தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் முதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) வரை பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் முதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) வரை பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கல்வித் துறையில் செயல்படுத்தும் திட்டங்களை கண்காணித்து, செயல்படுத்துவதில் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் “வழிநடத்தும்’ பொறுப்பில் உள்ளவர்கள். பல மாதங்களாக, இதுபோன்ற தலைமையிட அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக கிடப்பதால், துறை உத்தரவுகளை செயல்படுத்துவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில், SCERT., (மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்), நூலகம், மெட்ரிக் பிரிவு இயக்குனர்கள் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.
இதேபோல், தேர்வுத்துறை (மேல்நிலை கல்வி), நூலகம், டி.ஆர்.பி., அனைவருக்கும் கல்வி பிரிவுகளின் இணை இயக்குனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மொத்தம், 64 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களில், சிவகங்கை, விருதுநகரில் “ரெகுலர்’ மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டம்; திருநெல்வேலி, சேலம், ராமநாதபுரம் (எஸ்.எஸ்.ஏ.,) அரியலூர், நாகபட்டினம், திருவாரூர் (எஸ்.எஸ்.ஏ.,) என, 15 பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.
கல்வித்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்தும் முக்கிய இடத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள், பெரும்பாலும் காலியாகவே உள்ளன. குறிப்பாக, பரமக்குடி, மயிலாடுதுறை, திருவாரூர் (டி.இ.இ.ஓ.,), ஈரோடு (மெட்ரிக் ஆய்வாளர்), சேலம், கரூர், மத்திய சென்னை, கடலூர், விழுப்புரம், உடையார்பாளையம், பெரியகுளம், கூடலூர், அரியலூர், சிவகங்கை (டி.இ.இ.ஓ.,), காஞ்சிபுரம், மதுரை (மெட்ரிக் ஆய்வாளர்), சென்னை கிழக்கு உட்பட 51 டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளன; பொறுப்பு அதிகாரிகள் இங்கு கூடுதல் பணியாற்றுகின்றனர். இதுபோன்ற தலைமையிட அதிகாரிகள் இல்லாததால், பல பணிகள் பாதித்தும், முடங்கியும் உள்ளன.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கல்வித் துறை உத்தரவுகளை செயல்படுத்துவதில் முக்கிய பங்குண்டு. அரசு, 14 வகை அரசு நலத்திட்டங்களை மாணவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அதிகாரிகள் காலிப்பணியிடங்களால், பல மாவட்டங்களில் இப்பணிகள் முடங்கியுள்ளன.இதுதவிர, ஐந்து சி.இ.ஓ.,க்களுக்கு இணை இயக்குனர் பதவி உயர்வு கிடைக்கவில்லை. மேலும், 600 உயர் நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர். பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி பதவி உயர்வும் கிடைத்தபாடில்லை. தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை (50 பள்ளிகள்), மேல்நிலை (100 பள்ளிகள்) பள்ளிகள் பட்டியலை அறிவிக்கவில்லை. இதற்காக காத்திருந்த மாணவர்கள், வேறு பள்ளிகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுபோன்ற நிர்வாகப் பணிகளும் முடங்கி, மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைசெல்வன் வெற்றி பெற்ற, விருதுநகர் மாவட்டத்தில், “ரெகுலர்’ மற்றும் எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், ஸ்ரீவில்லிப்புத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் என, 5 முக்கிய பணியிடங்களும் காலியாக உள்ளன.
Advertisements

One response

  1. what you told is correct as in Tirupur also we facing lot os difficulties without the DEEO, on urgent matter govt. has appoint a DEEO top Tirupur to smooth run.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: