தமிழனின் அடையாளம் எது?

கோவை, ஜூன் 25: தமிழனின் அடையாளம் எது என்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கில் பதில் அளிக்கும் வகையில் கவிதை வாசித்தார் கவிஞர் முத்தையா.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் 3-வது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற “கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக் கூட்டம்’ எனும் தலைப்பிலான கவியரங்கில் வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்து முதல்வர் கருணாநிதி உள்பட அனைத்துப் பார்வையாளர்களையும் அசத்தினர்.
“அடையாளம் மீட்க’ எனும் தலைப்பில் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா கவிதை வாசித்தார். அவர் தனது கவிதையில், தப்பில்லாத உச்சப்புதான் தமிழின் செம்மைக்கு அடையாளம். செப்புச் சிலைபோல் தொகுப்பாளினிகள் செந்தமிழ் கொல்வது அவமானம். குத்துப்பாட்டுக்கு குதிக்கும் தமிழா, பத்துப்பாட்டு உனது அடையாளம். பதுக்கல் கணக்கும், ஒதுக்கல் கணக்கும் பக்கத்தில் வாழ்தல் அவமானம்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்தான் பண்டைய தமிழனின் அடையாளம். யார் என்ற உறவு என்பதை அறிந்து அழைப்பது தமிழன் அடையாளம்.
பார்ப்பவரையெல்லாம் அங்கிள் என்று பிள்ளைகள் அழைப்பது அவமானம்.
வமானம் துடைத்தெடுப்போம். அடையாளம் மீட்டெடுப்போம். தமிழ்மானம் காத்திருப்போம். திசையெல்லாம் புகழ்படைப்போம் என்றார்.
கவியரங்கத்தில் ஈரோடு தமிழன்பன் தொடக்கவுரையாற்றினார். முதல்வர் மு.கருணாநிதி கவிஞர்களை ஊக்குவிப்பவர். எத்தனையோ கவிஞர்களின் கவிதைகளை நாட்டுடைமையாக்கி, வெள்ளிக் காசுகளை அவர்களது வீட்டுடைமையாக்கியவர்.
அதனால், எழுந்து எழுத முடியாதவர்கள் கூட கலைஞர் காலத்தில் எழுத முடியுமா என்று எழுதுகிறார்கள். தமிழ் நன்றாகத் தெந்திருந்தால் போதும், முதல்வன்
மடியாசனத்தில் அமரலாம் என்றார்.
நிகழ்ச்சிக்கு, கவிஞர் வைரமுத்து தலைமை வகித்துப் பேசியதாவது:
தமிழும், முதல்வரும் ஒன்று என்றுதான் சொல்வேன். அவர் எட்டிய சாதனைகளை அவரால்தான் தாண்ட முடியும். எங்கள் பாட்டணியை உள்ளத்தில் வைத்திருப்பது போல் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்துள்ளீர்கள்.
முதல்வன் உள்ளங்கை விந்தால் சூயன். குவிந்தால் கூட்டணி. கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருங்கும் உத்தி கண்டவர் முதல்வர் என்றார்.
“பகுத்தறிவு தழைக்க’ எனும் தலைப்பில் கவிஞர் நா.முத்துக்குமார், “சமதர்மம்’ எனும் தலைப்பில் முதல்வர் மு.கருணாநிதியின் பேத்தி கயல்விழி வெங்கடேஷ் “தன்மானம்’ எனும் தலைப்பில் கவிஞர் நெல்லை ஜெயந்தா, “தாய்த் தமிழ் வளர்க்க’ எனும் தலைப்பில் முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன், “ஆதிக்கம் அகற்றிட’ எனும் தலைப்பில் பேராசியர் கருணாநிதி உள்ளிட்டோரும் கவிதை வாசித்தனர்.
காலை 10.30 முதல் 12.30 மணி வரை நடைபெற்ற இந்தக் கவியரங்கத்தை முதல்வர் தொடர்ந்து ரசித்துப் பார்த்தார். அவருடன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. அவர்தம் குடும்பத்தினரும், அமைச்சர்களும், ஏராளமான பொதுமக்களும் ரசித்துக் கேட்டனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: