ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில் எந்தவித தவறும் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அந்தப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவது உறுதிசெய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள் ஸ்கேனிங் மற்றும் மதிப்பீடு ஆகியவை சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகள் எந்த நேரமும் இந்தப் பணிகளை நேரடியாக ஆன்-லைன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் சென்னையிலுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை கொண்டுவரப்பட்டன. இதையடுத்து, விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஓரிரு நாளில் தொடங்கப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில் எந்தவித தவறும் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அந்தப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவது உறுதிசெய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவு: விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் மூன்று வாரங்கள் நடைபெற உள்ளன. முக்கிய விடைகள் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்படும்.
அதன்பிறகு, இறுதி செய்யப்பட்ட முக்கிய விடைகளும் தேர்வு முடிவுகளும் செப்டம்பர் இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உதவிப் பேராசிரியர் நியமனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வுக்கான பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும் எனத் தெரிகிறது.
ஆசிரியர் நியமனம் மிகவும் நேர்மையான முறையில், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நடைபெற்று வருகிறது. எனவே முறைகேடான முறைகளில் இந்த நியமனத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்குவதாகவும், மதிப்பெண்ணில் மாற்றம் செய்வதாகவும் கூறி மோசடி நபர்கள் தமிழகம் முழுவதும் தேர்வர்களிடம் பணம் பறித்து வருகின்றனர். இவர்கள் தருமபுரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் தேர்வர்களை ஏமாற்றியுள்ளதாகத் தெரிகிறது. போலி வினாத்தாள் மோசடி தொடர்பாக தருமபுரியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 33 ஆயிரத்து 351 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைத்து நியமனங்களும் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெற்று வருவதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: