ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கு மொழி ஒரு தடையல்ல என்று கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ். கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முருகன் பேசினார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பதவிக்கு மொழி தடையல்ல என்று கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ். கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் போலீஸ் டி.ஐ.ஜி. முருகன் பேசினார்.
DIG MURUGAN
கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ். கல்லூரியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஊக்கு விப்பு விழிப்புணர்வு கருத்த ரங்கு நேற்று நடைபெற்றது. கருத்தரங்குக்கு கல்லூரி தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் பாலகிருஷ்ணன், செயலாளர் கோவிந்தராஜூ, பொருளாளர் தமிழ்மணி, கல்வியாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் லட்சுமி நாராயணன் வர வேற்றார்.
கருத்தரங்கில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய தாவது:
இந்த மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பதவியில் இருப்பவர்கள் 2 பேர். ஆனால் டாக்டர்கள், என்ஜினீயர்கள் அதிகம் உள்ளனர். இவர்களை காட்டிலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பணியில் இருப்பவர் களைத்தான் அதிகம் பேர் தெரிந்துள்ளனர். நான் படித்தது அரசு பள்ளியில் தான். 21ம் வயது வரை சென்னை எனக்கு தெரியாது. எம்.ஏ., முடித்தவுடன், அதை வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்வதற்காக சென்னை சென்றேன். இன்றுவரை அங்கிருந்து (வேலைவாய்ப்பு அலுவலகத் தில் இருந்து) கடிதம் வரவில்லை. ஒருமுறை மட்டும் கடிதம் வந்தது. அதுவும், ‘நீங்கள் பணியில் இருப்பதாக தெரிகிறது. உங்கள் பெயரை நீக்கிவிடலாமா?’ என்று வந்தது. 20 ஆண்டுக்கு முன்பு இருந்த நிலைதான் இப்போதும் உள்ளது. வேறு முயற்சிகளில் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும்.
கலைக்கல்லூரியில் படிப்பவர்களை டாக்டர், என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் ஏளனமாக பார்க்கின்றனர். ஆனால் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். பதவிக்கு வருபவர்கள் கலைக்கல்லூரி படிப்பவர்கள்தான். இவர்கள், டாக்டர், என்ஜினீயர் போன்றவர்களை நிர்வகிக் கும் அரசு அதிகாரிகளாக உள்ளனர். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பணியில் உள்ள மரியாதையால், டாக்டர், என்ஜினீயர் போன்றவர்கள் இந்த பதவிக்கு வர தொடங்கியுள்ளனர்.
பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற அக்கறையில் தான் பெற்றோர்கள் நம்மை படிக்க சொல்கிறார்கள். எனவே பெற்றோர்கள் பேச்சை கேட்கவேண்டும். அவர்களை எதிரியாக பார்க்கக் கூடாது. மாணவர் கள் தினமும் ஆங்கில, தமிழ் செய்தித்தாள் படிக்க வேண்டும். உங்கள் ஊருக்கு ஆங்கில நாளிதழ் வரவில்லை என்றாலும், தினத்தந்தி படிக்கலாம். டி.வி.யில் விவாத நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும்.
போட்டித்தேர்வுக்கும், பல்கலைக்கழக தேர்வுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. பள்ளி, பல்கலைக்கழக தேர்வில் 35, 50 மதிப்பெண்கள் எடுத்தால் பாஸ். தோல்வி அடைந்தால்தான் செய்தி. ஆனால் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றால் செய்தி. போட்டித்தேர்வுக்கு 6 முதல் 10ம் வகுப்பு வரை கணிதம், அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்களை படிக்க வேண்டும். அதிலிருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுக்கு மொழி ஒரு பிரச்சினை கிடையாது. எந்த மொழி தெரியுமோ, அந்த மொழியில் தேர்வு எழுதலாம். ஓய்வு பெற்ற திலகவதி ஐ.பி.எஸ்., 1976ம் ஆண்டு நேர் முக தேர்வை தமிழில் எதிர்கொண்டார்.
ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயாராகுவது நேர மேலாண்மை மிக முக்கியம். ஒரு நாளில் 24 மணி நேரத்தில் அதிகம் செலவிடுவது தூங்குவதற்குதான். அப்படி யில்லாமல் 8 மணி நேரம் தூங்குவதற்கும், 12 மணி நேரம் மற்ற வேலைக்கும் செலவிட வேண்டும். மீதமுள்ள 4 மணி நேரத்தில் கவனத்துடன் படித்தால், வாழ்க்கையில் சாதிக்கலாம்.இவ்வாறு போலீஸ் டி.ஐ.ஜி. முருகன் பேசினார்.
கருத்தரங்கில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், தர்மபுரி ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குனர்கள் அன்பு, தர்மராஜ், ஆர்.கே.எஸ். மெட்ரிக் பள்ளி முதல்வர் முருகன், கல்லூரி ஆலோசகர் ரவிசங்கர், வளர்ச்சி அலுவலர் ராமன் குமாரமங்கலம் மற்றும் விரிவுரையாளர்கள், மாணவ மாணவிகள், பள்ளி மாணவர் கள் கலந்து கொண்டனர்.  
Advertisements

One response

  1. அய்யா அவர்களின் பேச்சு அருமை வருங்கால அதிகாரிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலுள்ளது…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: