டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 கீ ஆன்சர் இணைய தளத்தில் 26.8.13 திங்கள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை எழுத்தர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரைவாளர், வரித் தண்டலர் உள்ளிட்ட பதவிகளில் 5566 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு மூலம் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆட்களை தேர்வு செய்கிறது.
இந்த தேர்வு எழுத கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. என்பதால் 14 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் பெருமளவில் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
மாநிலம் முழுவதும் குரூப் 4 தேர்வு 25.8.2013 காலை 10 மணிக்கு தொடங்கியது. இதற்காக 4 ஆயிரத்து 755 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
தேர்வை 70,230 கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர். இது தவிர 950 பறக்கும் படையும் அமைக்கப்பட்டு இருந்தது.
இவர்கள் தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர், ஆர்.டி.ஓ. தாசில்தார் தலைமையில் கண்காணிப்பு அதிகாரிகள் தேர்வு மையங்களை சோதனையிட்டனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தவறு நடக்கும் அபாயம் நிறைந்த தொலை தூர தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவது வெப்– காமிரா மூலம் ஆன்– லைனில் கண்காணித்தனர். சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் மற்றும் அந்த அந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை களில் இருந்து கண்காணித்தனர்.
மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. ஒரு கேள்விக்கு 1 1/2 மார்க் வீதம் 300 மார்குக்கு தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்றால் வேலை உறுதி. காரணம் நேர்முக தேர்வு கிடையாது.
‘கீ ஆன்சர்’ இன்னும் ஓரிரு நாளில் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் வெளியிடப்படும். தேர்வு அட்டவணைப்படி செப்டம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியிடப்பட வேண்டும். தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தேர்வு முடிவு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

3 responses

  1. K thank for your information………..

  2. thanks kalvisolai 4 information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: