கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தகுதி தேர்வு நடத்தி நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தகுதி தேர்வு நடத்தி நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் எல்காட் நிறுவனம் நிரப்பியது. இந்த நிலையில், 2006–ம் ஆண்டு 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அதேநேரம் ஏற்கனவே பணியில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிறப்பு தேர்வில் ஏற்கனவே ஆசிரியராக உள்ளவர்கள் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், 2008–ம் ஆண்டு நடந்த சிறப்பு தகுதி தேர்வில் 894 கம்ப்யூட்டர் ஆசிரியர்களும், 2010–ம் ஆண்டு நடந்த தேர்வில் 125 ஆசிரியர்களும், 2012–ம் ஆண்டு நடந்த தேர்வில் 15 ஆசிரியர்களும் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு உத்தரவினை பிறப்பித்தார். அதில், ‘தகுதி தேர்வு மூலம் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வரை, ஏற்கனவே பணியில் உள்ளவர்களை தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பலர் அப்பீல் செய்தனர்.
இந்த அப்பீல் வழக்குகளை நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
ஏற்கனவே பணியில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பணிநீக்கம் செய்து அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது.
இரண்டு முறை நடத்தப்பட்ட சிறப்பு தேர்வுகளில் தோல்வியடைந்த பின்னர், தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று கோருவதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் தற்காலிகமாகக் கூட பணியில் தொடரகூடாது.
அதேநேரம் ஏற்கனவே பணியில் இருந்து சிறப்பு தேர்வில் தோல்வியடைந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் பெயர்களை மீண்டும் வேலைவாய்ப்பு பதிவுவேட்டில் பதிவு செய்யவேண்டும். அப்போது, அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பதிவுமூப்பை வழங்கவேண்டும்.
அதேபோல, அரசு எடுத்துள்ள கொள்கை முடிவின் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை தேர்வு செய்யலாம். அந்த தேர்வில், ஏற்கனவே ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் கலந்து கொள்ளலாம். அப்போது வயது உச்சவரம்பை தளர்த்த வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அந்த விண்ணப்பத்தை தகுதி அடிப்படையில் அரசு பரிசீலிக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.
Advertisements

11 responses

 1. as per spl exam without eligible com.trs worked past 3 yrs .that time govt policy seniority .that trs worked and got more salary.but now asked other job for govt.otherwise previous govt policy based 652 seniority trs life is foiled.so as per spl test based govt follow & Appointed 652 trs on seniority based.other remaining post filled on current policy.next our educational rule tell computer subject is vocational subject.vocational trs selection is only seniority.general subjects trs only selected test method. so when computer sub changed on general group.god only knows.this problems know high court judges.so many edu officials are blocked some edl rules and change him as per convenient.

 2. K.ITS GOOD .PLS PUBLISH THE SYLLABUS ALSO.

 3. இந்த முறையாவது நீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசு இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும்…

 4. கம்ப்யூட்டர் பாடம் இப்பொழுதும் தொழில் கல்வி பாடமாகத்தான் இருக்கிறது. இதற்குத் பிஎட் தேவையே இல்லை. ஆனால் எப்படியோ பிஎட் தேவை என்று தீர்ப்பும் வாங்கியாகிவிட்டது. இனி வேறு வழி இல்லை.
  ஆனால் உங்களை நினைத்தால் எனக்கு சிரிப்பாய் வருகிறது. 652 பணியிடங்கள் முந்தய அரசால் நிரப்பப்பட்டது, அப்போது சீனியாரிட்டி முறை பின்பற்றப்பட்டது எனவே இப்போதும் அதையே பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறீர்கள். இது போல மற்ற பாட இடங்களும் முன்பு சீனியாரிட்டி முறைதான் பின்பற்றப்பட்டது, எனவே அந்த இடங்கள் காலியானால் சீனியாரிட்டிதான் பின்பற்ற வேண்டும் என்று கூறுவீர்கள் போல.
  கட்டாய கல்விச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு ஒன்று டிஆர்பி அல்லது டிஇடி ஒன்றை சந்தித்தே ஆக வேண்டும். இது கட்டாயம் நடைமுறைபடுத்தித்தான் ஆகவேண்டும்.
  மேலும் ஒரு முக்கிய அம்சம் பணிநீக்கம் செய்யப் பட்ட 652 ஆசிரியர்கள் டிஆர்பி தேர்வை எதிர்கொண்டு 35 முதல் 49 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். அவர்கள் யாரும் சீனியாரிட்டி முறையில் வந்தவர்கள் இல்லை. டிஆர்பி தகுதி மதிப்பெண்ணை 35 சதவீதமாக மாற்றிதால் தேர்வு பெற்றவர்கள்.
  இதே மாதிரி சத்துணவு அமைப்பாளர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பல பேர் டிஆர்பி தேர்வு எழுதி பணியாற்றி வருகிறார்கள் அவர்களும் 50 சதவீத மதிப்பெண்கள் பெறமுடியாமல் 35 சதவீத மதிப்பெண் பெற்றவர்களும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.

 5. exam pattern will be only computer subject…or it will be like tet

 6. pls model question paper give me

 7. When the Govt will announce the exam for Computer teacher posting? Pls inform us the syllabus and the pattern of questions. Thank you very much Kalvisolai. Many people get useful news from this site. Keep it up. Thank U very much.

 8. இது நடந்த நல்ல இருக்கும்……கடவுளுக்குதான் வெளுச்சம்………..

 9. As per the court order the government has been requested to fill 652 post and the rest which has been vacant in the schools ,how they conduct, through seniority means till which year they already conducted the exam and what should be the qualification ,UG with b.ed or PG with.bed and please send me the previous exam question paper and syllabus
  MY GRATEFUL THANKS TO THIS WEBSITE FOR GIVING MORE INFORMATION

 10. thaks kalvisolai…its useful news to all non working computer teachers

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: