ஒவ்வொரு மாவட்டத்திலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு, அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும்" என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.

“ஒவ்வொரு மாவட்டத்திலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு, அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும்என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில், 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளிகளில், 5,253 பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள், 5,392 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் 5,904 தையல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சி.இ.ஓ., தலைமையில் குழு:அறிவிக்கப்பட்டுள்ள 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்களையும், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பள்ளிக் கல்வித் துறை) தலைமையிலான குழு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும்.

இந்தக் குழுவில், அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மை கல்வி அலுவலர், உறுப்பினர்-செயலராக இருப்பார். மேலும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட அளவில் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி அலுவலர் ஒருவர், சிறந்த ஓவிய ஆசிரியர் ஒருவர், தையல் மற்றும் இசை, பாட்டு ஆகியவற்றில் சிறப்பு வாய்ந்த ஒருவர் ஆகியோரும் குழுவில் இடம் பெறுவர்.

நியமன அதிகாரம்:உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான நியமனங்களை, முதன்மை கல்வி அதிகாரிகளும், தொடக்கப் பள்ளிகளுக்கான நியமனங்களை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் மேற்கொள்வர்.

*பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, நேர்முகத் தேர்வு மூலம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்.

* பகுதி நேர ஆசிரியர்கள், நியமிக்கப்படும் பள்ளிகளில் வாரத்திற்கு குறைந்தது 9 மணி நேரம் பணிபுரிய வேண்டும். அதாவது, ஒரு வாரத்திற்கு மூன்று நாட்களில், தலா அரை நாட்கள் பணிபுரிய வேண்டும். காலை 9.30 – 12.30 மணி அல்லது பிற்பகல் 2 – 5 மணி ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு நேரம், ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும். இவர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

* மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (அனைவருக்கும் கல்வித் திட்டம்) மூலம், கிராம கல்விக்குழுவிடம் சம்பளப் பணம் ஒப்படைக்கப்பட்டு, அந்தக் குழு மூலம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

* ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர், அதிகபட்சமாக நான்கு பள்ளிகளில் நியமிக்கப்படுவார். அவர், அந்த நான்கு பள்ளிகளிலும் தலா மூன்று அரை நாட்கள் பணிபுரிய வேண்டும். இதற்கான சம்பளத்தை நான்கு பள்ளிகளும் வழங்கும்.

* 10 சதவீத ஆசிரியர்கள், காத்திருப்போர் பட்டியலுக்காக தேர்வு செய்யப்படுவர். அதிக கல்வித் தகுதி கொண்டவர்கள் மற்றும் பெண்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.

* இந்த பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது தான். திட்டக் காலம் முடியும் வரை மட்டுமே, இந்த ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டியிருக்கும். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, எந்நேரத்திலும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்வதற்கும் வழிவகை உள்ளது.

* அரசால் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற அனைத்து நாட்களிலும், இந்த வகை ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீதர் கூறியுள்ளார்.

One response

  1. nooru nal vealai aasireyarhalukkum vanthachudoi…?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: