Monthly Archives: July, 2010

>அரசு பள்ளிகள் தரம் உயர்வு

>

சென்னை:பத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணை:நடப்பு கல்வியாண்டில் 125 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஏற்கனவே உத்தரவு வெளியிடப்பட்டது. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனரின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக 10 உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு ஆணையிடுகிறது.திருவள்ளூர்-பெரும்பேடு, வேலூர்-இசையனூர், திருவண்ணாமலை-ஐங்குணம், கோவை-மண்ணூர் ராமநாதபுரம், மதுரை-அச்சம்பட்டி, நாகை-சீர்காழி, தஞ்சாவூர்-தெக்கூர், திண்டுக்கல்-ஆர்.வெள்ளோடு, கரூர்-பெரியகுளத்துப்பாளையம் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

TAMIL FONTS DOWNLOAD

>TAMIL FONTS DOWNLOAD

>

எல்லாச் சாலைகளும் விபத்தை நோக்கி…

சாலைகள் மோசமாக இருந்தால்தான் விபத்துகள் நிகழும் என்பது மாறி, சாலைகள் தரமானதாக இருந்தாலும் கோரமான விபத்துகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. விபத்தில் 10 பேர், 15 பேர் என கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பலியாவது வேதனையை அளிக்கிறது.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை இப்போது நான்குவழிச் சாலைப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. பளபளக்கும் சாலையில் வாகன ஓட்டுநர்கள் விவேகத்தை இழந்து அசுர வேகத்தில் செல்வதால் விபத்துகள் நிகழ்கின்றன.
விபத்துகளால் சொந்தங்களை இழந்தவர்களின் சோகத்துக்கு எதுவுமே ஈடில்லை. பொருளாதாரத்துக்கே ஆதாரமாக இருப்பவர்களை விபத்தில் பலிகொடுத்துவிட்டுத் தவிக்கும் குடும்பங்கள். வாழ வேண்டிய வயதில் விபத்தில் சிக்கித் தாங்களும் பலியாகி குடும்பத்தினரின் நிம்மதியையும் நிரந்தரமாகத் தொலைக்கும் இளைஞர்கள். இப்படியாக விபத்து எழுதும் சோகக் கதைகள் ஆயிரம் ஆயிரம். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மட்டும்தான் சோகம் என்றில்லை. பலத்த காயமடைந்து உடல் உறுப்புகளை இழந்து பாதிக்கப்படுவோரின் குடும்பங்களுக்கும் பேரிழப்பு. உடல்ரீதியான பாதிப்பு மட்டுமன்றி, மருத்துவச் செலவு, வேலைக்குச் செல்ல முடியாததால் ஏற்படும் இழப்பு என அந்தக் குடும்பமே நிர்கதியாகிவிடும்.
விபத்துகள் எதிர்பாராமல் நிகழ்பவைதாம். ஆனால், பெரும்பாலான விபத்துகளின் காரணங்களை ஆராய்ந்தால் மனிதத் தவறுகளே காரணம் எனத் தெரியவரும். வேகமாக வாகனங்களை இயக்குவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, சரியான தூக்கமின்றி தொடர்ச்சியாக வாகனங்களைச் செலுத்துவது… இவை போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.
அண்மையில் தருமபுரி அருகே மினி லாரியும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 18 பேர் பலியாயினர். மினி லாரி ஓட்டுநர் மது அருந்திவிட்டு ஓட்டியதால் அந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரியவந்தது.
முதலில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் மினி லாரியில் ஆள்கள் ஏறியது தவறு; ஓட்டுநர் குடித்திருக்கிறார் என்று தெரிந்தும் அவரை வாகனத்தை இயக்க அனுமதித்தது அடுத்த தவறு. இப்படி தவறுகளை எல்லாம் நம் பக்கம் வைத்துக்கொண்டு விபத்து விபத்து என்று அரற்றுவதில் அர்த்தமில்லை.
ஆளில்லா ரயில்வே கேட்டில் விபத்துகள் தொடர்வது அவலத்திலும் அவலம். அத்தனை பெரிய ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடந்துசெல்ல முயன்று விபத்தில் சிக்குவதைப் போன்ற அறிவீனம் எதுவும் இல்லை.
ஒரு விபத்தில் இருந்து ஓராயிரம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், யாருக்கோ வந்த விதியாகத்தான் ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். ஒரு ஆட்டோவில் 10-க்கு மேற்பட்டோர் செல்வது, படிகளில் தொங்கிக் கொண்டே பயணம் செய்வது என்று அத்துமீறுவதில் மக்களுக்கு அப்படி என்ன ஆர்வமோ தெரியவில்லை.
சாலைவிதிகளை மீறுவதுதான் விபத்துக்கு அடிப்படைக் காரணம். சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வது, அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றிச் செல்லுவது, மிக வேகமாக வாகனங்களை இயக்குவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போக்குவரத்துக் காவலர்கள் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அளவுக்கு அதிகமாக ஆட்டோவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடாது எனும் உத்தரவை காவல்துறை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். ஆட்டோவில் 5 பேருக்குமேல் ஏற்றினால் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என பெற்றோரும் உறுதியாக இருக்க வேண்டும்.
விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பள்ளி, கல்லூரி வாகனங்களை 50 கி.மீ. வேகத்துக்குமேல் இயக்க முடியாதவாறு வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் விபத்துகளை நிச்சயம் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். இந்தக் கட்டுப்பாட்டை பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்துக்குமே நிர்ணயிக்க வேண்டும்.
மொத்தத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் ஏராளமான விபத்துகளைத் தவிர்த்துவிடலாம். குடும்பத்துடன் வெளியூர் செல்லத் தனி வாகனம் ஏற்பாடு செய்தால், அந்த வாகன ஓட்டுநருக்குப் போதிய ஓய்வு அளித்து வாகனத்தை இயக்கச் செய்ய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
நடந்து சென்றாலும் சரி, வாகனத்தில் சென்றாலும் சரி போக்குவரத்து சிக்னல்களை மதித்துச் செல்ல வேண்டும். அவ்வாறே மதிக்க பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
பேருந்தில் பயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோமே… அந்தப் பேருந்து அதிவேகமாகச் சென்றால், அவ்வாறு செல்லக் கூடாது என தைரியமாக ஓட்டுநருக்கு அறிவுறுத்த வேண்டும்.
விபத்துகளைச் சட்டம் போட்டுத் தடுத்து நிறுத்திவிட முடியாது. சுயக் கட்டுப்பாடு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுகளால் மட்டுமே விபத்துகளைத் தவிர்க்கலாம்.

>எல்லாச் சாலைகளும் விபத்தை நோக்கி…

விழிக்க வேண்டிய தேசமும் ஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக்கும்

சமீபத்தில் ஸ்பெயின் நாட்டு கடற்கரை ஒன்றில் 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட மிகப்பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியது. உயிருடன் இருந்த அந்த திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்புவதற்காக புதிய கால்வாய் ஒன்றும் வெட்டப்பட்டது. ஆனால், முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து திமிங்கலம் இறந்துவிட்டது. பின்னர் இறந்த அந்த திமிங்கலத்தின் உடலைப் பரிசோதித்துப் பார்த்தபோது அதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதன் குடலில் சுமார் 50 கிலோ எடை அளவுக்கு பிளாஸ்டிக் பைகளும், கை உறைகளும் காணப்பட்டது.
இதனால் அந்த திமிங்கலம் கடலில் நீந்த முடியாமலும் கடல் அலையில் எதிர்த்துச் செல்ல முடியாமலும் பலவீனமாகி இறந்து போனது. நாம் வீசி எறியும் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பூமியில் உள்ள விலங்குகளை மட்டுமன்றி, கடலில் உள்ள உயிரினங்களையும் பாதிக்கின்றன.
பிளாஸ்டிக் அதிக அளவு பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளிவரும் கழிவுப்பொருள்களால் சுற்றுச்சூழல் அதிக அளவு மாசு அடைகிறது. புவி வெப்பம் அடைகிறது. பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.
மனித சமூகத்தால் அன்றாடம் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், கார்பன்-மோனோ-ஆக்சைடு, கந்தக-டை-ஆக்சைடு போன்றவைகள் வளிமண்டலத்தை அதிக அளவு மாசுபடுத்துகிறது. இதற்கு பிளாஸ்டிக் சார்ந்த கழிவுப் பொருள்களும் குப்பைகளும் ஒரு காரணமாக அமைகின்றன.
இந்த நச்சு வாயுக்கள் ஓசோன் படலத்தைப் பாதிப்பதால் புவி வெப்பம் அடைந்து எதிர்காலத்தில் பனிமலைகள் உருகி கடற்கரை ஓர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இப்பொழுது புவி வெப்பம் அடைவதால் நமது எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருள்களையும், பிளாஸ்டிக் கைப்பைகளையும், பிளாஸ்டிக் உறைகளையும் மக்கள் எளிதாகக் கையாள்கின்றனர். சென்னையில் ஒருநாளில் மட்டும் வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பை பொருள்களின் அளவு 1.86 லட்சம் கிலோவாகும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் தினமும் வெளியேற்றப்படும் அல்லது பொதுமக்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களின் அளவு நாள் ஒன்றுக்கு 200 டன் முதல் 250 டன் வரை என்பதைக் கேட்கும்போது நெஞ்சு வெடிக்கிறது.
ஒரு பிளாஸ்டிக் பொருள் மக்குவதற்கு ஆகும் காலம் 100 ஆண்டு முதல் 1,000 ஆண்டு வரை ஆகும். ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அவை மக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள். கடலில் மிதக்கும் மக்காத களைகள், கழிவுப்பொருள்களில் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் சார்ந்த பொருள்களாக உள்ளன.
கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களை மீன்கள் உணவாக உட்கொள்ளும். அந்த மீனை மனிதன் உணவாக உண்ணும்போது மனிதனுக்கு மீனின் மூலம் பல்வேறுபட்ட நோய்கள் வருவதாக ஓர் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் 7 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி மூலம் திரும்பப் பயன்படுத்த முடியும் தன்மையுடையதாக உள்ளது.
வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 25 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 5.2 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதாக இந்திய பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்க நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 250 கோடி பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகிக்கப்படுகிறது. உலக அளவில் ஆண்டுக்கு 30 லட்சம் டன் எடையுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் அதிகபட்சம் பூமியில் வீசி எறியப்படுகிறது. இதனால் மண் அதிக அளவு மாசு அடைகிறது. பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து வெளியாகும் பிஸ்பீனால் – ஏ என்ற அமிலம் மனிதனின் மூளையின் செயல்பாடுகளையும் மனநிலையையும் பாதிக்கச் செய்யும் தன்மை கொண்டவை.
ஜம்மு காஷ்மீர், சிக்கிம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்துள்ளன. ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் அமைச்சரவை அந்த மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம் எச்.பி. முறையில் சிதைவடையாத பிளாஸ்டிக் பொருள்களைக் கழிவுக் கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன்கீழ் 15-8-2009 முதல் தடை செய்துள்ளது. இதனைப் பின்பற்றி மற்ற மாநிலங்களும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்ய முன்வர வேண்டும்.

வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், தகவல் தொழில்நுட்ப பொருள்கள், தொலைதொடர்புச் சாதன பொருள்கள், கணினி பாகங்கள் போன்றவை அதிக அளவு பிளாஸ்டிக் பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன.

இப்பொழுது பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில் பிளாஸ்டிக்குக்கு எதிரான போராட்டங்களும், எதிர்ப்புகளும், தடைகளும் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் வல்லுநர்களும், இயற்கை ஆர்வலர்களும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும், தீமைகளையும், பாதிப்புகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இவை ஒருபுறம் நடந்தாலும் அன்றாடம் நாம் தொழிற்சாலைகளில், வீடுகளில், வணிக வளாகங்களில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக் குப்பைகளை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான சட்டங்களையும் திட்டங்களையும் அரசு உருவாக்கி தீவிரப்படுத்தாமல் உள்ளது மிகவும் வேதனையாகவே உள்ளது.
பிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்ந்து நடைபெற்றால் எதிர்காலத்தில் நமது தேசமே பிளாஸ்டிக் குப்பைமேட்டில் தான் அமைந்திருக்கும் நிலைமை ஏற்படும். இதனைத் தடுக்கும் வகையில் அரசு பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களைத் தயாரிக்க ஆய்வு மேற்கொள்ள முன்வர வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக மரபு பொறியியல் மூலம் உயிர் மறுசுழற்சி பிளாஸ்டிக் கண்டுபிடிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
உயிர் மறுசுழற்சி மூலம் பிளாஸ்டிக் மாற்றுப் பொருளாகத் தயாரிக்கப்படும் “”ப்யோபால்” என்ற மாற்றுப் பொருளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு வரிச்சலுகை, இலவச இடம், இலவச மின்சாரம் அல்லது சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்கி ஊக்கமளிக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் ஸ்டார்ச் மற்றும் பாலி லாக்டிக் ஆசிட் என்ற இயற்கையான பொருள்களைக் கொண்டு தீங்கு விளைவிக்காத பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளித்து உதவி செய்து வருகின்றன. இதேபோன்று நமது நாட்டிலும் அரசு உதவி செய்ய முன்வர வேண்டும்.
பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை அரசே நடத்தி வணிக ரீதியாக உற்பத்தி செய்து பழைய பிளாஸ்டிக் பொருள்களையும் குப்பைகளையும் நல்ல விலை கொடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை அரசே அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து மறுசுழற்சி மூலம் மாற்றுப் பொருள்கள் தயாரித்து விநியோகம் செய்ய வேண்டும்.
இந்திய நாட்டின் போக்குவரத்தில் 80 சதவிகிதம் சாலைப் போக்குவரத்து ஆகும். இந்தச் சாலைகளின் மேம்பாட்டுப் பணிகளில் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களைப் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். குறிப்பாக, சாலைப்பணிகளில் தார் பொருள்களுக்கு மாற்றாக பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.
ரொட்டி உறை, மிட்டாய் உறை, சாக்லெட் உறை, பேனாக்கள், எண்ணெய் பொருள்கள், கயிறுகள், டப்பாக்கள், டின்கள், மசாலை பொருள்கள், உறைகள், விளம்பரப் பதாகைகள் போன்றவை பிளாஸ்டிக்கினால் தயாரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு அட்டை, அலுமினியப் பொருள்களால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரூ. 100-க்கும் மேல் மதிப்பு உள்ள பிளாஸ்டிக் பொருள்களை மட்டுமே வணிக நோக்கில் தயாரிக்க அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும். உணவு நிறுவனங்கள், உணவகங்கள், பிளாஸ்டிக் உறைகளைத் தவிர்த்து அட்டை, அலுமினிய, சணல் பைகளையும் வாழை இலை முதலியவற்றையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து கண்ணாடி பாட்டில்கள், உலோக பாட்டில்கள், தகர அலுமினிய பாட்டில்களைப் பயன்படுத்த நிறுவனங்களும் பொதுமக்களும் முன்வர வேண்டும்.
விழிப்புணர்வுக் கூட்டம், கருத்தரங்கு, போராட்டத்தினால் மட்டுமே பிளாஸ்டிக் குப்பைகளை ஒழித்துவிட முடியாது. அரசு கடுமையான சட்டம் இயற்றுவதன் மூலமும் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு மூலமும் மட்டுமே பிளாஸ்டிக் பொருள்களையும் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகளையும் நமது தேசம் முழுவதும் ஒழிக்க முடியும். மாசு இல்லாத தேசமாக உலக நாடுகளுக்கு முன்னோடியாக விழித்த தேசமாய் எழுந்து நிற்போம்.

>விழிக்க வேண்டிய தேசமும் ஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக்கும்

உடற்பயிற்சிக்கு ஓய்வளிக்கலாமா?

நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தைப் பெறுவது இப்போது மிகவும் அரிதாகிவிட்டது. சத்தில்லா உணவு, சுகாதாரமற்ற வாழ்விடம் எனப் பல்வேறு காரணங்களுக்கிடையே ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு உடற்பயிற்சிப் புறக்கணிப்பும் முக்கியக் காரணம்.
“வாழ்நாள் முழுவதும் மருத்துவரிடம் செல்லாமல் இருக்க ஒரு மருந்து சொல்லுங்கள்’ என்றால் உடனே உடற்பயிற்சி என்று சொல்லி விடலாம். ஆனால், கண்கெட்ட பின்பு சூரியநமஸ்காரம் என்பதைப் போல நோய்களின் ஆதிக்கம் உடலில் அரங்கேறிய பின்புதான் கசக்கும் மருந்துகளுடன், வியர்க்கும் உடற்பயிற்சியின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்புகிறார்கள் பலர்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை உடற்பயிற்சிக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஏனென்றால், எந்திரங்களின் பயன்பாடு குறைந்திருந்த அந்தக் காலத்தில் தொழில் முதல் விவசாயம் வரை அனைத்துக்கும் உடல் உழைப்பே பிரதானம். உணவுக்காக உழைக்கும்போதே உடற்பயிற்சியும் கிடைக்கப்பெற்று ஆரோக்கியம் பெருகியது.
ஆறுகளின் தேன்சுவை நீருக்கும், தென்றல் உறவாடும் காற்றுக்கும் இப்போதைய நகரங்களில்கூட அன்று தட்டுப்பாடில்லை. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தாமல் எந்த வேலையையும் முடிக்க முடியாது என்பதால் உடலும் அதற்கேற்ப வளைக்கப்பட்டது.
இதனுடன் “வீரம்’ என்னும் போதையூட்டி இளைஞர்களுக்கு சிலம்பம், வாள்வீச்சு போன்ற வழிகளிலும் உடல் மேலும் வலுவூட்டப்பட்டது. சில பகுதிகளில் பல கிலோ எடை கொண்ட “திருமண கல்’-என்ற கல்லை தூக்கிப் போட்டால் மட்டுமே பெண் கொடுக்கும் வழக்கம் கூட இருந்தது.
காலத்தின் வேகத்தில் அறிவியல் கடவுளின் வரத்தால் ஏராளமான இயந்திரங்கள் பெருகிவிட்டன. இன்று படுக்கையில் இருந்தபடியே வீட்டுக் கதவுகளை “ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் திறந்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உடற்பயிற்சி வெகுதூரத்துக்குச் சென்றுவிட்டது.
கணினியோடு உறவாடி உழைக்கும் இன்றைய பல இளைஞர்களின் கைகள் கூட மகளிரைப் போல மென்மையாகிவிட்டது என்பதே உண்மை.
கருப்பட்டியையும், கம்பஞ்சோற்றையும் அருங்காட்சியகத்தில் இருக்கும் உணவுப் பொருளாகப் புறந்தள்ளிவிட்டு, துரித உணவுகளால் வயிற்றை நிரப்பிக் கொள்ளும் இளைஞர்களை உடல் பருமனும், நோய்களும் எட்டிப்பிடிப்பது எளிதாகி வருகிறது.
ராணுவம், போலீஸ் போன்ற பணிகளுக்குச் சென்றால் மட்டுமே கட்டான உடல்வாகு தேவை என்பதும், படிப்பு, பணிகளுக்காக உடற்பயிற்சியை மறப்பதும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
பொலிவான முகத் தோற்றத்துக்காக பலவித “க்ரீம்’களை வாங்க பணத்தில் தாராளம் காட்டும் வேளையில், உடலை மிடுக்காக்கி ஆரோக்கியத்தைப் பரிசளிக்கும் உடற்பயிற்சிகளுக்காகச் செலவிட மட்டும் தயக்கம் காட்டுவது தவறானதாகும்.
இளைஞர்கள் உடற்பயிற்சிக்கு ஓய்வளிக்கும் போக்கு உகந்ததல்ல. உடற்பயிற்சியின் உன்னதத்தை சிறுவயது வகுப்புகளிலேயே அறிந்திருந்தும் அதன்பக்கம் புறமுதுகிடுவதால்தான் ஆரோக்கியத்துக்காக மருந்தகங்களில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைக் கல்வி வரை வாரத்தில் ஒருசில மணி நேரம் மட்டுமே விளையாட்டுப் பாடவேளையாக உள்ளது. இந் நேரத்திலும் சில ஆசிரியர்கள் தமது பாடத்தைப் படிக்க ரகசிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதும் உண்டு.
அனைத்து மாணவர்களும் ஏதேனும் ஒரு விளையாட்டு அணியில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று வற்புறுத்தல் இல்லை. இதனால் விளையாட்டுப் பாடவேளையை வெட்டிக்கதை நேரமாக மைதானத்தில் மண்ணில் கோலமிட்டு கழிக்கும் மாணவர்கள் ஏராளம்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பர். அந்தப் பழமொழிக்கு ஏற்ப பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியைக் கட்டாயப்படுத்த வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்குத் தினந்தோறும் மாலை இறுதி பாடவேளையை விளையாட்டுக்காக ஒதுக்க வேண்டும். இந்த நேரத்தில் சிலம்பம், அந்நிய நாட்டு வரவான கராத்தே உள்பட உடற்பயிற்சியோடு தொடர்புடைய வீர விளையாட்டுகளைச் சேர்ப்பது தவறில்லை.
அரசுப் பணிகளில் சேருவதற்கு விளையாட்டுச் சான்றிதழ்களின் அவசியத்தை அதிகப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்பட சுகாதாரத் துறையினர் புதிய யுக்திகளை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு, இளைஞர்களிடம் உடற்பயிற்சி மோகத்தைத் தூண்ட அனைத்து ஊர்களிலும் பல்வேறு வசதிகள் கொண்ட நவீன உடற்பயிற்சி கூடங்களை குறைந்த கட்டணத்தில் திறக்க புதிய திட்டத்தை உருவாக்குவது அவசியம்.
வருங்கால இந்திய இளைஞர்கள் வலுவானவர்களாக மாறினால்தான் நாட்டின் ஏற்றம் எளிதாகும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாததல்ல.

>உடற்பயிற்சிக்கு ஓய்வளிக்கலாமா?

திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலர் திரு.சி.ஜோசப் அந்தோணிராஜ்

வாழ்த்துக்கள்.
 
திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலராக பணியேற்றுள்ள திரு.சி.ஜோசப் அந்தோணி ராஜ் அவர்கள் தான் ஏற்ற பணியினை மிகசிறப்பாக செய்யக்கூடியவர். தலைமையாசிரியராக தான் பணி புரிந்த காலத்திலும் பள்ளிக்கு நூறு சதவித தேர்ச்சியினை தொடர்ச்சியாக பெற்று தந்தவர். ஆசிரியர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர். இனி தான் பொறுப்பேற்றுள்ள மாவட்டத்தின் நூறு சதவித தேர்ச்சியினை இலக்காக கொண்டு அன்னாரின் உழைப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஐயா அவர்களின் பணி மென்மேலும் சிறப்படைய கல்விச்சோலை.காமின் மனமார்ந்த பாராட்டுக்கள்.
பள்ளி நூறு சதவித தேர்ச்சியினை பெற்றதை பாராட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பாராட்டு சான்று பெறும் காட்சி

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
எங்கள் இல்லத்திருமண விழாவிற்கு வருகை தந்த திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலர் திரு.சி.ஜோசப் அந்தோணி ராஜ் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
 
வாழ்த்துக்கள்.

விழுப்புரம் மாவட்டம்,   திண்டிவனம் கல்வி மாவட்டத்திற்கு  மாவட்ட கல்வி அலுவலராக பொறுபேற்றுள்ள கொங்கரப்பட்டு  அரசு   உயர்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர் திரு சி.ஜோசப் அந்தோணிராஜ் அவர்களின் பணி சிறக்க கல்வி சோலை.காம் மின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

>திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலர் திரு.சி.ஜோசப் அந்தோணிராஜ்