பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டல் செய்ய ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, இந்தாண்டு முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேவையான நடவடிக்கையை, தேர்வுத் துறை எடுத்துள்ளது. மாணவர்கள், விடைத்தாளின் நகல் கிடைக்கப்பெற்ற ஐந்து நாட்களுக்குள், “கோர் பேங்கிங் சர்வீஸ்' வசதி உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏதாவது ஒரு கிளை மூலம் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள்கள் நகல்கள் கேட்டு, விண்ணப்பித்து, நகல்கள் பெற்றவர்கள் மட்டுமே மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டலுக்குத் தகுதியானவர்கள். ஒரு பாடத்திற்கு மேல் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல், கட்டணத் தொகையையும் தனித்தனியாக செலுத்த வேண்டும்.

இதற்கான கட்டணம் செலுத்துச் சீட்டின் மாதிரிப்படிவம், விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவுரைப்படிவம்,”www.dge.tn.nic.in' என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்கள், தங்களின் பெயர், தேர்வுக்கு வழங்கப்பட்ட பதிவெண் மற்றும் செலுத்தப்பட்ட தொகை ஆகியவற்றை செலுத்துச் சீட்டில் தெளிவாக குறிப்பிட வேண்டும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தின் அனைத்து பகுதியும் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், விடைத்தாள்களின் நகல் அனுப்பப்படும் உறையின் மீது, ஒட்டப்பட்டுள்ள துரித அஞ்சல் எண்ணை, இணையதளத்தில் பதிவு செய்தால் மட்டுமே, விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதால், துரித அஞ்சல் உறையைப் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். விடைத்தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டல் தொடர்பான அனைத்துத் தகவல்களுக்கும், தொடர்பு கொள்ள வேண்டிய முகாம் அலுவலர், தொலைபேசி எண் மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்கள், இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடைத்தாள்களின் நகல்கள் கோரி, விண்ணப்பித்தவர்களுக்கு, முதற்கட்டமாக, உயிரியல் பாடத்திற்கான விடைத்தாள் நகல்கள் அனுப்பும் பணி, எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இதற்கான பணியை, தனிக்குழு செய்து வருகிறது. விடைத்தாள் நகல்கள் கேட்டு, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உயிரியல் பாடத்தைத் தொடர்ந்து, பொறியியல் மற்றும் இதரப் பாடப்பிரிவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், விடைத்தாள் நகல்கள் அனுப்பி வைக்கப்படும் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: