370 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது | சென்னையில் சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி.மேல்நிலைப்பள்ளி கலையரங்க வளாகத்தில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைசச்ர் வைகைச்செல்வன் தலைமையில் நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருது, பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.10 ஆயிரத்திற்கான பணமுடிப்பு உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம்:

உளுந்தூர்பட்டை சாரதா வித்யாலயா மேல் நிலைப் பள்ளி முதல்வர் யத்தீஸ்வரி ஆத்மவிகாஸா பிரியம்மா, விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளி இடை நிலை ஆசிரியர் அன்பு சேதுபாண்டியன், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குனர் அரங்க வேல்முருகன், கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் சதாசிவம், திருக்கோவிலூர் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன், திண்டிவனம் குஷால்சந்த் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அப்பாண்ட்ராஜ் ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. சங்கராபுரம் டேனிஷ் மிஷின் நிதி உதவி பெறும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம்ராஜ், காணை ஒன்றியம் மாம்பழப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் மார்ட்டீன், கோலியனூர் ஒன்றியம் சாலையாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை அனுசுயா தேவி, மேலமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன், செஞ்சி தாலுகாவைச் சேர்ந்த சத்தியமங்கலம் ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி மற்றும் முணலாபாடி ஆர்.சி.நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி சாமி ஆகியோர் நல்லாசிரியர் விருது பெறுகின்றனர்.

விருதுநகர் மாவட்டம்:

சித்ரா(முதல்வர்)-சிவகாசி கே.சி.ஏ.டி தர்மராஜ் நாடார்-தாயம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூ.ஆஞ்சலோ தெக்லாமேரி(உதவி ஆசிரியை)- செவல்பட்டி, அமலா தொடக்கப்பள்ளி, ம.ஜெயபால்(தலைமை ஆசிரியர்)-சிவகாசி மேற்கு ஏவிடி நகராட்சி தொடக்கப்பள்ளி, ரா.நாடியம்மாள்(தலைமை ஆசிரியை)- அலமேலுமங்கைபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இரா.ராமசாமி(தலைமை ஆசிரியர்)-தூங்கரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜெ.ஆனந்தராஜா(தலைமை ஆசிரியர்)-வீரசோழன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மா.பொன்னுச்சாமி(தலைமை ஆசிரியர்)-செங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பா.கிரேஸ்(தலைமை ஆசிரியை)-கடமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அ.கமலாராணி(தலைமை ஆசிரியை)-டி.செட்டிக்குளம்,விருதுநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சு.செல்வின்ஜெயக்குமார்(தலைமை ஆசிரியை)-தெற்குவெங்காநல்லூர், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மு.வரதராஜபாண்டியன்(தலைமை ஆசிரியர்)-கூமாபட்டி அரசுமேல்நிலைப்பள்ளி, பொ.சாந்தகுமாரி(தலைமை ஆசிரியை)-சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி, சி.ஜமுனாராணி(தலைமை ஆசிரியர்)-விருதுநகர் ஹவ்வாபீவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெ.வரதராஜாபெருமாள்(முதுகலை ஆசிரியர்)-விருதுநகர் ஹாஜிபி மேல்நிலைப்பள்ளி, டேவிட்ஞானசேகரன்(உடற்கல்வி ஆசிரியர்)-ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளி, வையனன்(உடற்கல்வி ஆசிரியர்) ராமநாயக்கன்பட்டி ஆர்.வி.கே உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 6 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1 மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர், 3 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 2 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2 உடற்கல்வி ஆசிரியர்கள், 1 உதவி ஆசிரியை என மொத்தம் 16 பேருக்கு நல்லாசிரியர் விருது பள்ளிக் கல்வி துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: