SSLC , PLUS TWO SUPPLEMENTARY EXAM TIME TABLE DOWNLOAD | SSLC , PLUS TWO பொதுத் தேர்வு செப்டம்பர் / அக்டோபர் 2013 கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .

பிளஸ் 2 தனித்தேர்வுக்காக இணையதளம் மூலம் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தனித்தேர்வு நடைபெறும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வில் 10 ஆம் வகுப்பில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேரும், பிளஸ் 2 தேர்வில் 95 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 5 வரையிலும், பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 1 வரையிலும் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை:
(காலை 10 மணி முதல் 12.45 வரை)
செப்டம்பர் 23 – திங்கள்கிமை – மொழிப்பாடம் முதல் தாள்
செப்டம்பர் 24 – செவ்வாய்க்கிழமை – மொழிப்பாடம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 25 – புதன்கிழமை – ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 26 – வியாழக்கிழமை – ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 27 – வெள்ளிக்கிழமை – கணிதம்
செப்டம்பர் 30 – திங்கள்கிழமை – அறிவியல்
அக்டோபர் 1 – செவ்வாய்க்கிழமை – சமூக அறிவியல்
பிளஸ் 2 தனித்தேர்வு அட்டவணை:
செப்டம்பர் 23 – திங்கள்கிழமை – மொழிப்பாடம் முதல் தாள்
செப்டம்பர் 24 – செவ்வாய்க்கிழமை – மொழிப்பாடம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 25 – புதன்கிழமை – ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 26 – வியாழக்கிழமை – ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 27 – வெள்ளிக்கிழமை – இயற்பியல், பொருளாதாரம்
செப்டம்பர் 28 – சனிக்கிழமை – கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்
செப்டம்பர் 30 – திங்கள்கிழமை – வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
அக்டோபர் 1 – செவ்வாய்க்கிழமை – வேதியியல், கணக்குப் பதிவியல்
அக்டோபர் 3 – வியாழக்கிழமை – உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
அக்டோபர் 4 – வெள்ளிக்கிழமை – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, தமிழ் (அட்வான்ஸ்டு லாங்குவேஜ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்)
அக்டோபர் 5 – சனிக்கிழமை – தொழில் பிரிவு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு, பொலிட்டிகல் சயின்ஸ், நர்சிங், புள்ளியியல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: