தமிழகத்தில் 710 நடுநிலைப் பள்ளிகளை 2011-2012ம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தரம் உயர்த்தப்படும் இந்தப் பள்ளிகளில் பணியாற்ற 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 710 நடுநிலைப் பள்ளிகளை 2011-2012ம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தரம் உயர்த்தப்படும் இந்தப் பள்ளிகளில் பணியாற்ற 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வெள்ளத்தினால் அடித்துச் செல்ல முடியாத, வெந்தணலால் வேகாத, கள்வரால் கவர முடியாத, வேந்தரால் கொள்ள முடியாத, அழியாச் செல்வமாம் கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும் அளிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, அதிலும் குறிப்பாக, ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அனைவரும் இடைநிற்றல் ஏதுமின்றி பள்ளியில் கல்வி பயிலுவதற்கு ஏதுவாக, புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்குவது, மதிய உணவு வழங்குவது; கல்வியினை இடையே விட்டு செல்லாமல் இருப்பதற்காக உதவித் தொகை வழங்குவது; மிதிவண்டி வழங்குவது; மடிக்கணினி வழங்குவது; போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், மாணவர்களின் நலனுக்காகவும், அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக அமையும் வண்ணம் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பள்ளிகள் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில், 710 ஊராட்சி ஒன்றிய/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாக 2011-12-ஆம் ஆண்டில் தரம் உயர்த்தவும், அப்பள்ளிகள் 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்டு 2011-12 ஆம் ஆண்டிலேயே முழுமையாக செயல்படவும், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் 710 அரசு/ மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை உயர்நிலைப் பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் 1 ஆய்வக உதவியாளர் வீதம் 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் 1 இளநிலை உதவியாளர் வீதம் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு 113 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரத்து 600 ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு தரம் உயர்த்தப்படும் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, புதியதாக வகுப்பறைகள், அலுவலக வசதிகள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகம், நூலகம், கழிப்பிடம் மற்றும் தளவாடப் பொருட்கள் சார்ந்த செலவினங்களுக்காக பள்ளி ஒன்றுக்கு ரூ 58.12 லட்சம் வீதம் 710 பள்ளிகளுக்கு 412 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல் அளித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதுமட்டுமல்லாமல், 5 கீ.மீ. சுற்றளவில் உயர்நிலைப் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள்/நடுநிலைப் பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இடங்கள், 8 ஆம் வகுப்பில் ஊட்டுப் பள்ளி மாணவர் எண்ணிக்கையுடன் 70 மாணவர்களுக்கு குறையாமல் சேர வாய்ப்புள்ள நடுநிலைப் பள்ளிகள், போக்குவரத்து வசதியற்ற, இயற்கை/செயற்கை தடை உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இதேபோன்று 2009-ஆம் ஆண்டில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளுக்கும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தவும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 1 கோடியே 19 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ், தொடக்கக் கல்வித் துறையில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளில் பணிபுரிய 1,581 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய 1,282 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், ஆக மொத்தம் 2,863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 75 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
இதேபோன்று 6 முதல் 8 ஆம் வகுப்புகளில் பணிபுரிய 3,565 கூடுதல் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 58 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவாகும். மேற்கூறிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை சேர்த்து மொத்தம் 6,428 கூடுதல் பணியிடங்களை தோற்றுவிப்பதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு மொத்தமாக 134 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவாகும்.
மேலும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் நலன் கருதி, 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக 2011-12 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பணியிடங்கள் வீதம் 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 71 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்.
பள்ளிக்கல்வித் துறையில் அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகள் காரணமாக ஊரகப் பகுதிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் எந்தவிதச் சிரமுமின்றி கல்வி பயில வழி வகுக்கும்.

33 responses

 1. record break upgraded schools in the single year.Heart felt thanks to chief minister.

 2. awaiting the list of schools that are upgraded to high schools

 3. THE NEWS HAS BEEN WAITED FOR THE FOUR MONTHS.THANK YOU VERY MUCH FOR THE CHIEF MINISTER.SHE HAS LIGHTED THE THREE THOUSAND UNEMPLOYEES HOUSEHOLD.THANKS A LOT.

 4. Waiting For The Upgraded school & Second List of High School Headmaster's Promotion List

 5. when will the list will be populate

 6. THANK YOU FOR THE CHIEF MINISTER OF TAMILNADU FOR THIS ANNOUNCEMENT. H.K.SUBRAMANIAN, STATE PRESIDENT,SASTRA DIST.BT.ASSN. T.V.MALAI.

 7. up grade high school names please.

 8. R.Velayutham Retd.B.T.Asst Villupuram

 9. It is great New in Educational worldVeeraraghavan.

 10. MY HEARTFUL THANKS TO THE HONOURABLE CHIEF MINISTER. SHE HAS LIGHTED THE POOR PUPIL

 11. A.Thirugnanasambandam. M,A.B.Sc.,B.Ed.,This is a very great achievement of Amma's Government. Splendid Amma !

 12. IT IS GOOD NEWS TO THE TEACHING GRADUATES THANKS TO CHIEF MINISTER.

 13. very useful announcement.pls flash school list as immediate as possible K.P Rakshith ,dist sec.TNTF.Tiruvannamalai dist

 14. I am also very eager to know the schools list

 15. I am also very eager to know the schools list

 16. thank you our honourable c.m. but please once again think about b.ed teachers situation? tet and trb exam. how it is possible. nearly we are waiting past 20 years. please mam. think about teachers?

 17. list of schooLs we want

 18. I am also very eager to know the upgraded schools list

 19. Up grade school name List please

 20. GOOD JOB DONE………..THANX 2 HONORABLE C.M.SHE ALWAYS TAKES EFFORT TO GIVE BETTER EDUCATION.I'M TOTALLY PLEASED.I SURELY FEEL ITS GONNA BE A MILE STONE IN THE EDUCATION DEPARTMENT.-MARJORIE.T.POPPY MSc BEd MPhil(zoology) P.U.M.SCHOOL,MADAMBAKKAM.VIA GUDUVANCHERY.

 21. Thank you so much for this announcement. Neutrality should be maintained while upgrading the schools. once again thanks a lot to jaya.

 22. Heartly thanks to CM for Thanjavur district, Thiruvonam block,KAYAVUR MIDDLE SCHOOL upgrade. Kayavur C.Ramachandran D.M.E.,

 23. Heartly thanks to CM for Thanjavur district, Thiruvonam block,KAYAVUR MIDDLE SCHOOL upgrade. R.MuthukumarB.B.A., Kayavur

 24. Heartly thanks to CM for Thanjavur district, Thiruvonam block,KAYAVUR MIDDLE SCHOOL upgrade. R.MUTHUKUMAR B.B.A., KAYAVUR

 25. HIGHLY POPULATED SCHOOLS SHOULD BE DIVIDED AS BOYS AND GIRLS SCHOOL

 26. What happened for selected three thousand BTassadent teachers posting ……? Three thousand some thing teachers life……?

 27. Do the upgraded schools will have Head Masters during the academic 2011-2012 itself?

 28. what about the most junior h.m's of the middle schools? will they be depromoted as B.T.,?If then,why are they promoted as H.m's of middle schools?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: