பள்ளிக்கல்வி இயக்குநராக திரு ராமேஸ்வர முருகன் பதவியேற்றார்.

பள்ளிக்கல்வி அமைச்சரின் கீழ், பல்வேறு துறைகள் இயங்கினாலும், தலைமைத் துறையாக, பள்ளிக் கல்வித் துறை விளங்குகிறது. நேற்று முன்தினம், ஏழு இயக்குனர்கள் மாற்றப்பட்டபோது, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜனும் மாற்றப்பட்டு, தேர்வுத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். பள்ளிக் கல்வித் துறையின், புதிய இயக்குனராக, ராமேஸ்வர முருகன் நியமிக்கப்பட்டார். இவர், நேற்று, புதிய பதவியை ஏற்றுக்கொண்டார். இவர், ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வெள்ளான் கோவிலைச் சேர்ந்தவர். எம்.எஸ்சி., – பி.எட்., – பிஎச்.டி., ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். கடந்த, 1995, செப்டம்பரில், நேரடி நியமனம் மூலம், மாவட்ட கல்வி அலுவலராக பணியில் சேர்ந்து, படிப்படியாக, பதவி உயர்வு பெற்று, சி.இ.ஓ., – இணை இயக்குனர் ஆகிய நிலைகளில், பல்வேறு துறைகளில் பணியாற்றி, கடந்த ஆண்டு, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, தொடக்க கல்வித் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். வழக்கமாக, பணி ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அதிகாரிகள் தான், பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்படுவர். ஆனால், முதல் முறையாக, இவர், 42 வயதில், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை ஏற்றுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு, 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்திய போதும், கல்வித்தரம், தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயராதது, குறையாக உள்ளது. எனவே, கல்வித் தரத்தை உயர்த்துதல், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துதல், பொதுத் தேர்வு “ரேங்க்’ பட்டியலில், மாநில அளவில், அரசு பள்ளி மாணவர்களும், அதிகளவில் பங்கு பெற வைத்தல் ஆகிய, மூன்று இலக்குகளையும் எட்ட வேண்டிய பொறுப்பு, புதிய இயக்குனரிடம் உள்ளது.

One response

  1. Welcome Respected Director Sir!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: