செய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தி என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

செய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தி என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது  “பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு போதிய அளவில் உடற்பயிற்சி  மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் எனவும் நீதிபோதனை, உடல்நலக்கல்வி , கலைக்கல்வி, வாழ்க்கைக்கல்வி, சுற்றுச்சூழல் கல்வி,  முதல் உதவி மற்றும்  தற்காப்பு விதிகள் இன்றைய காலக்கட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு அவசியம் எனவும், பள்ளி செயல்பாடுகள் மாணவர்களுக்கு முழுமையான கல்வியினை அளிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடும் தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை எண். 264 னை வெளியிட்டது. 
இவ்வரசாணையில் காலை வழிபாட்டுக்கூட்டம்  நடத்தப்பட வேண்டிய முறை மற்றும் தியானம்,  எளிய  உடற்பயிற்சிகள் மற்றும் யோகா, நீதிபோதனை உள்ளிட்ட வகுப்புகள் மற்றும் மதிய இடைவேளைக்கு பின்னர் வாய்ப்பாடு சொல்லுதல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதைக்கேட்டு எழுதுதல் மற்றும் வெள்ளிக்கிழமை இறுதிவகுப்பில் மாணவர்களின் தனித்திறன் செயல்பாடுகள் போன்றவை நடைபெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதனை செயல்படுத்துவதற்காக பாடவேளை நேரங்களில் மாற்றம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கூறியதன்பேரில் அவர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து பாடவேளைகளை மாற்றி அமைக்கப்பட்டது. அதற்காக ஒரு மாதிரி பாட காலஅட்டவணை தயார் செய்யப்பட்டது. இதேபோன்று பாடவேளை நேரங்களை பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரத்திற்குட்பட்டு மாற்றியமைத்துக்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.  
பாட காலஅட்டவணையில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டன எனவே தற்பொழுது செய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தியாகும்.  பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரம் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பள்ளிகள் வழக்கமாக தற்பொழுது செயல்படும் நேரங்களிலேயே செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.”

4 responses

  1. kalvisolai is the real and only media that gives virginity of the news thanks by G.KANNAN.,P.G.ASST(PHYSICS)., GHSS SERANGULAM., THIRUVARUR DT

  2. உண்மைச் செய்தியை வெளியிட்டமைக்கு நன்றி. பொ.மனோகரன் நாகக்குடையான் மேற்கு.

  3. seithi thalkal ippadippatta seithikalai veliyidumpothu oru muraikku irumurai uruthi seithukolvathu nalam by k.Ganesh Kumar,M.A,B.Ed, p.u.ele,school, thulukkankulam, kariyapatti union,virudhu nagar dist.

  4. the news papers will conform and publish the news.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: