முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு | ஒரு வாரத்திற்குள் "கீ-ஆன்சர்’ வெளியீடு | 20 நாட்களுக்குள் தேர்வு முடிவு | பல்வேறு எழுத்துப் பிழைகளுடன் இருந்த வணிகவியல் மற்றும் தமிழ்க்கேள்வித்தாளால் தேர்வர்கள் பாதிக்காத வகையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரித்துள்ளது.

“முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் மற்றும் வணிகவியல் பாட கேள்வித்தாளில் ஏற்பட்ட பிரச்னையால், தேர்வர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். “கீ-ஆன்சர்’ வெளியிடுவதற்கு முன், கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழைகள் குறித்து, பாட வல்லுனர்களின் ஆலோசனையை பெற்று, உரிய முடிவு எடுக்கப்படும்’ என, டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நேற்று முன்தினம், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதில், தமிழ்ப் பாட தேர்வர்களுக்கு தரப்பட்ட கேள்வித்தாளில், பல்வேறு கேள்விகளில், எழுத்துப் பிழைகள் இருந்தன. மேலும், வணிகவியல் பாட கேள்வித்தாளில், ஆங்கிலத்தில் இருந்து, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கேள்வியில், பிழை ஏற்பட்டது. இந்த இரு பிரச்னைகள் குறித்தும், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, உடனடியாக தெரிய வந்தது.
இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று கூறியதாவது: தமிழ்ப் பாடத்திற்கான கேள்வித்தாளில், எழுத்துப்பிழைகள் அதிகம் ஏற்பட்டிருப்பது உண்மை தான். அச்சக நிறுவனம், கேள்வித்தாளில், பிழை இருக்கிறதா என்பதை சரிபார்த்து, செயல்பட்டிருக்க வேண்டும். அச்சகங்களில், பாட வாரியாக, நிபுணர்கள் இருக்கின்றனர். அவர்கள், கேள்வியை படித்துப் பார்த்து, ஏதாவது பிழைகள் இருக்கிறதா என்று சரிபார்ப்பர். தமிழ்ப் பாடத்தில், சரிபார்ப்பு நடந்ததா என, தெரியவில்லை. இது குறித்து, விசாரிக்கப்படும். வணிகவியலில், ஒரே ஒரு கேள்வி, தமிழில், சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை. இந்த பிரச்னைகள் குறித்து, “கீ-ஆன்சர்’ வெளியிடுவதற்கு முன், பாட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, தேர்வர்கள் பாதிக்காத வகையில், உரிய முடிவு எடுக்கப்படும்.
ஒரு வாரத்திற்குள் “கீ-ஆன்சர்’ வெளியிடப்படும். அதன்பின், விடையில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், சம்பந்தப்பட்ட தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு கொண்டு வரலாம். அது குறித்தும், பாட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, முடிவை எடுப்போம். இதன்பிறகே, விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடக்கும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்டங்களில் இருந்து, சீலிடப்பட்ட விடைத்தாள் கட்டுகள், நேற்று, சென்னைக்கு, போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. விரைவில், விடைத்தாள்களை, “ஸ்கேன்’ செய்து, 20 நாட்களுக்குள், தேர்வு முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
Advertisements

10 responses

 1. Sir pg trb B serial tamil question booklet has many spelling mistakes.take suitable action.

 2. hai sir commerce question paper very easy but understanding pannamudiyala sir. iam first time apply for trb .

 3. very quckely send pannuga answer sir

 4. Sir, What about English Question paper. It has many spelling mistakes which has confused the canditates. And because of the my self & most of my friends spending the time in each questions more than what generally takes. pls highlight this issue too. & let us waiting for the same.

 5. pg mudichi exam ezutha varavanga spelling mistake puriyalanu sonna eppadi neengalae thinarina neenga katru kodukka pora student nilamai

 6. Hi sir, today 28/7/2013 still the TRB2013 answer key is not published yet.முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு | ஒரு வாரத்திற்குள் “கீ-ஆன்சர்' வெளியீடு | 20 நாட்களுக்குள் தேர்வு முடிவு!

  And TNTET admit Card also not yet published !!!

 7. 150 questiens 3hrs. le exam ezhuthumpothu pg mattum illey athukkum mele padichavangalukkum., avvalavu yen? questien paper prepare panninavangalum thinara than seivanga sir.

 8. 28/07/2013
  Sir,
  P.G. Commerce TRB exam question booklet series ” D ” 135 th question Karl Pearson introduced the concept of Standard Deviation in the year of A) 1956 B) 1943 c) 1893 D) 1832 Sir answer is 1823 but is year is not given in the answer option. Please take this issue to the TRB sir.

 9. pg commerce Trb exam question booklet series B 45th question la answer koduka padala. all options are wrong. please take this issue to the trb sir

 10. TRB said within twenty days result will be announced.today 21 st day.result not yet announced!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: