அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், யு.ஜி.சி. நிர்ணயித்த தகுதியின்படி பணியாற்றிய முந்தைய காலத்தையும் விண்ணப்பதாரரின் பணி அனுபவமாக கருத வேண்டும் என்று தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், யு.ஜி.சி. நிர்ணயித்த தகுதியின்படி பணியாற்றிய முந்தைய காலத்தையும் விண்ணப்பதாரரின் பணி அனுபவமாக கருத வேண்டும் என்று தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் ஏ.சந்திரசேகரன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: 1983–ம் ஆண்டு எம்.காம். பட்டம் பெற்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற தனியார் கல்லூரியில் 1986–ம் ஆண்டு விரிவுரையாளராக சேர்ந்தேன். 1990–ல் எம்.பில். படிப்பையும், 2011–ல் பி.எச்.டி. படிப்பையும் முடித்தேன்.  சமீபத்தில், அரசு கல்லூரிகளில் உள்ள உதவிப்பேராசிரியருக்கான ஆயிரத்து 93 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியையும் அதில் வாரியம் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில், பி.எச்.டி படித்தவருக்கு 9 மார்க், எம்.பில். படித்து ஸ்லெட் அல்லது நெட் பாஸ் செய்திருந்தால் 6 மார்க், முதுநிலை பட்டம் படித்து அதனோடு ஸ்லெட் அல்லது நெட் பாஸ் செய்திருந்தால் 5 மார்க், நேர்முக தேர்வில் 10 மார்க் என்று கூறப்பட்டு இருந்தது.
 முதுநிலைப் படிப்பில் 55 சதவீத மார்க் மற்றும் ஸ்லெட் அல்லது நெட் அல்லது பி.எச்.டி. என்ற தகுதி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் தொடர்பான அறிவிப்பில், ஏற்கனவே கல்லூரி ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருந்தால் ஒவ்வொரு ஆண்டுக்கும் 2 மார்க், வீதம் அதிகபட்சம் 15 மார்க் அளிப்பதாக கூறப்பட்டு இருந்தது.
பின்னர் அந்த அறிவிப்பு திருத்தப்பட்டு, 19.6.13 அன்று மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பி.எச்.டி. படிப்போ, எம்.பில். அல்லது முதுநிலைப் படிப்போ எதுவாக இருந்தாலும், அந்தக் கல்வியை முடித்து, அதன் பின்னர் கல்லூரி ஆசிரியராகச் சேர்ந்து இதுவரை பெற்றுள்ள ஆசிரியர் பணி அனுபவத்துக்கு மட்டுமே மார்க் தரப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.  இது என்னைப் போன்றவர்களை பாதிக்கும். நான் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்த நாளில் இருந்து எனது பணி அனுபவத்தை கணக்கில் கொண்டு மார்க் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ரவி ஆஜரானார். அவர், ‘‘மனுதாரர் பணியில் சேர்ந்த 1986ம் ஆண்டில், முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதே விரிவுரையாளர் பணிக்கான குறைந்தபட்ச தகுதி என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதுதான் அப்போதய பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி. )விதி.
யு.ஜி.சி. விதிமுறைகளின்படி விரிவுரையாளராகப் பணியாற்றி, சம்பளமும் பெற்றிருப்பதால், மனுதாரரின் பணி அனுபவத்தை அந்த ஆண்டிலிருந்தே கணக்கிட வேண்டும்’’ என்று வாதிட்டார். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வக்கீல் பி.சஞ்சய் காந்தி ஆஜரானார். அவர், ‘‘பி.எச்.டி. அல்லது எம்.பில். அல்லது முதுநிலைக் கல்வித் தகுதி பெற்றதற்கு பின்னர் கிடைத்துள்ள பணி அனுபவம்தான் கணக்கிடப்படும் என்ற திருத்தம் விலக்கிக் கொள்ளப்படுகிறது’’ என்று வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:யு.ஜி.சி. விதிமுறையின்படி பணியாற்றிய காலம் அனைத்தையுமே அவரின் பணி அனுபவமாக கருத வேண்டும். இதை எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில், எந்தெந்த காலகட்டத்தில் எந்தெந்த தகுதி யு.ஜி.சி.யால் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது என்பதை விளம்பரமாக வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: