34 உதவி தொடக்க கல்வி அலுவலர் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் , போட்டித் தேர்வு மூலம் 34  உதவி தொடக்க கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பம் வழங்கும் தேதி 04.11.2011, விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2011, தேர்வு நாள் :08.01.2012. விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 50. விண்ணப்பம் வழங்கப்படும் இடம் அனைத்து மாவட்ட CEO அலுவலகம் .

1. Advertisement / Notification

2. Prospectus

தொடக்க கல்வித் துறையில் காலியாக உள்ள 34 உதவித் தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களில் நேரடியாக பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர். மேற்கண்ட அலுவலர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தொடக்க கல்வி துறையில் 34 உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ்3, ஆங்கிலம்4, கணக்கு 3, இயற்பியல்3, வேதியியல் 6, தாவரவியல்4, விலங்கியல் 4, வரலாறு 3, புவியியல் 4 பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர். பி.ஏ, பிஎஸ்சி மற்றும் பி.எட் படித்த 35 வயதுக்குட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு 3 மணி நேரம் நடக்கும். முதன்மைப் பாடம் 110 மதிப்பெண், கற்பித்தல் முறை 30, பொது அறிவு 10 மதிப்பெண் என மொத்தம் 150 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 45 மதிப்பெண்ணும், இதர மாணவர்கள் 60 மதிப்பெண்ணும் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
தேர்வு மையங்கள் 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்படும். ஒரு பதவிக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் சான்று சரிபார்ப்பு நடத்தி பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அப்போது இன சுழற்சி முறையும் கடைபிடிக்கப்படும். தேர்வுக் கட்டணமாக ரூ. 300 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை என்ற பெயரில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.
ஸ்டேட் பாங்க, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கார்ப்ரேஷன் வங்கி ஆகியவற்றில் ஏதாவது ஒரு வங்கியில் டிடி எடுக்க வேண்டும். பாஸ்போர்ட் போட்டோ, டிடி ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேற்கண்ட தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 4ம் தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ரூ. 50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

17 responses

 1. 35 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இயலாதா?

 2. any reservation for working teachers

 3. Is thee any priority to the teachers who are working at present?. Please answer to this question. It will help the working peoples.

 4. Candidates those who have B.Ed.,degree no age limit for the employment and written examination for past previous years. what about now?

 5. In service people middle school H.M. to A.E.E.O.is the promotion cadre.At that time no age limit for promotion. But out of service candidates(unemployment)ie.direct recruitment they give restriction When compared Group II Exam

 6. what about promotion for aeo?by, kumaran.s.v

 7. The Nilgiris Govt School PG and BT Teachers got their internal district transfer order last 19th Sep. 2011 counselling. Due to the TamilNadu Election their relives’ were stopped from their existing School. Now election over and all the formalities over, but the teachers are not being transferred, But some school some teachers were relived, but most of the school HM / HM in charge are being waiting for the CEO Order. What is going on the in the Educational Department? All the teachers are mentally fed up. Do you have any information regarding this relive?

 8. i am finished B.Lit & Tamil Pandit Tranning, My question is tamilpandit tranning is equal to B.ED if its possible to attend this exam?

 9. நான் பி.லிட்(B.Lit tamil & Dip.Tamil pandit ) மற்றும் தமிழ் புலவர் பயிற்சி முடித்துளேன்.எழுத்து தேர்வு எழுத விண்ணப்பிக்கலாமா??

 10. I need syllables for this exam can you sent to me…….

 11. how is possible the age limit 35 yrs to write the trb exam

 12. naan bca,bed computer science mudiththullen, naan apply pannalaamaa?

 13. B.SC B.ED COMPUTER SCIENCE MUDITHULLEN. NAN INTHA EXAM KU APPLY PANNA MUDIUMA?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: