எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் 23–ந்தேதி வரை www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் முதல் முதலாக நாளை முதல் வழங்கப்படுகிறது.  இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
செப்டம்பர் மாத பிளஸ்–2 தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு வருகிற 23–ந்தேதி தொடங்குகிறது.
இந்த தேர்வுகளை எழுத உள்ள தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டினை (ஹால்டிக்கெட்) இன்று (வியாழக்கிழமை) முதல் தேர்வு தொடங்கும் 23–ந்தேதி வரை http://www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ‘‘HIGHER SECONDARY / EXAMINATION, SEPTEMPER / OCTOBER 2013 HALL TICKET PRINT OUT ’’ என்ற வாசகத்தினை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்ததேதியை பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதி சீட்டு திரையில் தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக்கூட அனுமதி சீட்டில் புகைப்படம் முற்றிலும் பதிவாகாத அல்லது மிகவும் சிறிதாக பதிவாகி உள்ள தனித்தேர்வர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பத்தையும் எடுத்துக்கொண்டு, உடனடியாக அருகில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவேண்டும்.
எழுத்து தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத்தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி பெறாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத்தேர்வை மீண்டும் செய்யவேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர்கள் எழுத்துதேர்வுக்கும் வரவேண்டும். அதிக பட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறை தேர்வுக்கு வருகை தரவேண்டும்.
சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்) ஆன்லைனில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 21 மற்றும் 22 தேதிகளில் ஆன்லைனில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக்கூட அனுமதி சீட்டு தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.  இவ்வாறு கு.தேவராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: