Monthly Archives: October, 2012

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 55 ஆயிரத்து 667 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 5.49 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 1.35 கோடி மாணவ, மாணவியர், படித்து வருகின்றனர். அனைத்துப் பள்ளிகள், அவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி, அவை, பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில், தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், புதிய திட்டங்களை தீட்டவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியை, ஆண்டுதோறும் நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து வகை பள்ளிகளுக்கும், 32 பக்கங்கள் அடங்கிய படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககத்தின் சார்பிலும், இதர வகுப்புகளுக்கு, மத்திய இடைநிலை கல்வித்திட்டம் சார்பிலும், விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவத்தில், தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தால், அதற்கு, சம்பந்தபட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், இனசுழற்சி என்ற அடிப்படையில், பல்வேறு இன மாணவர்கள் பங்கேற்கும் நடைமுறை விவரம், ஒப்பந்த ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களைப் பற்றிய விவரங்கள், பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள் உட்பட, பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு பணியை, வரும் நவம்பர் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பள்ளிகளில் உள்ள உண்மையான நிலவரம் தெரிந்து விடும்.

டி.ஆர்.பி., 14ம் தேதி நடத்தும், டி.இ.டி., மறுதேர்வில், 6.82 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

டி.ஆர்.பி., 14ம் தேதி நடத்தும், டி.இ.டி., மறுதேர்வில், 6.82 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். ஜூலையில் நடந்த, டி.இ.டி., தேர்வில், 6.67 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், தோல்வி அடைந்த தேர்வருக்காக, இம்மாதம், 3ம் தேதி, மறுதேர்வு நடக்க இருந்தது; பின், புதிய தேர்வர்களும், தேர்வில் பங்கேற்பதற்கு வசதியாக, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்காக, கடந்த மாதம், 24 முதல், 28ம் தேதி வரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன; 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து, 6.82 லட்சம் பேர், 14ம் தேதி நடக்கும் தேர்வில் பங்கேற்கின்றனர். 1,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல்தாளும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இரு தேர்வுகளும், தலா, 150 மதிப்பெண்களுக்கு நடக்கும். தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. தேர்வை கண்காணிக்க, டி.ஆர்.பி., உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, புதிய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

NEW METHODS OF BT AND SGT APPOINTMENT IN TAMIL NADU – தமிழக அரசு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்’ மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை: தமிழக அரசு
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் “வெயிட்டேஜ்’ மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக “வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.

ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் “வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் “வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கப்படும்.

இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது.

அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் விவரம்:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் “வெயிட்டேஜ்’ மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் “வெயிட்டேஜ்’ மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).

பட்டதாரி ஆசிரியர்களுக்கு…ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் “வெயிட்டேஜ்’ மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி?
இடைநிலை ஆசிரியர்களுக்கான “வெயிட்டேஜ்’ மதிப்பெண் (100):
பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
90 சதவீதத்துக்கு மேல் ………………- 15 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை………….-12
70 முதல் 80 சதவீதம் வரை………….- 9
60 முதல் 70 சதவீதம் வரை………….- 6
50 முதல் 60 சதவீதம் வரை………….- 3
ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
70 சதவீதத்துக்கு மேல்………………- 25 மதிப்பெண்
50 முதல் 70 சதவீதம் வரை…………- 20
ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
90 சதவீதத்துக்கும் மேல்…………….- 60 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை…………- 54
70 முதல் 80 சதவீதம் வரை…………- 48
60 முதல் 70 சதவீதம் வரை…………- 42
பட்டதாரி ஆசிரியர்களுக்கான “வெயிட்டேஜ்’ மதிப்பெண் (100):
பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
90 சதவீதத்துக்கு மேல்………………- 10 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை…………- 8
70 முதல் 80 சதவீதம் வரை…………- 6
60 முதல் 70 சதவீதம் வரை…………- 4
50 முதல் 60 சதவீதம் வரை…………- 2
இளநிலைப் பட்டப் படிப்பு (15)
70 சதவீதத்துக்கும் மேல்…………….- 15
50 முதல் 70 சதவீதம் வரை…………- 12
50 சதவீதத்துக்கும் கீழே…………….- 10
பி.எட். படிப்பு (15)
70 சதவீதத்துக்கும் மேல்…………….- 15
50 முதல் 70 சதவீதம் வரை…………- 12
ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
90 சதவீதத்துக்கும் மேல்…………….- 60 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை…………- 54
70 முதல் 80 சதவீதம் வரை…………- 48
60 முதல் 70 சதவீதம் வரை…………- 42

பத்தாம் வகுப்பு தனித் தேர்வருக்கு, அக்.11 முதல், 13ம் தேதி வரை "ஹால் டிக்கெட்” வழங்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

AEEO APPOINTMENT – போட்டித் தேர்வு வழியாகத் தேர்வு செய்யப்பட்ட, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

போட்டித் தேர்வு வழியாகத் தேர்வு செய்யப்பட்ட, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். ஆசிரியர் தேர்வு வாரியம், 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, சில மாதங்களுக்கு முன், போட்டித் தேர்வை நடத்தி, சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தேர்வுப் பட்டியலை வெளியிட்டது. தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். தேர்வான, 34 பேரில், 16 பேர் ஆண்கள்; 18 பேர் பெண்கள். 34 பேரும், அவரவர் சொந்த மாவட்டங்களில், பயிற்சியை மேற்கொள்ளும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கல்வி அலுவலகங்கள், ஆசிரியர் பயிற்சி மையம், பள்ளிகள், ஆகியவற்றில், 59 நாட்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என, தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், துறை முதன்மை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம், பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

B.T APPOINTMENT COUNSELLING – பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங் ஆன்லைனில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், அக்.,10ல் நடக்கிறது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங் ஆன்லைனில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், அக்.,10ல் நடக்கிறது. தமிழகத்தில், முதுகலை ஆசிரியர்களை தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், ஆன்லைனில் நடக்கிறது. கடந்த 2010-11ம் கல்வியாண்டில், டி.ஆர்.பி., மூலம் நேரடியாக தேர்வாகி, இதில், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும், இந்த ஆன்லைன் கவுன்சிலிங்கின்போது, சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து, அக்.,10 ம் தேதி காலை, காலி பணியிடம் பற்றிய விவரம், இன சுழற்சி முறையில் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்படும். விரும்பிய இடங்களை தேர்வு செய்து, நியமன உத்தரவை ஆசிரியர்கள் பெற்றுச் கொள்ளலாம் என, முதன்மை கல்வி அலுவலகங்கள் தெரிவிக்கின்றன.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வருக்கு, 11 முதல், 13ம் தேதி வரை, "ஹால் டிக்கெட்’ வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வருக்கு, 11 முதல், 13ம் தேதி வரை, “ஹால் டிக்கெட்’ வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.தேர்வுத் துறை அறிவிப்பு: எஸ்.எஸ்.எல்.சி., – ஓ.எஸ்.எல்.சி., மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித் தேர்வுகள், 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கின்றன. மெட்ரிக் தனித் தேர்வு, 15ம் தேதி துவங்கி, 29 வரை நடக்கிறது.தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, 11 முதல், 13ம் தேதி வரை, தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் வெளியிடும் மையங்களில், “ஹால் டிக்கெட்’ வழங்கப்படும்.தேர்வர், நேரில் சென்று, ஹால் டிக்கெட்டை பெற வேண்டும். ஹால் டிக்கெட் கிடைக்காதவர், சம்பந்தப்பட்ட துணை இயக்குனரை அணுகலாம்.இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

கடந்த, ஜூலையில் நடந்த, குரூப் – 4 தேர்வு முடிவுகள், திங்கள் மாலை வெளியானது. இதன் வழியாக, தமிழக அரசுப் பணிக்கு, 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த, ஜூலையில் நடந்த, குரூப் – 4 தேர்வு முடிவுகள், திங்கள் மாலை வெளியானது. இதன் வழியாக, தமிழக அரசுப் பணிக்கு, 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இன சுழற்சி வாரியான, “கட்-ஆப்’ மதிப்பெண் விவரம், ஒரு வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை, “ஸ்கேன்’ செய்து, தேர்வாணைய இணையதளத்தில், “அப்லோட்’ செய்ய வேண்டும்.இதை, இன்று முதல், 17ம் தேதி வரை செய்ய வேண்டும். அதன் பின், சான்றிதழ்களை சரிபார்த்த பிறகே, இன சுழற்சி வாரியாக, “கட்-ஆப்’ மதிப்பெண்களை வெளியிட முடியும். “கட்-ஆப்’ மதிப்பெண் வெளியிட்ட பின், கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது .

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல் ஆசிரியர்களின் வருகையை, எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து, அதிகாரிகளுக்கு அனுப்பும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் வருகை குறித்து, பதிவு செய்ய, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி முறையை அறிமுகம் செய்துள்ளனர். இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர், காலை 9:30 மணிக்கு, பள்ளிக்கு வந்த ஆசிரியர்களின் வருகை குறித்து, அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் அல்லது மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிப்பர். இது கம்ப்யூட்டர் மூலம் ,தானாகவே கல்வி துறை அலுவலகத்தில் பதிவாகிவிடும். ஒரு பள்ளியின் ஆசிரியர்கள் வருகை குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள “பாஸ்வேர்ட்’ மூலம் கம்ப்யூட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதே போல், கல்வி துறை இயக்குனர் வரை கொடுக்கப்பட்டுள்ள “பாஸ்வேர்ட்’ மூலம், தமிழகத்தில் எந்த ஊரிலும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் வருகை குறித்து, சென்னையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். “இம்முறை தற்போது தர்மபுரி, கடலூர் மாவட்டங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டிலிருந்து, அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வரஉள்ளது’ என கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு, திங்கள் முதல், ஹால் டிக்கெட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட், எக்காரணம் கொண்டும், வீட்டு முகவரிக்கு அனுப்பப்படாது.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு, இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு, இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. டி.ஆர்.பி., இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு, மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை, 12ம் தேதி நடந்த தேர்வில், 6 .76 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர்; 2, 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், அக்டோபர், 3ம் தேதி, மறுபடியும் தேர்வு எழுதலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்நிலையில், இத்தேர்வில், ஜூலைக்கு பின், பி.எட்., முடித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அதில், “தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், புதிதாக பி.எட்., படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வு, அக்டோபர், 14ம் தேதிக்கு மாற்றப்படுகிறது’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது.அதன்படி, தேர்வு எழுதுபவர்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. புதிதாக தேர்வெழுத, 17 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட், இன்று முதல் வழங்கப்படுகிறது.ஹால் டிக்கெட்டை, டி.ஆர்.பி., இணையதளத்தில் http://www.trb.tn.nic.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட், எக்காரணம் கொண்டும், வீட்டு முகவரிக்கு அனுப்பப்படாது.தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து மட்டுமே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பழைய விண்ணப்பதாரர்களுக்கு, ஹால் டிக்கெட் வீட்டுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா ‌பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ம் (1.7.2012)தேதி முதல் கணக்கீட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பன்பெறுவர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 1,443. 52 கோடி செலவாகும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளர்கள். அகவிலைப்படி உயர்வு வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 தேர்வு முடிவுகள்ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என தெரிகிறது.

குரூப் – 4 தேர்வு முடிவை வெளியிட, விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது.

குரூப் – 4 தேர்வு முடிவை வெளியிட, விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 தேர்வு, ஜூலை 7ம் தேதி நடந்தது. 10 ஆயிரத்து 718 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், 10.2 லட்சம் பேர் பங்கேற்றனர். தர்மபுரி மாவட்டத்தில், தேர்வு எழுதிய சிலருக்கு, 200 கேள்விகளுக்குப் பதில், 150 கேள்விகள் மட்டுமே, கேள்வித் தாளில் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, ஐகோர்ட்டில், சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த ஐகோர்ட், “மறு உத்தரவு வரும் வரை, தேர்வு முடிவை வெளியிடக் கூடாது’ என, உத்தரவிட்டது. விடைத்தாளை திருத்திக் கொள்ள, அனுமதித்தது. ஆகஸ்ட் 17ம் தேதி, இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதி நாகமுத்து முன், நேற்று விசாரணைக்கு வந்தது. டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிறைமதி, “குறைபாடு உடைய, கேள்வித்தாளை வழங்கியதால், பாதிக்கப்பட்ட, 13 பேருக்கு, புதிதாக தேர்வு நடத்தப்பட்டது. அதில், மனுதாரர்களுக்கும், சந்தர்ப்பம் வழங்கப்பட்டது’ என்றார்.மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு, “தேர்வு நடத்தப்பட்டு விட்டதால், எங்களுக்கு மேற்கொண்டு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றார். இதையடுத்து, “குரூப் – 4 தேர்வு முடிவை வெளியிடக் கூடாது’ என, ஆகஸ்ட் மாதம் பிறப்பித்திருந்த உத்தரவை நீக்கி, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார். ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, ஓரிரு நாட்களில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறப்பு ஆசிரியர் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்.

சிறப்பு ஆசிரியர் பணிக்கு, 10 மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்த நிலையில், இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை. அரசுப் பள்ளிகளில், 1,020 பட்டதாரி விளையாட்டு ஆசிரியர்கள் உட்பட, 1,500 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க, 2011 டிசம்பரில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. இப்பணி முடிந்து, 10 மாதங்களாகியும், பணி வழங்கப்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்த, முதுகலை பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று, சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,”சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பணியிடங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்கள் குறித்த விவரத்தை அரசு சேகரிக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,” என்றார்.

பி.எட்., மற்றும் எம்.எட்., மறு மதிப்பீட்டின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

பி.எட்., மற்றும் எம்.எட்., மறு மதிப்பீட்டின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.தமிழ்நாடு கல்வியியல் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. இந்த தேர்வில் தவறிய மாணவர்கள், டிசம்பரில் நடக்கும் துணைத் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை, தாங்கள் படித்த கல்லூரி முதல்வரிடம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், பல்கலைக்கழக இணைய தளமான www.tnteu.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரி முதல்வர்கள் மூலம் வரும் 29ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அபராதகட்டணத்துடன் நவம்பர் 7ம்தேதிக்குள் அனுப்பலாம்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பிளஸ் 2 தனித் தேர்வு துவங்கியது.

பிளஸ் 2 தனித் தேர்வு நேற்று துவங்கியது. ஏற்கனவே நடந்த தேர்வுகளில், தோல்வி அடைந்த மாணவ, மாணவியர் மற்றும் ஜூன், ஜூலையில் நடந்த உடனடித் தேர்வில் தோல்வி அடைந்தோர், இத்தேர்வை எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும், 200க்கும் மேற்பட்ட மையங்களில், 50 ஆயிரத்து 500 பேர் எழுதுகின்றனர். சென்னையில், 11 மையங்களில் நடக்கும் தேர்வில், 6,533 பேர் எழுதுகின்றனர். இதன் முடிவுகள், அடுத்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும்.

ஆசிரியர் நியமன விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என, தெரிகிறது.

ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. “டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே; அதில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கு, உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்’ என, தமிழக அரசுக்கு, சென்னை, ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. அதனடிப்படையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான வழிமுறைகளை வகுக்க, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழுவின் முதல் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, அதன் மதிப்பெண்களையும், டி.இ.டி., தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவற்றையும் கூட்டி, அதனடிப்படையில் தேர்வுப் பட்டியலை வெளியிடலாம் என, ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான அரசின் முடிவு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, தெரிகிறது. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 2,448 ஆசிரியர்கள், வரும், 14ம் தேதி நடக்க உள்ள, டி.இ.டி., மறுதேர்வில் தேர்ச்சி பெறுவோர் அனைவரும், புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி தேர்வு செய்யப்படுவர். டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர், 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை: அரசிடம் விளக்கம் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

ஆசிரியர் நியமனத்தில் எத்தகைய இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுவது என்பது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்போதுள்ள முறையின்படி, 200 புள்ளி இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
ஆனால், இந்த முறையின் கீழ் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கவில்லை என்றும், தகுதியான பலரும் பணி வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இதில் பின்பற்றப்பட வேண்டிய இடஒதுக்கீட்டு முறை தொடர்பாக அரசிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,895 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு மே 27-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் மற்றும் உத்தேச தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளில் தவறு உள்ளதாகக் கூறி தேர்வர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளில் 50-க்கும் மேற்பட்ட விடைகள் தவறாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி தேர்வுப் பட்டியலை ரத்து செய்தது. நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் புதிதாக அனைத்து விடைத்தாள்களையும் மறுமதிப்பீடு செய்யவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் புதன்கிழமை கூறியது:
ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் வகையில், முதன்முதலாக, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதை வெளியிடும்போதே அதில் சில பிரச்னைகள் எழலாம் என்றும் எதிர்பார்த்தோம்.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஆசிரியர் நியமனம் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழக அரசு 2009-ல் வெளியிட்ட அரசாணையின்படி, ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அனைத்து பணி நியமனங்களிலும் 200 புள்ளி இடஒதுக்கீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது (முன்னதாக, இடஒதுக்கீட்டு முறையில் 100 புள்ளி ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. சிறுபான்மையினருக்கான உள்ஒதுக்கீடு, அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு ஆகியவற்றை உள்ளடக்குவதற்காக 200 புள்ளி இடஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டது).
அரசாணையின்படியே, 200 புள்ளி இடஒதுக்கீட்டு முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றியுள்ளது. அதில் உள்ள பிரச்னைகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நீதிமன்ற உத்தரவு கிடைத்தபிறகு, தமிழகம் அரசிடம் இதுகுறித்து விளக்கம் பெறப்படும்.
அரசாணையில் திருத்தம் கொண்டுவராத வரை இந்த இடஒதுக்கீட்டு முறையை மாற்றுவது மிகவும் கடினமானது.
50 முக்கிய விடைகள் தவறு: முக்கிய விடைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பங்கு எதுவும் இல்லை. அந்தந்தத் துறை நிபுணர்களைக் கொண்டு முக்கிய விடைகள் முடிவு செய்யப்பட்டு, அவர்களின் கையெழுத்தும் பெறப்படுகிறது.
இந்த நிலையில், உயர் நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு முக்கிய விடைகளில் தவறு உள்ளதாகக் கூறியுள்ளது. இனிவரும் காலங்களில் முக்கிய விடைகளுக்கு துறை நிபுணர்களையே பொறுப்பேற்கச் செய்யும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும்.
விரைவில் மறுமதிப்பீடு: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அனைத்து விடைத்தாள்களும் விரைவில் மறுமதிப்பீடு செய்யப்படும். விடைத்தாள்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளதால், திருத்தப்பட்ட முக்கிய விடைகளைக் கொண்டு கம்ப்யூட்டரில் மறுமதிப்பீடு செய்யப்படும்.
இந்தப் பணிகள் அனைத்தும் சில நாள்களில் முடிக்கப்பட்டுவிடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் நியமனத்தில் எத்தகைய இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுவது என்பது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, "தத்கால்’ திட்டத்தின் கீழ், 5ம் தேதி முதல், 8ம் தேதி, பகல் 1 மணி வரை, தேர்வுத் துறை இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க பள்ளிக் கல்வித்துறை சான்று வழங்கியுள்ளது.

சி.பி.எஸ்.சி. பள்ளிகள் நடத்துவதற்கு கல்வித்துறை அனுமதிச் சான்று வழங்கியுள்ளது.
சமச்சீர் கல்வி திட்டம் வருவதற்கு முன், நான்கு வகை கல்வித் திட்டங்கள் அமலில் இருந்தன. இதில், இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளை மொழிப்பாடமாக கற்பதற்கு வழிவகை இருந்தது. சமச்சீர் கல்வி திட்டத்தில், இந்தி மொழிப் பாடமாக கற்க முடியாது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க பள்ளிக் கல்வித்துறை சான்று வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒன்பது நாள் காலாண்டு விடுமுறைக்குப் பின், அனைத்துப் பள்ளிகளும், இன்று (04.10.2012) மீண்டும் திறக்கப்படுகின்றன.

கடந்த மாதம், பள்ளிகளில், காலாண்டுத் தேர்வுகள் நடந்தன. தேர்வுக்குப் பின், 25ம் தேதியில் இருந்து, விடுமுறை விடப்பட்டது. ஒன்பது நாள் விடுமுறைக்குப் பின், அனைத்துப் பள்ளிகளும், இன்று (04.10.2012) மீண்டும் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, இன்று, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதற்கு வசதியாக, கடந்த மாதமே, அனைத்துப் பள்ளிகளுக்கும், பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டன.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் விபரங்களை சேகரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் விபரங்களை சேகரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார், சுயநிதி, மெட்ரிக், கேந்திரிய வித்யாலயா, சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள், கட்டடங்கள், கருவிகள், பள்ளி அமைவிடம் என, அடிப்படை விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி இயக்கம், உயர், மேல்நிலைப்பள்ளிகளில் அனைவருக்கும் இடை நிலை கல்வி இயக்கம் சார்பில் சேகரிக்கப்பட உள்ளது. அடுத்த வாரத்தில் துவங்க உள்ள, இந்தபணிகளின் தகவல்கள் அனைத்தும், ஒரு மாதத்திற்குள் கம்ப்யூட்டரில் பதிவு செய்து,பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தகவல் தொகுப்பு திரட்டும் படிவமும் வழங்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, "தத்கால்’ திட்டத்தை, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, “தத்கால்’ திட்டத்தை, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தேர்வுத் துறை அறிவிப்பு: பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, விரைவில் துவங்க உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவ, மாணவியர், “தத்கால்’ திட்டத்தின் கீழ், 5ம் தேதி முதல், 8ம் தேதி, பகல் 1 மணி வரை, தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.nic.in), பதிவு செய்து, 625 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக, புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில், மற்றொரு புகைப்படம் ஒட்டி, தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று, உரிய இணைப்புகளுடன், தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், 9ம் தேதி வரை, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். தத்காலில் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர், 12, 13 ஆகிய தேதிகளில், குறிப்பிட்ட மையங்களுக்குச் சென்று, “ஹால் டிக்கெட்’ பெறலாம். முழுமையான விவரங்களுக்கு, இணையதளத்தைப் பார்க்கலாம். இவ்வாறு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே, பிளஸ் 2 தனித்தேர்வு, இன்று துவங்குகிறது. 50 ஆயிரம் மாணவ, மாணவியர், இத்தேர்வை எழுதுகின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கேள்விகள், அதற்கான, "கீ-ஆன்சர்’ ஆகியவற்றை, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, பேராசிரியர் அடங்கிய நிபுணர் குழு தயாரிக்கிறது. இவற்றில் ஏதேனும் குளறுபடி நடந்தால், சம்பந்தபட்ட நிபுணர் குழுவே பொறுப்பாகும் வகையில், விதிமுறையில் திருத்தம் கொண்டு வர, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கேள்விகள், அதற்கான, “கீ-ஆன்சர்’ ஆகியவற்றை, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, பேராசிரியர் அடங்கிய நிபுணர் குழு தயாரிக்கிறது. இவற்றில் ஏதேனும் குளறுபடி நடந்தால், சம்பந்தபட்ட நிபுணர் குழுவே பொறுப்பாகும் வகையில், விதிமுறையில் திருத்தம் கொண்டு வர, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை, மே, 27ல், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில், 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவிற்குப்பின், பணியிடத்திற்கு ஒருவர் வீதம், சான்றிதழ் சரிபார்ப்பு முகாமை, ஆகஸ்ட்டில், டி.ஆர்.பி., நடத்தியது. முன்னதாக, கேள்விகளுக்குரிய விடைகளை (கீ-ஆன்சர்) டி.ஆர்.பி., வெளியிட்டதும், பல விடைகள் தவறானவை என, விண்ணப்பதாரர் தெரிவித்தனர். இதுதொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில், “50க்கும் அதிகமாக தவறான விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே, முடிவு வெளியிடப்பட்டு உள்ளதால், ஒட்டுமொத்த தேர்வுப் பட்டியலும் ரத்து செய்யப்படுகிறது’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது. “மூன்று வாரங்களுக்குள், அனைத்து விடைத்தாள்களையும் மறு மதிப்பீடு செய்து, புதிய தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும்’ எனவும், கோர்ட் தெரிவித்தது. இதையடுத்து, அனைத்து தேர்வர்களின் விடைத்தாள்களையும், மறு மதிப்பீடு செய்வதற்கான பணிகளில், டி.ஆர்.பி., இறங்கி உள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: “இடஒதுக்கீடு முறையை சரியாக கடைபிடிக்கவில்லை’ என, ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி தான், தேர்வுப் பட்டியலை தயாரித்தோம். உள் ஒதுக்கீடு தொடர்பாக, சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதை நிவர்த்தி செய்ய, அரசாணையில் திருத்தம் கொண்டு வர வேண்டும். கேள்விகளுக்குரிய விடைகளை, டி.ஆர்.பி., தயாரிப்பதில்லை. ஒவ்வொரு பாட வாரியாக, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் தான் தயாரிக்கின்றனர். ஒரு நிபுணர் குழு தயாரித்த, கீ-ஆன்சரை, மற்றொரு நிபுணர் குழு, தவறு என்கிறது. அப்படி இருக்கும் போது, எங்களை எப்படி குறை கூற முடியும்? எனவே, தவறாக கேள்வி கேட்டாலோ, கீ-ஆன்சர்களை தயாரித்தாலோ ஏற்படும் குளறுபடிகளுக்கும், பிரச்னைகளுக்கும், சம்பந்தபட்ட நிபுணர் குழுவே பொறுப்பேற்க வேண்டும் என, விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர உள்ளோம். “ஸ்கேன்’ செய்யப்பட்ட விடைத்தாள்கள், அப்படியே இருக்கின்றன. எனவே, விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்வதில், எவ்வித சிக்கலும் ஏற்படாது. ஐகோர்ட் நிர்ணயித்த கால கெடுவிற்குள், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்து, புதிய பட்டியலை வெளியிடுவோம். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வு பெற்றவர்களுக்கு சிக்கல்: சான்றிதழ் சரிபார்ப்புக்குப்பின் இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. எனினும், பணிக்கு, ஒருவர் என்ற வீதம், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதால், இதில் பங்கேற்ற அனைவரும், தங்களுக்கு வேலை கிடைத்து விட்டதாக, மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றனர். இந்நிலையில், மறுமதிப்பீடு செய்வதன் மூலம், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களின் நிலையில் மாற்றம் ஏற்படலாம்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், இன்னும் ஆறு மாதங்களுக்குள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; தவறினால், கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்’என, மத்திய, மாநில அரசு களுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

“நாடு முழுவதும் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், இன்னும் ஆறு மாதங்களுக்குள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; தவறினால், கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்’என, மத்திய, மாநில அரசு களுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச் சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் என்ற, தன்னார்வ அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது; அதில் கூறப்பட்டிருந்ததாவது: நாட்டில் உள்ள பல, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. குறிப்பாக, குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை; இதனால், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால், கிராமப்புறங்களில் உள்ளவர்கள், தங்களின் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கின்றனர். எனவே, அனைத்து பள்ளிகளிலும், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனு, நீதிபதி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது; அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பள்ளிகளில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை என்ற தகவல், வேதனை அளிக்கிறது. இந்த விஷயத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு பொறுப்பு உள்ளது. இன்னும் ஆறு மாதங்களுக்குள், அனைத்து பள்ளிகளிலும், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில், கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இட ஒதுக்கீட்டை தவறுதலாக பின்பற்றியதோடு, 50 வினாக்களுக்கான பதில்கள், முற்றிலும் தவறுதலாக இருந்ததால், முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வை, சென்னை ஐகோர்ட், ரத்து செய்துள்ளது.

ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ள, தேர்வு பெற்றவர் பட்டியலும், இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, மூன்று வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், 2,395 முதுகலை ஆசிரியர் பட்டதாரி பணியிடங்களை நிரப்ப, பிப்ரவரி, 28ம் தேதி, அறிவிப்பு வெளியிட்டது. இத்தேர்வில், முதன்மை பாடம், கல்வி முறை மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் இருந்து, 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில், கொள்குறி வினாக்களுக்கு, கொடுக்கப்பட்ட பதில், முற்றிலும் தவறாக இடம் பெற்றது. தேர்வாணையம் வெளியிட்ட, தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில், தேர்விலேயே முதல் மதிப்பெண் பெற்றவர்களை, பொதுப்பிரிவில் சேர்க்காமல், அவர்களின் சாதி அடிப்படையிலான பிரிவில் சேர்த்துள்ளனர். இதனால், இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாதது தெரியவந்தது. இதையடுத்து, தேர்வு எழுதியவர்களில் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பு: பொதுப் பிரிவுக்கான தேர்வு முடிவுகளை, வாரியம் முறையாக பின்பற்றவில்லை. கேள்வித்தாளில் இடம் பெற்ற, வினாக்களுக்கான பதில், முற்றிலும் தவறானதாக இருந்ததால், மாணவர்கள் மதிப்பெண் பெறுவதும் தடைபட்டு உள்ளது. எனவே, தேர்வாணையத்தின் தேர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. மூன்று வாரத்திற்குள், புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்களை, தேர்வாணையம் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான, “கீ ஆன்சர்’ தவறு என்று, ஐகோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் குறித்து, மறு மதிப்பீடு செய்து, பிரச்னைக்குரிய விடைகளை இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிடப்படும். ஏற்கனவே ஒரு பணியிடத்திற்கு ஒருவர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும். இதற்கு அழைக்கப்படுபவரின் பட்டியலும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.