பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை : முக்கிய அம்சங்கள்

# 2012-13ஆம் கல்வியாண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் . இதன் காரணமாக 2011-12 கல்வி ஆண்டின் தொடக்கத்தில் உள்ள உயர்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை 2234 இருந்து 2744 ஆகவும் மேனிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2388 இருந்து 2588 ஆகவும் அதிகரிக்கும்.

# 2012-2013ஆம் கல்வியாண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (Continuous and Comprehensive Evaluation System) பள்ளி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

# தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு 2013-2014ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பிலும் 2014-2015 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிலும் அறிமுகம் செய்யப்படும்.

# ஆசிரியர் இல்லாத பள்ளிகளுக்கு 49,365 ஆசிரியர் பணியிடங்கள் 2011-12 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாசிரியர்கள் அனைவரும் 2012-2013ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்து நியமனம் செய்யப்படுவார்கள்.

# குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன்படி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கு, கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு அரசின் கொள்கையான எழுத்துத் தேர்வு ஆகியவை தமிழக பள்ளிகளில் கற்பித்தல் பணியில் ஆற்றல் மிக்க ஆசிரியர்களை தேர்வு செய்ய வழிவகை செய்யும்.

# ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் எனத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

# 2012-2013ஆம் கல்வி ஆண்டிலிருந்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் சிறப்பு அடையாள அட்டை நான்கு வண்ணமிகு சீருடைகள், காலணிகள், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி, உலக வரைபடப் புத்தகம், வண்ணப் பென்சில்கள் முதலியவற்றைப் பெற இருக்கிறார்கள்.

# 2012-2013ஆம் கல்வி ஆண்டிலிருந்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்படும்.

# மார்ச், ஏப்ரல் 2012-ல் நடைபெற்ற 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும், மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய நுழைவுச் சீட்டு அரசு தேர்வுதுறையால் வழங்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள 19,67,831 மாணவர்களுக்கு அவர்கள் மாணவர் புகைப்படம் மற்றும் பாதுகாப்பு குறியீடு கொண்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

# 2012-13ஆம் கல்வியாண்டில் தகவல், தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு சிறந்த முயற்சியாக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் கல்விக்காக தனியான அலைவரிசை ஒன்று அறிமுகப்படுத்தப்படும். இது மாணவர்களுக்கு பள்ளி நேரம் முடிவடைந்த பிறகு வீட்டிலிருந்த படியே தரமான கல்வியை பெறுவதற்கு துணைபுரியும். மேலும், பெரும்பாலான மாணவர்களுக்கு எட்டாக் கனியாக விளங்கும் சிறந்த தனிப்பயிற்சி, கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் கற்றல் தொடர்பான நிகழ்ச்சிகள் இவை அனைத்தும், இதன் மூலம் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

# பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையிலான வல்லுனர் குழு , தற்போதைய கல்வி முறை, கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்து கல்வியின் தரத்தை உயர்த்துதல், உட்கட்டமைப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை செய்யும். மேலும், தமிழகத்தை கல்வியில் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும்.

# தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு, 2012 உருவாக்கப்படும். இதன் மூலம் எதிர்காலத்தில் மாநிலத்தில் உயர்ந்த கல்வித் தரத்தினை வழங்க புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

# தற்போதுள்ள மேனிலைக் கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பொருட்டு, உரிய பரிந்துரைகள் வழங்க உயர்மட்ட குழு அமைக்கப்படும்.

# பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை கணினி மயமாக்க 33.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

# 15 முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு புதிய வாகனங்கள் வழங்க 90 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தின் அட்டவணை பதிவேடுகளை டிஜிட்டல் முறையில் பராமரிக்க 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2011-2012 ஆம் ஆண்டில் 3118 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் 5,30,729 மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்க திட்டமிடப்பட்டது. அவற்றில் இது வரை 5,640 மடிக் கணினிகள் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 5,25,089 மாணாக்கர்களுக்கும் 2012-13 கல்வி ஆண்டில் கல்வி பயிலும் 5,50,947 மாணாக்கர்களுக்கும் ஆக மொத்தம் 10,76,036 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் 2012-13 கல்வி ஆண்டிற்குள் வழங்கப்படும்.

# சதுரங்க விளையாட்டினை பள்ளிகளில் அறிமுகப்படுத்தல்

# கல்விசார் மேலாண்மைத் தகவல் முறையில் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் போன்றோரது முழுமையான தகவல்கள் 2012-13 கல்வியாண்டின் இறுதிக்குள் கிடைக்கப் பெறும். இந்த வலைதளம் கல்விப் பாடப்பொருள் வழங்கும் இணையமாகவும், துறைகளுக்கிடையே தொடர்பினை அளிக்கும் விதமாகவும் செயல்படும். 2012-13ம் கல்வியாண்டின் இறுதிக்குள் பள்ளிகள் சார்ந்து அனைத்துத் தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வண்ணம் வழிவகை செய்யப்படும். இது தகவல் மற்றும் புள்ளிவிவர பரிமாற்றத்தினை மேம்படுத்துவதுடன் தரவு பகுப்பாய்வுக்கும் / செயலாக்கத்திற்கும் உதவிகரமாக அமையும்.

# ஆசிரியர்களின் வருகைப் பதிவினை குறுஞ்செய்தி மூலம் கண்காணிப்பதற்கு கணினி பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கப்படும் இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் நாளான 2012, ஜூன் 1ம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வரும்.

# ஜீன், 1, 2012 முதல் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

# 2011-12 ம் கல்வி ஆண்டு முதல் ஐந்தாண்டுகளில் 431 உயர்நிலைப் பள்ளிகளிலும், 1910 மேல்நிலைப்பள்ளிகளிலும் (மொத்தம் 2341 பள்ளிகள்) தகவல் தொடர்பு தொழில்நுட்ப வசதி உருவாக்கி, உரிமையாக்கி, இயக்கி மாற்றுதல்‛ (Built, Own, Operate and Transfer – BOOT model) மாதிரியின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும்.

# திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துரை, அயிலாப்பேட்டை, எட்டரை, சோமரசம்பேட்டை மற்றும் இனாம்குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அறிவுசார் வகுப்புகள் (SMART SCHOOLS ) ஏற்படுத்தப்படவுள்ளன.

# மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தோடு இணைந்து ப்ராஜக்ட் சிக்ஷாஎனும் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்கபடும்.

# தமிழ்  மற்றும் ஆங்கில வழி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணினிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பாடநூல்கள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்.

8 responses

  1. computer teacher life????????????????

  2. enna seayerudhu theriyala

  3. computer teacher valki veasta poitechu

  4. nallathu nadantha sarithan

  5. announcements in assembly – release if possible

  6. evalavu velaikalaiyum seyal padutha districtlevala non teaching staff illai.oru varudhathukku 1000 pallikalukkumel H.Scool matrum Hr sec school ena tharam uyarthum arsu asiriyar paniyidam mattu othuki avrkaluku nivaga udhavi seium non teaching post saction seiyammal asiyarkalai maraimugamaga nivagavelaiyil edupadduthuvadu mattrum traninig endra perayrilum test endrum manavarkalidam inayamal nalla kaviyinai eppadi uruvakka mudiyumkarthi.kaveripakkam,9443423014

  7. This comment has been removed by the author.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: