பிளஸ்–2 மறுமதிப்பீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு மதிப்பெண் குறைந்தது. அதேநேரத்தில் ஏறத்தாழ 1,400 பேருக்கு 10 மார்க் வரை, மதிப்பெண் அதிகரித்து இருக்கிறது.

பிளஸ்–2 மறுமதிப்பீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு மதிப்பெண் குறைந்தது. அதேநேரத்தில் ஏறத்தாழ 1,400 பேருக்கு 10 மார்க் வரை, மதிப்பெண் அதிகரித்து இருக்கிறது.
பிளஸ்–2 தேர்வு மார்ச் மாதம் 1–ந்தேதி தொடங்கி, 27–ந்தேதி முடிவடைந்தது. 8 லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவு மே 9–ந்தேதி வெளியிடப்பட்டது. பிளஸ்–2 தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டல், மதிமதிப்பீடு ஆகியவற்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அந்த வகையில், 84 ஆயிரம் பேர் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களுக்கு ஆன்லைனிலேயே விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 16 ஆயிரம் பேர் மறுகூட்டலுக்கும், 5,600 பேர் மறுமதிப்பீட்டிற்கும் விண்ணப்பித்தார்கள்.
மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மறுமதிப்பீடு செய்த விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில், 4 ஆயிரம் பேருக்கு (80 சதவீதம் பேர்) மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டது. விண்ணப்பித்தவர்களில் 25 சதவீதம் பேருக்கு அதாவது ஏறத்தாழ 1,400 பேருக்கு 10 மார்க் வரை மதிப்பெண் அதிகரித்துள்ள நிலையில், ஆயிரம் பேருக்கு மதிப்பெண் குறைந்தது. உள்ள மதிப்பெண்ணும் பறிபோனதை எண்ணி, அந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, மறுமதிப்பீட்டிற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தாத ஏராளமான மாணவர்களின் விடைத்தாள்களும் மறுமதிப்பீடு செய்யப்பட்டு இருக்கின்றன.
மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்த மாணவ–மாணவிகளும் அவர்களின் பெற்றோரும் இந்த பணியை கவனிக்கும் கல்வித்துறை இணை இயக்குனர் (விடைத்தாள் நகல்) அலுவலகம் அமைந்துள்ள சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர்.
திடீரென மாணவ–மாணவிகளும் பெற்றோர்களும் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த இணை இயக்குனர் பி.ஏ.நரேஷுடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மறுமதிப்பீட்டுக்கு கட்டணம் செலுத்தாமலேயே எப்படி விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யலாம்? என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அவர்களை இணை இயக்குனர் நரேஷ் சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அவரிடம் வாக்குவாதம் செய்தனர். தேர்வுத்துறை இயக்குனரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். மறுமதிப்பீட்டிற்கு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு பழைய மதிப்பெண் ஏற்றுக்கொள்ளப்படுமா? அல்லது மறுமதிப்பீட்டின்படி புதிய மார்க் எடுத்துக்கொள்வார்களா? என்பது தெரியவில்லை.
மறுமதிப்பீட்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் மாற்றம் வந்துள்ளது. ஏறத்தாழ ஆயிரம் பேருக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 1,400 பேருக்கு மதிப்பெண் அதிகரிக்கவும் செய்துள்ளது. எனவே, என்ஜினீயரிங், மருத்துவம் ஆகிய படிப்புகளில் கட் ஆப் மதிப்பெண்ணில் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Advertisements

One response

  1. WHERE TO SEE THE RESULT…
    Please share the link…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: