பி.இ., பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 21 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.

பி.இ., பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 21 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்த மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம். வார வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்களை நேரடியாக பெற விரும்புவோர் ரூ.300-க்கான டி.டி.யை “The Secretary, Second year BE/B.Tech Degree Admissions 2013. Alagappa chettiar College of Engineering and Technology Chettiar College of Engineering and Technology, Karaikudi – 630004” என்ற பெயரில், காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும். அதைக் கொடுத்து விற்பனை மையங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
சென்னையில் கிண்டிதொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திலும், புரசைவாக்கம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “The Secretary, Second year BE/B.Tech Degree Admissions 2013. Alagappa chettiar College of Engineering and Technology Chettiar College of Engineering and Technology, Karaikudi – 630004” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 12-ஆம் தேதி ஆகும்.
இதற்கான கலந்தாய்வு வருகிற ஜூன் மாதம் கடைசி வாரத்தில் அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும். அழைப்புக் கடிதம் உரியவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: