பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அரசு பள்ளிகள் சாதிக்க 6ம் வகுப்பிலிருந்து தயார்படுத்த வேண்டும் : அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் அறிவுரை

JD P.A.NARESH“தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அரசு பள்ளிகள் தேர்ச்சி அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை தயார்படுத்த வேண்டும்”, என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசினார். ராமநாதபுரத்தில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: ஒவ்வொரு பள்ளியிலும், பத்தாம் வகுப்பில் மட்டும், மாணவர்களை தேர்ச்சிக்கு தயார்படுத்தினால் சாதிக்க முடியாது. ஆறாம் வகுப்பிலிருந்தே, மாணவர்களை படிப்பில் சிறந்து விளங்க தயார் செய்ய வேண்டும். இதற்காக ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை படிப்படியாக உயர்த்த வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே தகவல் தொடர்பு இல்லாவிட்டால், சாதிப்பது கடினம். முதல்வர் ஜெ., கல்வி துறையின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே அரசு பள்ளி ஆசிரியர்கள், பொது தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதுடன், நூறு சதவீத தேர்ச்சிக்கு முயற்சி எடுக்க வேண்டும். ஒரு பள்ளியில் 90 சதவீதம் வெற்றி என்றால், அங்கு, 10 சதவீத தோல்விக்கு, தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும். எனவே நூறு சதவீதம் என்பதை சவாலாக எடுத்து, மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும், என்றார்.

Advertisements

2 responses

  1. good suggestion if all the educational institutions follow this point we can make a drastic change among the younger generation.we should develop the good qualities from the grass root level. so that we can make good
    society.

  2. This idea is good,it is not only implement in 6th std level,it is implement in primary level

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: