பிளஸ்–2 தேர்வு மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் இல்லாதவர்களுக்கு இணையதளத்தில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாற்றம் உள்ளவர்கள் புதிய மார்க் பட்டியலை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை சார்பில் இணை இயக்குனர் நரேஷ் அறிவித்துள்ளார்.

பிளஸ்–2 தேர்வு மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் இல்லாதவர்களுக்கு இணையதளத்தில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாற்றம் உள்ளவர்கள் புதிய மார்க் பட்டியலை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வுத்துறை சார்பில் இணை இயக்குனர் நரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பிளஸ்–2 தேர்வு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண்களில் எந்தவித மாற்றமும் இல்லாத மாணவ–மாணவிகளுக்கு அதற்கான விவரம் www.dge.tn.nic.in என்ற இணையதளமுகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இணையதள முகவரியில் பெயர் வெளியிடப்படாத பிற விண்ணப்பதாரர்கள் இன்று காலை 11 மணிமுதல் மாலை 5மணிவரை தங்களின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையத்திற்கு நேரில் சென்று தங்களது மதிப்பெண் சான்று, விடைத்தாள் பெற செலுத்திய கட்டண சீட்டு, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு செலுத்திய கட்டண செலுத்தும் சீட்டு ஆகியவற்றை சமர்ப்பித்து புதிய மார்க் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னை சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
கோவை,சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைசேர்ந்த மாணவர்கள் கோவை தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பிரசன்டேசன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மார்க் சான்றிதழை பெறலாம்.
மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் மதுரை தல்லாக்குளத்தில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் மார்க் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.
திருச்சி, நாமக்கல், தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்கள் திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அருகே உள்ள ஈ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் மார்க் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைசேர்ந்த மாணவர்கள் திருநெல்வேலியில் உள்ள எம்.டி.டி. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் புதிய மதிப்பெண் பட்டியலை பெறலாம்.
வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்கள் வேலூர் தத்துவாச்சேரியில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் புதிய மார்க் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.
விழுப்புரம், கடலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச்சேர்ந்தவர்கள் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிய மார்க் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு இணை இயக்குனர் நரேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: