : 26 September 2013 02:50 AM ISTமுதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில், எழுத்துப் பிழையான கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மறுதேர்வு நடத்துவது தொடர்பாக சில யோசனைகளைத் தெரிவித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். மொத்தம் உள்ள 150 கேள்விகளில், பிழையான 40 கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாக செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையின்போது அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் புதன்கிழமை இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், புதன்கிழமை விசாரணையின்போது மறுதேர்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.தேர்வு நடத்தப்பட்ட 150 கேள்விகளில், பிழையாக உள்ள 40 கேள்விகளை நீக்கிவிட்டு110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிழையான 40 கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்திருப்பவரின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ் வழக்கில் அளிக்கப்படும் உத்தரவு, தேர்வு எழுதியவர்களில் ஒரு நபருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.மாற்று கேள்வித்தாள் தயாராக உள்ளது; அதை அச்சிடுவதற்கு 4 வாரங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் நிலையில், கேள்வித்தாள் அச்சிடுவது, தேர்வு நாள் குறித்து அறிவிப்பு வெளியிடுவது மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், ஏற்கெனவே நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இப்போதைய சூழலில் 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வது என்றாலும், உடனடியாகச் செய்துவிட முடியாது. அதற்கும் கால அவகாசம் தேவைப்படும்.ஆகவே, மேற்குறிப்பிட்ட தகவல்களைக் கூறி, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (செப்.30) ஒத்தி வைக்கப்பட்டது. விசாரணையின்போது ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் அறிவொளி, தங்கமாரி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

  2. தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி மறு தேர்வு நடத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவுமதுரை: மதுரை கே.புதூரை சேர்ந்த விஜயலெட்சுமி, தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வில், பி பிரிவு கேள்வித்தாளில் பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடக்கோரி, மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மறு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெயகுமரன் ஆஜராகினர். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் தங்கமாரி, அறிவொளி ஆஜராகினர். அவர்களிடம், தேர்வுக்கு முதல் நாள் கேள்வித்தாள் வெளியானால், தேர்வு அன்று வழங்குவதற்கு மாற்று கேள்வித்தாள் தயாராக வைத்து இருப்பீர்கள். அதேப்போல் இந்த கேள்வித்தாளுக்கு மாற்று கேள்வித்தாள் வைத்துள்ளீர் களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், மாற்று கேள்வித்தாள் உள்ளது என இருவரும் பதிலளித்தனர்.பின்னர், பொதுவாக ஒரு கேள்வித்தாள் அச்சடிக்க எவ்வளவு நாள் ஆகும். தேர்வு தாளை திருத்துவதற்கு எவ்வளவு நாளாகும் என நீதிபதி கேட்டார். அதற்கு கேள்வித்தாள் அச்சடிக்க நான்கு வாரமும், திருத்துவதற்கு 3 வாரமும் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்படியெனில், ஏற்கனவே கூறியபடி 150 கேள்விகளில் 40 கேள்விகளை நீக்கி, 110 மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக கருத, கம்ப்யூட்டரில் மாற்றம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் புதிய கேள்வித்தாளை தயாரித்து விட முடியும்.மாணவர்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என கோர்ட் நினைக்கிறது. ஏற்கனவே, ஹால்டிக்கெட் வழங்கியிருப்பீர்கள், கிடைக்காதவர்களுக்கு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும். கேள்வித்தாள் மட்டுமே தயாரிக்க வேண்டும். இது தொடர்பாக அரசிடம் மீண்டும் கேட்டு, மாற்றுத்தேர்வு நடத்தலாமா என்பது குறித்து கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். அடுத்த விசாரணை நடத்துவது தொடர்பாக செப். 30க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

  3. Re exam vacha total result after November than varuma ????????????????any news please

  4. Re exam vacha total result after November than varuma ????????????????any news please

  5. Hai i have idea about file case for these question median,mode,trans,kilojule and speciation.any body give suggestion

  6. what about the other subject result?

  7. கொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது-தமிழக அரசுஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில்தெரிவித்துள்ளது.வழக்குரைஞர் பழனிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும். இது தொடர்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிக்கையில், ஏற்கனவே மாநில அரசுகள் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்று தெரிவித்துள்ளது.ஆதலால் தமிழக அரசு இந்த முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால் நீதிபதி சத்திய நாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு தாக்கல் செய்தார்.அதில், ஆசிரியர் தகுதி தேர்வில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இந்த தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதி தேர்வில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றால்தான் வேலை வாய்ப்பு என்ற கொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது. எனவே இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதி தேர்வில் மதிப்பெண் வழங்க தேவையில்லை" என்று கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து வழக்கு விசாரணையை அக்டோர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  8. Govt wants to recruit the post in seniority with TNTET eligibility candidates

  9. This comment has been removed by the author.

  10. This comment has been removed by the author.

  11. PG TAMIL HARDWORKERS APPEAL FOR FURTHER JUDGEMENT:Today (30.09.2013) Judgement for our PG TAMIL judgement at MADURAI HC.Whether the tn govt & trb finalised as re valuation by deleting 40 spelling mistaken (or anyother move as forming an special expert team to analyse & delete the no of tough qns that not to b understood) or nods at court as re exam as said by madurai hc.Judge says even if problm for B series 40 qns to b deleted, A C D series who scored marks in that 40 shall b affected. One thing we note that-re exam solution is already decided by madurai hc in all situations.(without forming any team for analysing the error qn or quering more affected B series different candidates or even quering the A C D series candidates) On other hand govt & trb stood on the same thing as re exam cant b conducted since students in schl get affected if tchrs appointed late.As said already in last hearing, if trb says the govt voice as no chance for re exam-it wil not affect the hardworkers of A C D & also B series candidates. (Only lower mark scorers of all series struggling & expecting re exam).If the judge turns hard & give judgement as re exam should b conducted, we the higher scorers of all series wil appeal to Chennai HC for better judgement even if trb nods to that judgement since our sweat & hardwork goes vain.One thing keep in mind that, madurai hc doesnt wants the solution for the error problem. Just the court stayed. Framing a good expert team by court or govt & analysing the higher error qns (hardly 15 qns-others  r very easy to find. Just an one letter changed which wil b easily understandable if few qns with same error read) and deleting that 15 ton12 qns wil b the better sol. (Note that last yr the same judge deleted 19 qns for PG BOT & evaluated only 131 qns out of 150.)So the harworkers of all series be aware of the tom decision by govt, trb & court.Note that none of the B series candidates throughout tamilnadu didnt get arised after writing pg tam trb outside the exam hall or on the same week. Even the writ was not filed to cancel the exam & ask to conduct re exam on the next week of examination held-21.07.2013.  Even the candidates more than 30 lost their mobile phones at one pg trb exam centre gathered when they came out of exam hall published in flash news.  Why this was not done by single B series candidates after exam? They all waited till publishing the tentative key for grace marks without facing re exam. Since they knew trb wont give grace marks they filed writ. From july 21, asking re exam within 2 months within sep 21 shall b wise.So, dear hardworkers, we shall appeal for further judgement. We have the right to fight for our rights.

  12. If u are hard worker and well knowledge person ,Don't afraid for re exam….because hard worker will definitely get high score again by minimizing their error in previous exam. Best of luck…

  13. I heard that in Dharmapuri district coaching for TET,TRB, TNPSC is best.kindly provide best centre or person who Give best coaching for pg tamil in dharmapuri dist( I HAVE SCORED 107 in previous exam ).thanks

  14. This comment has been removed by the author.

  15. Get ready for re-exam instead of appeal.

  16. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-Iஐ, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார்2 லட்சத்து 68 ஆயிரம்பேர் எழுதினர்.அதேபோல், 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பணிபுரியக்கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-IIஐ கடந்த 18ம் தேதி சுமார் 4 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், இரண்டு தேர்வுக்களுக்குமான ‘கீ ஆன்சரை’ கடந்தமாதம் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால், டி.ஆர்.பி. வெளியிட்ட ‘கீ ஆன்சரில்’ ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் வருவதாகவும், சில கேள்விகளில் குளறுபடிகள்இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் ஆதாரத்துடன் புகார்களை தெரிவித்திருந்தனர்.இந்தச் சூழலில் புதிய கீ ஆன்சரையும், தேர்வு முடிவையும் டி.ஆர்.பி. எப்போது வெளியிடும் என்றும், புதிய கீ ஆன்சர் வெளியிடும்போது, தவறான கேள்விகளுக்கு கூடுதல் மார்க் வழங்கப்படுமா என்றும் தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு குறித்து டி.ஆர்.பி. அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள் அனைத்தும் திருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், புதிய கீ ஆன்சர் பற்றிய வெளியீடும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது.ஆனால், தகுதித் தேர்வு முடிவு வெளியிடுவது தாமதமாவதற்கு முக்கியமான காரணம், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தமிழ்ப் பாடத்தில் 40 கேள்விகள் தவறானது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளதுதான். இந்தவழக்கு தொடர்பாக அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் டி.ஆர்.பி. தெரிவித்துவிட்டது. இந்த வழக்கின் முடிவு இந்த மாதம் 30ம் தேதி தெரிந்துவிடும். அந்த முடிவு வந்தவுடன், அக்டோபர் முதல்வாரத்தில், தயார் நிலையில் உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவும் இறுதி கீ ஆன்சரும் ஒரேநாளில் வெளியிடப்படும்’’ என்றார்.

  17. Today above news confirms that-only becos of pg tam, tet result get delayed.so, govt hav no idea to conduct re exam. Today govt wil produce the same reply as deleting 40 qns or only harder 15 qns to b finalised by expert team & almost the judgement wil b without re exam & sòme warning to trb to produce qns without mistakes in future. We wil wait. So, we pg tam candidates wait for the good end.Only the top scorers in all pg tam A B C D series of all community + general wil fill more than 450 seats out of 605. So neglecting their hardwork & conducting re exam is an injustice. Govt & trb strictly stood by not conducting re exam. Even if today the court forces the same, the govt/trb wil appeal to chennai high court to cancel the stay.Even if the stay cancelled, result shall b published in quick as already said as by sep 30 or by oct 1st wk.Thanks to tamilnadu govt & trb for not publishing other subject pg results & even tet result by withheld pg tam. The above news is not to the awaiting candidates. Its the news to madurai hc to show govt idea.

  18. TRB PG MADURAI BENCH TODAYS (30.09.2013) ARGUMENT IN DETAILPLEASE VISIT http://www.thamaraithamil.blogspot.in

  19. Dear friendsTRB PG MADURAI BENCH TODAYS (30.09.2013) ARGUMENT IN DETAILPLEASE VISIT http://www.thamaraithamil.blogspot.in

  20. Todays conversation in Madurai HC reg PG Tamil writ:முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன.இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள்உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை புதூர் விஜயலட்சுமி எனும் மனுதாரரால் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை செப். 25ம்தேதி விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,இவ் வழக்கில் அளிக்கப்படும் உத்தரவு, தேர்வு எழுதியவர்களில் ஒரு நபருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறி மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (செப்.30) ஒத்தி வைக்கப்பட்டதுஇவ்வழக்கு திங்கள்கிழமை 30தேதி காலையிலேயே 10 வது வழக்காக விசாரணை செய்யப்பட்டது.இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார் . பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு பெற்ற மதிப்பெண்களை 150 க்கு கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை பரிசீலிக்கும்படி வாதிட்டார். அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்ட விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்துவழக்கு மீண்டும் ஒத்திவைத்தார்.நாளை (அக் 1)இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என மனுதாரரின் வழக்கறிஞர் லூயிஸ் தெரிவித்தார்.thanks to: http://www.thamaraithamil.blogspot.in/

  21. So, govt shows stubborn that we have no idea of conducting re exam as per today's conversation at madurai hc. All r waiting for tom oct 1st judgement.1000% there is no chance for re exam.

  22. Any body know today judgement?comment plzzzzz……..

  23. anybody know pg physics first mark in sai coaching pls reply me.

  24. This comment has been removed by the author.

  25. 112,what about ur mark?where are u from?

  26. Give ur no i want to speak with you.9791526060.this is my number contact me

  27. இவ்வழக்கு நேற்று திங்கள்கிழமை 30தேதி விசாரணை செய்யப்பட்டது. வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார் . பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு பெற்ற மதிப்பெண்களை 150 க்கு கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை பரிசீலிக்கும்படி வாதிட்டார். அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்ட விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்துவழக்கு மீண்டும் ஒத்திவைத்தார். இதன் இறுதி உத்தரவு ( அக் 1) பிறப்பிக்கப்படும் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.தீர்ப்பின் முழுவிவரம் மாலையில்தான் தெரியவரும் .மாலைக்குள் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா, இல்லையா என்பது தெரியவரும்.முதுகலை ஆசிரியர் நியமனத் தேர்வு எழுதியுள்ள அனைத்து பட்டதாரிகளும் நீதிமன்றத்தின் உத்தரவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்

  28. reexam for Tamil…

  29. Yes. It takes another 1 month for publishing results, doesn't it?

  30. Elakkiya, you need not bother about anything. You scored 97. You are selected. Don't worry.

  31. Judgement order for re exam to PG TRB TAMILDETAIL http://www.thamaraithamil.blogspot.in

  32. I don't have hope…lets c ramesh.

  33. Please send me message to my handset number. I will tell you

  34. Hai all Tamil candidate don't loose your confident. Wait our tn govt and trb will take good decision. Don't worry

  35. Court has taken a good decision. TRB and Government helpless. Work hard for re-exam.

Leave a comment