முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, "கீ-ஆன்சர்’, வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என தெரிகிறது.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, “கீ-ஆன்சர்’, வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதியுள்ளனர். இதற்கான, தற்காலிக, “கீ-ஆன்சர்’, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேள்வி மற்றும் விடைகள் குறித்து, 1,000 தேர்வர்கள், மாற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தேர்வர்களின் கருத்துக்களை, பாட வாரியான நிபுணர் குழு, ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங் கள் கூறுகையில், “விடை தவறாக இருந்தால், அதற்குரிய மதிப்பெண், தேர்வர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக, சம்பந்தபட்ட கேள்வி, தேர்வில் இருந்து நீக்கப்படும். சரியான கேள்வி, பதில்களுக்கு மட்டும், மதிப்பெண்கள் வழங்கப் பட்டு, 20ம் தேதிக்குள், இறுதி, “கீ-ஆன்சர்’ வெளியிடப்படும்,’ என, தெரிவித்தன. ஒவ்வொரு கேள்விக்கும், 1 மதிப்பெண் வீதம், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், 10 முதல், 15 கேள்விகளோ அல்லது அதற்கான பதில்களோ தவறாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது எனவே, 150 மதிப்பெண்களில், 15 மதிப்பெண்கள் வரை நீக்கப்பட்டு, மீதமுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
Advertisements

3 responses

  1. நன்றி.விரைவில் தேர்வுமுடிவுகளையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

  2. 20-ம் தேதியும் வந்துவிட்டது.இறுவிடைகளைத்ததான் காணவில்லை.1.5 இலட்சம் ஆசிரியர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள்.

  3. when the final key will be released? we expect the key as soon possible.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: