எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ். ரேங்க் பட்டியல் வெளியீடு 7 மாணவ–மாணவிகள் 200–க்கு 200 கட் ஆப் மார்க்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 7 மாணவ–மாணவிகள் 200–க்கு 200 கட் ஆப் மார்க் பெற்று முதல் 7 இடங்களையும், 3 பேர் 200–க்கு 199.75 கட் ஆப் எடுத்து 8, 9, 10–ம் இடங்களையும் பிடித்துள்ளனர். விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான முதல்கட்ட கவுன்சிலிங் 19–ந்தேதி தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்படும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியும் அடங்கும். இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 2,430 எம்.பி.பி.எஸ். இடங்களில், அகில இந்திய ஒதுக்கீடு (15 சதவீதம்) போக எஞ்சியுள்ள 2065 இடங்களும், அதேபோல் 12 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும் 838 இடங்களும் கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படும்.
பல் மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரையில் சென்னையில் மட்டும் ஒரேயொரு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்குள்ள 100 பி.டி.எஸ். இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு (15 சீட்டுகள்) எஞ்சிய 85 இடங்களும், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும் 939 இடங்களும் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்பட உள்ளன. மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு 29 ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் தகுதியான 28, 785 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு கடந்த 7–ந் தேதி கம்ப்யூட்டர் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், ரேங்க் பட்டியல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இன்று மதியம் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.
இதில் 7 மாணவ–மாணவிகள் 200–க்கு 200 கட் ஆப் மார்க் பெற்று முதல் 7 இடங்களையும், 3 பேர் 200–க்கு 199.75 கட் ஆப் எடுத்து முறையே 8, 9, 10–ம் இடங்களையும் பிடித்தனர். பின்னர் அமைச்சர் வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த ஆண்டு மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளுக்கு 29,569 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியான 28,785 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களில் மாணவர்கள் 10,182 பேர். மாணவிகள் 18,603 பேர். மொத்த விண்ணப்பதாரர்களில் 26,348 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். 850 பேர் சி.பி.எஸ்.இ. மாணவர்கள். 28 பேர் ஐ.சி.எஸ்.இ. மாணவர்கள். மொத்த மாணவ–மாணவர்களில் 10,629 பேர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் ஆவர்.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் பொது கவுன்சிலிங் 19–ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக 18–ந்தேதி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்டோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கவுன்சிலிங் நடைபெறும். கவுன்சிலிங் அட்டவணை ஓரிரு நாளில் வெளியிடப்படும்.இவ்வாறு அமைச்சர் வீரமணி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் வம்சதாரா, கூடுதல் இயக்குனரும், தேர்வுக்குழு செயலாளருமான டாக்டர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள்
எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். ரேங்க் பட்டியலில் 7 மாணவ–மாணவிகள் 200–க்கு 200 கட் ஆப் பெற்று முதல் 7 இடங்களையும், எஞ்சிய 3 பேர் 200–க்கு 199.75 கட் ஆப் எடுத்து 8, 9, 10–ம் இடங்களையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அவர்களின் பெயர், படித்த பள்ளி விவரம் வருமாறு:–
1. எஸ்.அபினேஷ், கிரீன் பார்க் மெட்ரிக்குலேஷன் பள்ளி, நாமக்கல்
2. ஜி.பரணிதரன், ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி
3. எஸ்.பழனிராஜ், வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி, வரகுராம்பட்டி, திருச்செங்கோடு
4. எஸ்,தினேஷ், ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி
5. கே.ரவீனா, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை
6. ஜி.நந்தினி ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை
7. என்.பி.ஜெயஓவியா, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை
8. எஸ்.முத்துமணிகண்டன், நசரேத் மெட்ரிக் பள்ளி, ஆவடி, சென்னை
9. எஸ்.விக்னேஷ், கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
10.கே.ஏ.ஹேம்நாத், ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: