2011-12ஆம் கல்வி ஆண்டிற்கான போட்டி எழுத்துத் தேர்வுமூலம் தகுதிபெற்ற பணிநாடுநர்கள் தமது விண்ணப்பத்தில் தமிழ் வழியில் பயின்றதாக முன்னுரிமை கோரியவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு.

முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை I நியமனம் 2011-12ஆம் கல்வி ஆண்டிற்கான போட்டி எழுத்துத் தேர்வுமூலம் தகுதிபெற்ற பணிநாடுநர்கள் தமது விண்ணப்பத்தில் தமிழ் வழியில் பயின்றதாக முன்னுரிமை கோரியவர்கள் 03.08.2012 மற்றும் 30.10.2012 தேதிகளில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புகளில் வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் தமிழ்வழிக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்திற்காக அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பின்போது எஸ்.எஸ்.எல்.சி, மேல்நிலைக்கல்வி, இளநிலை பட்டம், முதுகலை பட்டம் மற்றும் ஆசிரியர்கல்வி பட்டம் முதலானவற்றை முற்றிலும் தமிழ்வழியில் பயின்றமைக்கான சான்றிதழ்களை பெரும்பாலான பணிநாடுநர்கள் சமர்ப்பிக்கவில்லை. உரிய சான்றிதழ்கள் சமர்பிக்காததால் வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களின் தமிழ்வழி முன்னுரிமைப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்ப இயலவில்லை. எனவே மீதமுள்ள பணிநாடுநர்களில் தமிழ்வழி என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பணிநாடுநர்களில் வரையறுக்கப்பட்ட மதிப்பெண்  பெற்றவர்களுக்கு மட்டும் பாடவாரியாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்போது ஒருவாய்ப்பு வழங்கப்படுகிறது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு

(1) சென்னை- பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, எண்.5 போலீஸ் லேன், சென்னை.15,
(2) விழுப்புரம் – அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம்
(3) சேலம் – ஜெயராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெத்திமேடு, சேலம்.2
(4) கோயம்புத்தூர் – நல்லாயன் உயர்நிலைப்பள்ளி, கோயம்புத்துhர்.1
(5) மதுரை- சாய்ராம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, எம்.ஏகே சாலை, மதுரை-2
(6) திருநெல்வேலி ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, வி.எம்.சத்திரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
(7) திருச்சிராப்பள்ளி ஏடிஎம்ஆர்சிஎம் வாசவி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, எண்.11 பேர்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட், திருச்சி 620 001

ஆகிய மாவட்டங்களில் மட்டும் 23.05.2013 மற்றும் 24.05.2013 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசியல் அறிவியல் பாடத்திற்குரிய பின்னடைவுப் பணியிடங்களுக்கு தகுதியுள்ள பணிநாடுநர்களுக்கும் சான்றிதழ்சரிபார்ப்பு நடத்தப்படவுள்ளது. பணிநாடுநர்களின் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் (http://www.trb.tn.nic.in/PG2012/13052013/status.asp) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணிநாடுநர்கள் இதர சான்றிதழ்களுடன் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை கீழ்க்காணும் முறையில் பெற்றுவர தெரிவிக்கப்படுகிறது. கல்வித்தகுதி தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெறவேண்டிய உரிய அலுவலர்
  1. எஸ்.எஸ்.எல்.சி தலைமையாசிரியர்
  2. மேல்நிலைக்கல்வி தiலைமயாசிரியர்
  3. இளங்கலை பட்டம் முதல்வர்/ பல்கலைக்கழக பதிவாளர்
  4. முதுகலை பட்டம் முதல்வர் / பல்கலைக்கழக பதிவாளர்
  5. இளங்கலை கல்வியியல் (பி.எட்) பல்கலைக்கழக பதிவாளர் மட்டும்

சான்றிதழ் சரிபார்ப்பின்போது தமிழ்வழியில் பயின்றதற்கான உரிய சான்றிதழ்கள் பணிநாடுநர்களால் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் தமிழ்வழி முன்னுரிமை பணியிடத்திற்கு தகுதியற்றவராக கருதப்படுவர். 03.08.2012 மற்றும்  30.10.2012 ல் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பின்போது மேற்கண்டவாறு தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்காதவர்கள் தற்போது உரிய சான்றிதழ்கள் பெற்றிருப்பின் 27.05.2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக சமர்ப்பித்திட அறிவிக்கப்படுகிறது.
Advertisements

One response

  1. when will they publish the result for Home Science Subject

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: