எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களை அனுமதிக்க, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) வெளியிட்ட அறிவிப்பை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களை அனுமதிக்க, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) வெளியிட்ட அறிவிப்பை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.
பொது நுழைவுத் தேர்வு தொடர்பான இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பு அரசியல்சாசன சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
மூன்று நீதிபதிகள் அடங்கிய இந்த அமர்வில் 2 நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்புக் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் ஏற்கெனவே பொது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெற்ற மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை இந்த தீர்ப்பு எந்த வகையிலும் பாதிக்காது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த தீர்ப்பு மூலம், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மாணவர் சேர்க்கைக்கு தாங்களாகவே நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் அடிப்படையில் இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்பதால் பிற கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும், மாநிலத்தில் கடைப்பிடிக்கப்படும் இட ஒதுக்கீடு முறையில் பிரச்னை ஏற்படும் என்பதும் தமிழகம் எதிர்ப்புத் தெரிவிக்க முக்கியக் காரணமாக இருந்தது. தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ஏதுமின்றி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், விக்ரம்ஜீத் சென் ஆகியோர் தங்கள் தீர்ப்பில் மேலும் தெரிவித்திருப்பது: அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பான அவர்களின் அறிவிப்பு இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் 19,25,26,29 மற்றும் 30 ஆகியவற்றை மீறுவதாக உள்ளது என்றனர்.
இதே அமர்வில் இடம் பெற்ற நீதிபதி ஏ.ஆர்.தேவ், “தலைமை நீதிபதி கபீர், நீதிபதி தேவ் ஆகியோரின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. தேசிய அளவில் தகுதித் தேர்வு நடத்துவது என்பது சட்டப்படியானது, நடைமுறைக்கு சாத்தியமானது மற்றும் சமூகத்துக்குத் தேவையானது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வை நடத்துவதன் மூலம் பணத்தை நோக்கமாகக் கொண்டு கல்வித் துறையில் செயல்படுபவர்களை கட்டுப்படுத்த முடியும்’ என்று கூறியுள்ளார்.
எனினும் இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளில் இருவர், பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று கூறிவிட்டதால் அதுவே இறுதித் தீர்ப்பாக அமைந்தது.
முன்னதாக எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து மொத்தம் 115 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஏற்கெனவே நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட விதித்திருந்த தடையை கடந்த மே 13-ல் உச்ச நீதிமன்றம் நீக்கி, மாணவர் சேர்க்கையைத் தொடர உத்தரவிட்டது.
இந்திய மருத்துவக் கவுன்சில், இந்திய பல் மருத்துவக் கவுன்சில், மருத்துவப் பல்கலைக்கழகங்கள், மாநில அரசுகள் மற்றும் பிற மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தங்களுக்கான நுழைவுத் தேர்வை தனித்தனியாக நடத்திக் கொள்ளலாம். ஆனால் மறு அறிவிப்பு வரும் வரை முடிவுகளை வெளியிடக் கூடாது என்று 2012 டிசம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் இருந்த அனைத்து வழக்குகளும் கடந்த ஜனவரி 15-ல் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: