652 கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த நிலையில், புதிதாக 2,000 கணினி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

“டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப, 2,000 கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த கணினி ஆசிரியர்களில், 652 பேரை, பள்ளிக் கல்வித் துறை, “டிஸ்மிஸ்’ செய்தது. மாணவர் நலன் கருதி, புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் வரை, பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் கோரிக்கையையும், சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. 652 பேரையும், உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டதால், அனைவரையும் உடனடியாக, “டிஸ்மிஸ்’ செய்து, கல்வித் துறை உத்தரவிட்டது. இதனால், மாணவர்களுக்கு, கணினி பாடம் எடுக்க, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மாற்று ஏற்பாடு குறித்து, ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது. புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 652 பணியிடங்களை நிரப்பவும், கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், 2,000 கணினி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், “அரசு உத்தரவிட்டால், கணினி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய தயாராக உள்ளோம்; இதுவரை, உத்தரவு வரவில்லை’ என, தெரிவித்தன.

6 responses

  1. Pls,conceder BEd computer science teacher life and give releaf from private school machine life………..

  2. pls sir quick paste process. am M.Sc.,B.Ed.,computer science teacher…

  3. B.Ed., computer science TET exam apply pannalama sir.

  4. Is TET there for B.Ed computer science students? sir please kindly reply.

  5. dont worry guys one day we r all happy journey

  6. if anything about computerscience pls mail me vrrajan.rajan@gmail.com by your well wishers

Leave a Reply to Nirmal Kumar Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: