5,566 காலி பணி இடங்களை நிரப்ப குரூப்–4 தேர்வு ஆகஸ்டு 25–ந் தேதி நடத்தப்படும் ஜூன் 14 முதல் விண்ணப்பிக்கலாம் என்று என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,566 பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
இளநிலை உதவியாளர் (காலி இடங்கள் 3,531), தட்டச்சர் (1,738), சுருக்கெழுத்து தட்டச்சர் (242), வரித்தண்டலர் (19), வரைவாளர் (30), நிலஅளவர் (6) என 5,566 காலி பணி இடங்கள் குரூப்–4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். குறைந்த பட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி தமிழகம் முழுவதும் 258 மையங்களில் நடத்தப்படும். இதற்கு டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை மாதம் 15–ந் தேதி ஆகும்.
ஏற்கனவே நிரந்தரப்பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் தங்களின் பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை குறிப்பிட்டு இந்த பதவிக்கான இதர விவரங்களை பதிவுசெய்ய வேண்டும். நிரந்தர பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவுசெய்து விண்ணப்பிக்க வேண்டும். நிரந்தர பதிவு செய்திருத்தல் மட்டுமே இந்த பதவிக்கான விண்ணப்பமாக கருதப்பட மாட்டாது.
விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் தபால் அலுவலகங்களில் செலான் மூலம், விண்ணப்பித்த 2 நாட்களில் செலுத்திவிட வேண்டும். மேலும் ஆன்லைன் மூலமாகவும் (நெட் பேங்கிங்) கட்டணத்தை கட்டலாம். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு 044–25332855, 044–25332833 ஆகிய எண்களிலும் 1800–425–1002 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம்.
இவ்வாறு விஜயகுமார் கூறி உள்ளார்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: