அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்டு மாதம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்டு மாதம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 600–க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2,012 பி.எட். இடங்களும், தனியார் கல்லூரிகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீட்டுகளும் உள்ளன.
அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரையில், 100 சதவீத இடங்களும், உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும், உதவி பெறும் சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படுகின்றன. தனியார் கல்லூரிகளில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினரே அனைத்து இடங்களையும் நிரப்புகிறார்கள்.
நடப்பு கல்வி ஆண்டுக்கான பி.எட். மற்றும் எம்.எட். தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கின. பி.எட். தேர்வு ஜூன் மாதம் 11–ந் தேதியும், எம்.எட். தேர்வு ஜூன் 3–ந் தேதியும் முடிவடைகிறது. பொதுவாக பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானவுடன் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
வரும் கல்வி ஆண்டில் (2013–2014) பி.எட். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் எப்போது வழங்கப்படும்? என்று தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வியிடம் கேட்டபோது, ‘‘2013–2014–ம் கல்வி ஆண்டுக்கான பி.எட். மாணவர் சேர்க்கை வழிமுறைகள் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஆகஸ்டு மாதம் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.
தனியார் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு இரண்டு விதமான கட்டணத்தை அரசு நிர்ணயித்து இருக்கிறது. தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் (நாக்) அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளாக இருந்தால் ரூ.46,500–ம், நாக் அங்கீகாரம் பெறாத கல்லூரிகளாக இருப்பின் ரூ.41,500–ம் கட்டணம் வசூலிக்கலாம்.
சுயநிதி கல்லூரிகளில் அனைத்து பி.எட். இடங்களையும் நிர்வாகத்தினரே நிரப்பலாம் என்றாலும் ஒருசில கல்லூரி நிர்வாகங்கள் கவுன்சிலிங் மூலம் இடங்களை நிரப்பும் வகையில் அரசிடம் குறிப்பிட்ட சதவீத இடங்களை ஒப்படைக்க தயாராக உள்ளன.
கவுன்சிலிங் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற்றால் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகள் வருவார்கள் என்பது அவர்களின் எண்ணம். ஆனால், கவுன்சிலிங்கிற்கு தாமாகவே முன்வந்து இடங்களை கொடுக்க தனியார் கல்லூரிகள் முன்வந்தால்கூட அரசு அதற்கு தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுபோன்று தாமாகவே முன்வந்து கவுன்சிலிங்கிற்கு இடங்களை ஒப்படைக்க விரும்பும் தனியார் கல்லூரிகளிடம் கல்லூரி கல்வித்துறை இடங்களை பெற்று கவுன்சிலிங் மூலம் நிரப்ப முன்வர வேண்டும் என்று ஒருசில கல்லூரி நிர்வாகத்தினர் எதிர்பார்க்கிறார்கள்.
Advertisements

One response

  1. SIR,
    My sister did completed 10 TH +3 YEARS DIPLOMA+3 YEARS B.LIT(TAMIL).,SHE IS POSSIBLE TO JOIN B.ED(Tamil)…pl inform to me..this is very useful information to me…
    thanks.,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: