முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் 490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், 490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், ஜூன், 1 ம் தேதி  பணியில் சேர வேண்டும் என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
பள்ளிகல்வித் துறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. நேற்று, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு நடந்தது.மொத்தம், 490 பணிஇடங்கள் காலியாக இருந்தன. பணிமூப்பு அடிப்படையில், 743 பேர், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.
சென்னையில், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளியில், கலந்தாய்வு நடந்தது. 21 பேர் அழைக்கப்பட்டதில், நான்கு பேர், “ஆப்சென்ட்’; ஐந்து பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பணியிடங்களை தேர்வு செய்தனர்.அவர்களுக்கான உத்தரவுகளை, சி.இ.ஓ., ராஜேந்திரன் வழங்கினார். 12 பேர், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால், பதவி உயர்வு வேண்டாம் என, தெரிவித்துவிட்டனர்.
மாநில அளவில், 60க்கும் அதிகமான ஆசிரியர்கள், விரும்பிய இடம் கிடைக்காததால், பதவி உயர்வு வேண்டாம் என, தெரிவித்தனர்.பலர், கலந்தாய்வுக்கு வரவில்லை.எனினும், 490 பேர், உரிய இடங்களை தேர்வு செய்ததால், அவர்கள் அனைவரும், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டு, கலந்தாய்வு இடத்திலேயே, உத்தரவுகள் வழங்கப்பட்டன.உத்தரவுபதவி உயர்வு கடிதங்களை வழங்கிய அதிகாரிகள், “அனைவரும், ஜூன், 1 ம் தேதி  புதிய இடங்களில் பணியில் சேர வேண்டும்’ என, உத்தரவிட்டனர்.
Advertisements

2 responses

  1. When will high school HM promotion counselling take place?

  2. when will BT counselling take place ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: