மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, நுகர்வோர் விலை குறியீட்டை அடிப்படையாக வைத்து, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். கடந்த, ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிட்டது.இது, ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தை கணக்கிட்டு வழங்கப்படும். இதன்படி, அடிப்படை சம்பளத்தில், 72 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை, ஜனவரி 1ம் தேதி முதல் 8 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால், 80 சதவீதத்தை எட்டியது.இந்நிலையில், ஜூலை மாதத்திலிருந்து அகவிலைப்படியை, 10 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களை கவரும் வகையில், இந்த இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 2010ல், 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, தற்போது தான், இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது.இந்த அறிவிப்பால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயன் அடைவர். இந்த உயர்வின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும், 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.அகவிலைப்படி, 90 சதவீதத்தை எட்டுவதால், அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அகவிலைப்படி, 50 சதவீதத்தை தாண்டும்போது, அவற்றை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் நடைமுறை உள்ளது. எனவே இதற்கான அறிவிப்பை, ஊழியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வை அடிப்படையாக வைத்து, தமிழக அரசும், தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தும் அறிவிப்பை வெளியிடும்.

One response

  1. GOOOD NEWS FOR ALL CENTRAL GOVERNMENT STAFFS……….. THANK U……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: