பள்ளிக்கல்வித்துறையின் "கற்க கசடற" மாத இதழ் துவங்க மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் உத்தரவு

மாண்புமிகு பள்ளிக்கல்வி, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 04.06.2013 அன்று பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் அவர்கள் முன்னிலையில் நுங்கம்பாக்கம், டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ‘கற்க கசடற’ என்னும் மாத இதழ் வெளியிட மாண்புமிகு அமைச்சர் அவர்களால் முடிவு செய்யப்பட்டது. அதற்காக அனைத்து மாவட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் ஆகியோரிடமிருந்து சிறப்புச் செய்திகள், படங்கள், வெற்றிக் கதைகள், சிறப்பு நிகழ்வுகள், அனுபவங்கள் மாணவ மாணவிகள் தொடர்பான சிறப்பு நிகழ்வுகள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், கற்பித்தல் பொருள் தொடர்பான சிறப்பு செய்திகள், தேர்ச்சி சதவிகிதம், மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்கள், ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு குறித்த செய்திகள், மேற்படிப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டுடன் கூடிய முப்பருவக் கல்விமுறை பற்றிய சிறப்புச் செய்திகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் பற்றிய செய்திகள், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மாதிரிப் பள்ளிகள் பற்றிய செய்திகள், நபார்டு வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பொது நூலகத்துறை சார்ந்த செய்திகள் மற்றும் இதர செய்திகள் ஆகியவற்றைப் வெளியிடுவதற்கு ஏதுவாக scerttn@gmail.com மற்றும் dtert@tn.nic.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு உடன் அனுப்பி வைக்குமாறு கோரப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: