டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் முதல்முறை: அரசு பணியில் 5,566 காலி பணி இடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள குரூப்–4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.

அரசு பணியில் 5,566 காலி பணி இடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள குரூப்–4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் 5,566 காலி பணி இடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று (நேற்று) கடைசி நாள். நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இன்று (நேற்று) மாலை 4 மணி நிலவரப்படி, 16 லட்சத்து 13 ஆயிரத்து 396 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் இருப்பதால் இன்னும் விண்ணப்பங்கள் வரக்கூடும். இதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25–ந்தேதி தமிழகம் முழுவதும் 240 மையங்களில் நடைபெற உள்ளது.
5,566 காலி இடங்களுக்கு 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருப்பதால் இந்த தேர்வில் கடும் போட்டி இருக்கும். குரூப்–4 தேர்வு, நேர்மையாகவும், முறையாகவும், தவறு இன்றியும் நடத்தப்படும் என்ற உறுதியை தேர்வர்களுக்கு அளிக்கிறோம். எனவே, யாரும் அச்சடப்படத் தேவையில்லை. சிபாரிசுக்காக யாரையும் அணுக வேண்டாம். கடுமையாக முயற்சி செய்து படித்தால் வெற்றிபெறலாம். முதல்–அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பெருமுயற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் அரசு பணியில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடு குரூப்–4 பணிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். பதற்றம் மற்றும் சட்ட ஒழுங்கு பாதிக்கும் அபாயம் உள்ள தேர்வு மையங்களில், தேர்வு பணி வீடியோவில் பதிவுசெய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.
குரூப்–1 முதல்நிலை தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு விரைவில் மெயின் தேர்வு நடத்தப்படும். குருப்–2 பணிகளுக்கு துறைவாரியாக காலி இடங்களை பெற்று வருகிறோம். அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும். ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு முடிவுகளை விரைந்து வெளியிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார். பேட்டியின்போது டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் உடனிருந்தனர்.
அரசு பணிக்கான தேர்வு ஒன்றுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பது டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். நள்ளிரவு 11.59 மணி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதால், இன்னும் 50 ஆயிரம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். எனவே, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 16½ லட்சத்தை தாண்டிவிடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: