3,500 காலி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது

100 உதவி வணிக வரி அதிகாரி, 48 சார்–பதிவாளர், 1,000–க்கும் மேற்பட்ட வருவாய் உதவியாளர் பதவிகள் உள்பட 3,500 காலி பணி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும்.
நகராட்சி கமிஷனர் (கிரேடு–2) தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி (ஏ.எஸ்.ஓ.), சார்–பதிவாளர், உதவி வணிக வரி அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், பேரூராட்சி நிர்வாக அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு தணிக்கை அதிகாரி, உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, வருவாய் உதவியாளர், ஊராட்சி உதவியாளர் உள்பட பல்வேறு விதமான பதவிகளை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வு நடத்தப்படுகிறது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் குருப்–2 தேர்வு எழுதலாம். பொதுப்பிரிவினருக்கு மட்டும் வயது வரம்பு 30 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து வகுப்பினருக்கும் விதவைகளுக்கும் (பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்பட) எவ்வித வயது வரம்பும் கிடையாது. குறிப்பிட்ட சில பதவிகளுக்கும் மட்டும் அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு 3,631 காலி இடங்களை நிரப்ப குரூப்–2 தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஏறத்தாழ 3,500 காலி இடங்களை நிரப்புவதற்காக விரைவில் குரூப்–2 தேர்வு நடத்தப்பட உள்ளது. காலி இடங்களில், 100 உதவி வணிகவரி அதிகாரி, 48 சார்–பதிவாளர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய் உதவியாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளும் அடங்கும். மேலும், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, நகராட்சி கமிஷனர் போன்ற பதவிகளும் கணிசமான எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன. குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி. அடுத்த ஓரிரு நாளில் வெளியிட உள்ளது. பொதுவாக அறிவிப்பு வெளியிட்டு தேர்வு எழுத 2 மாதங்கள் காலஅவகாசம் கொடுக்கப்படும். அதன்படி, எழுத்துத்தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்படக்கூடும்.
நேர்முகத்தேர்வு கொண்ட பணிகளுக்கு கூடுதலாக மெயின் தேர்வு நடத்தப்படும் என்று அண்மையில் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. முதல்கட்ட தேர்வு அதன்பிறகு மெயின் தேர்வு நடத்தி அதைத் தொடர்ந்து நேர்முக தேர்வு நடத்தினால் காலதாமதம் ஆகும். எனவே, முன்பு இருந்துவந்ததை போல மெயின் தேர்வு இல்லாமல் ஒரே தேர்வு மூலம் மட்டுமே அனைத்து விதமான பதவிகளையும் நிரப்பிவிடலாமா? என்றும் டி.என்.பி.எஸ்.சி. பரிசீலனை செய்து வருகிறது.
Advertisements

One response

  1. Respected sir,
    Pls reduce the problem of give money and get job from this problem dont get chance to intelligents and without money peoples what will do……………..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: