>தமிழுக்கு நிகர் தமிழே: செக் குடியரசு பேராசிரியர் பேட்டி

>

செக்குடியரசின் தலைநகரான பிராக் பகுதியில் வசிக்கிறேன். 75 வயதை கடந்தவன். ஆனால் 30 வயதிலிருந்தே தமிழ் மொழி மீது ஈடுபாடு அதிகம். தமிழில் ஏராளமான ஆராய்ச்சி மேற்கொண்டு உலகம் முழுக்க ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளேன். என்னுடைய பல மொழி ஆராய்ச்சியில் முக்கிய இடம் பிடித்தது தமிழ். ஏனென்றால் தமிழ் தனித்துவமான மொழி. தமிழுக்கு நிகர் தமிழ் தான். தமிழுக்கு இணையாக எந்த ஒரு மொழியாலும் போட்டிபோட முடியாது. உலகின் முதன்மையான தொண்மையான மொழி தமிழ். திராவிட மொழியான தமிழுக்கு மற்ற மொழிகளோடு நெருங்கிய தொடர்புண்டு. ஏனென்றால் தமிழிலிருந்து ஏராளாமான மொழிகள் பிரிந்து சென்றுள்ளது.
தமிழ் மொழிக்கும் மங்கோலிய மொழிக்கும் நிறைய தொடர்பு உண்டு. மங்கோலிய மொழியில் கால் என்பதற்கு கோல் என்று கூறுவர். தமிழ் மொழியில் பேசுவதற்குள் மங்கோலிய மொழிக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால் சில வார்த்தைகளில் மட்டும் வித்தியாசங்கள் உள்ளது. அதனால் தமிழில் இருந்து பிரிந்து சென்ற மொழியாகவே மங்கோலிய மொழியை என்னுடைய ஆய்வில் குறிப்பிட்டுள்ளேன். தமிழில் அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற சங்க கால இலக்கியங்களை கரைத்துக்குடித்து விட்டேன். அதில் எந்த இடத்தில் எந்த விஷயத்தை கேட்டாலும் என்னால் விளக்கமளிக்க முடியும். திராவிட மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகள் எத்தனை அந்த மொழியின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து நான் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறேன்.
தமிழ் ஆய்வரங்கத்தில் திராவிடமொழிகளுக்கும் “அல்தாய்’ மொழிக்கும் உள்ள உறவு குறித்து பேசுகிறேன். தற்போது சமஸ்கிருதத்தை முழுமையாக கற்றுவருகிறேன். முழுமையாக கற்ற பின் தமிழிற்கும், சமஸ்கிருதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்து பணியாற்றத்துவங்கியுள்ளேன். இவ்வாறு பேராசிரியர் ஜரோஸ்லாவ்வாசெக் கூறினார்.

One response

  1. >But Thamizh has not been made a compulsory language even in standards 1 to 5in schools in Thamizh Nadu…The Government of Thamizh Nadu has no preference in its employment for students who studied in Thamizh-medium schools …

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: