Category Archives: TRB NEWS

முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு, ஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட தடை விதித்துள்ளது.

TRB PGT RESULT RELEASED | கடந்த ஜூலை மாதம் நடந்த முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

TRB PGT RESULT RELEASED | கடந்த ஜூலை மாதம் நடந்த முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்விற்கான TENTATIVE ANSWER KEY இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த 1.68 லட்சம் பேரில் இதுவரை 1.05 லட்சம் பேர் மட்டுமே, "ஹால் டிக்கெட்’டை, பதிவிறக்கம் செய்துள்ளனர். மற்றவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என டி.ஆர்.பி., வலியுறுத்தி உள்ளது.

6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 கடைசி தேதி.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அச்சடித்து, 32 மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. 31ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:31.05.2013 கடைசி தேதி :14.06.2013 தேர்வு நாள் : 21.07.2013 மொத்தப்பணியிடங்கள்: 2881

PGT ONLINE COUNSELLING ON 31.12.2012 10.30 AM | ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துக்கொள்ளும் முதுகலை ஆசிரியர்களுக்கான முக்கிய குறிப்புக்களை முழுமையாக படியுங்கள்.

2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012 போட்டித்தேர்வு நாள் :27.05.2012

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழகத்தில், 1,029 உடற்கல்வி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, மாநில அளவில் கடந்த ஜன., 31ம் தேதி நிலவரப்படி பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவுமூப்பு தேதிக்குள் தகுதியுள்ள மனுதாரர்கள் யாராவது விடுபட்டிருந்தால், தாங்கள் பதிவு செய்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு உரிய ஆதாரங்களுடன், மார்ச் 2ம் தேதிக்குள் நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழகத்தில், 1,029 உடற்கல்வி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, மாநில அளவில் கடந்த ஜன., 31ம் தேதி நிலவரப்படி பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவுமூப்பு தேதிக்குள் தகுதியுள்ள மனுதாரர்கள் யாராவது விடுபட்டிருந்தால், தாங்கள் பதிவு செய்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு உரிய ஆதாரங்களுடன், மார்ச் 2ம் தேதிக்குள் நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 10 மையங்களில் 1,152 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 7ம் தேதி முதல் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது.


தமிழகத்தில் 10 மையங்களில் 1,152 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 7ம் தேதி முதல் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது.

தமிழகத்தில் 2010-11ம் ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த 1,152 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின் அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது.இதில் தமிழ் 130, ஆங்கிலம் 146, கணிதம் 205, இயற்பியல் 111, வேதியியல் 137, தாவரவியல் 93, விலங்கியல் 84, வரலாறு 43, புவியியல் 5, பொருளாதாரம் 77, வணிகவியல் 74, அரசியல் அறிவியல் 13, உடற்கல்வி ஆசிரியர் 35 பணியிடங்களுக்கு 5,368 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை 10 மையங்களில் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது. தகுதியானவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அழைப்பு கடிதங்களும் அனுப்பபட்டு வருகிறது.

இதில் நெல்லையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களுக்கும், ராமநாதபுரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கும், மதுரையில் மதுரை, தேனி மாவட்டங்களுக்கும், புதுக்கோட்டையில் புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கும், தஞ்சாவூரில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட முதுகலை பட்டதாரிகளுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது.சேலத்தில் சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி மாவட்டங்களுக்கும், கோவையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கும், விழுப்புரத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கும், வேலூரில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கும், சென்னையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சான்றிதழ் சரி பார்ப்பு நடக்கிறது.

தமிழகத்தில் 710 நடுநிலைப் பள்ளிகளை 2011-2012ம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தரம் உயர்த்தப்படும் இந்தப் பள்ளிகளில் பணியாற்ற 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 710 நடுநிலைப் பள்ளிகளை 2011-2012ம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தரம் உயர்த்தப்படும் இந்தப் பள்ளிகளில் பணியாற்ற 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வெள்ளத்தினால் அடித்துச் செல்ல முடியாத, வெந்தணலால் வேகாத, கள்வரால் கவர முடியாத, வேந்தரால் கொள்ள முடியாத, அழியாச் செல்வமாம் கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும் அளிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, அதிலும் குறிப்பாக, ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அனைவரும் இடைநிற்றல் ஏதுமின்றி பள்ளியில் கல்வி பயிலுவதற்கு ஏதுவாக, புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்குவது, மதிய உணவு வழங்குவது; கல்வியினை இடையே விட்டு செல்லாமல் இருப்பதற்காக உதவித் தொகை வழங்குவது; மிதிவண்டி வழங்குவது; மடிக்கணினி வழங்குவது; போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், மாணவர்களின் நலனுக்காகவும், அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக அமையும் வண்ணம் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பள்ளிகள் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில், 710 ஊராட்சி ஒன்றிய/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாக 2011-12-ஆம் ஆண்டில் தரம் உயர்த்தவும், அப்பள்ளிகள் 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்டு 2011-12 ஆம் ஆண்டிலேயே முழுமையாக செயல்படவும், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் 710 அரசு/ மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை உயர்நிலைப் பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் 1 ஆய்வக உதவியாளர் வீதம் 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் 1 இளநிலை உதவியாளர் வீதம் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு 113 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரத்து 600 ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு தரம் உயர்த்தப்படும் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, புதியதாக வகுப்பறைகள், அலுவலக வசதிகள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகம், நூலகம், கழிப்பிடம் மற்றும் தளவாடப் பொருட்கள் சார்ந்த செலவினங்களுக்காக பள்ளி ஒன்றுக்கு ரூ 58.12 லட்சம் வீதம் 710 பள்ளிகளுக்கு 412 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல் அளித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதுமட்டுமல்லாமல், 5 கீ.மீ. சுற்றளவில் உயர்நிலைப் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள்/நடுநிலைப் பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இடங்கள், 8 ஆம் வகுப்பில் ஊட்டுப் பள்ளி மாணவர் எண்ணிக்கையுடன் 70 மாணவர்களுக்கு குறையாமல் சேர வாய்ப்புள்ள நடுநிலைப் பள்ளிகள், போக்குவரத்து வசதியற்ற, இயற்கை/செயற்கை தடை உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இதேபோன்று 2009-ஆம் ஆண்டில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளுக்கும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தவும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 1 கோடியே 19 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ், தொடக்கக் கல்வித் துறையில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளில் பணிபுரிய 1,581 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய 1,282 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், ஆக மொத்தம் 2,863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 75 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
இதேபோன்று 6 முதல் 8 ஆம் வகுப்புகளில் பணிபுரிய 3,565 கூடுதல் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 58 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவாகும். மேற்கூறிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை சேர்த்து மொத்தம் 6,428 கூடுதல் பணியிடங்களை தோற்றுவிப்பதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு மொத்தமாக 134 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவாகும்.
மேலும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் நலன் கருதி, 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக 2011-12 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பணியிடங்கள் வீதம் 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 71 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்.
பள்ளிக்கல்வித் துறையில் அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகள் காரணமாக ஊரகப் பகுதிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் எந்தவிதச் சிரமுமின்றி கல்வி பயில வழி வகுக்கும்.

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குழுக்களின் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் சில விவரங்கள் :

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குழுக்களின் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆசிரியர்களை நியமிக்கும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இவர்களது பணி தாற்காலிகமானது என்றும் அரசு அறிவித்துள்ளது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதற்காக, 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
100 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்புவரை இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மொத்தமுள்ள 16,549 பணியிடங்களில் கலைப்படிப்புகளுக்காக 5,253 பணியிடங்களும், சுகாதாரம் மற்றும் உடற்கல்விக்காக 5,392 பணியிடங்களும், கைத்தொழில் படிப்புகளுக்காக 5,904 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான பரிந்துரைகளை “அனைவருக்கும் கல்வி இயக்கம்அரசுக்கு அனுப்பியிருந்தது. அவற்றை ஆராய்ந்த பிறகு, இந்தப் பணியிடங்களை நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான விதிமுறைகள் விவரம்:
தேர்வுக் குழு உறுப்பினர்கள்:
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், பகுதி நேர ஆசிரியர் தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) உறுப்பினர் செயலராக இருப்பார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் உடற் கல்வி நிபுணர், மாவட்ட அளவிலான கலைப்படிப்புகளில் நிபுணர், இசை, தோட்டக்கலை, கம்ப்யூட்டர் படிப்புகள் உள்ளிட்ட ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க அந்தந்தத் துறை நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம் பெறுவர்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும், இடைநிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும், ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரிகளாக இருப்பார்கள்.
இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் வரவேற்கப்பட வேண்டும்.
தேர்வுக்குழுவினர் நேர்முகத்தேர்வின் மூலம் பகுதிநேர ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
உள்ளூர் விண்ணப்பதாரர்கள், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
இதில் 10 சதவீத ஆசிரியர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவார்கள். இந்தப் பட்டியல் ஓர் ஆண்டுவரை இருக்கும்.
 பகுதி நேர ஆசிரியர் தேர்வுப் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக தகவல்பலகை, பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் உடனடியாக வெளியிட வேண்டும்.
 இதுதொடர்பான பதிவேட்டை தனியாகப் பராமரிக்க வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர் நியமனம் என்பது இந்தத் திட்டம் அமலில் உள்ள வரையிலான தாற்காலிக பணி நியமனம் மட்டுமே ஆகும்.தேவைப்பட்டால் அவர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
அரசு விடுமுறை தினங்கள், ஞாயிற்றுக்கிழமைகள் தவிர அவர்களுக்கு வேறு விடுமுறைகள் கிடையாது.அவர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்படாது.
இந்த ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்துக்கு குறைந்தபட்சம் 9 மணி நேரம் கற்பித்தல் பணி வழங்கப்படும். அவர்களுக்கான சம்பளம் “அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் கிராம கல்விக் குழுக்களுக்கு வழங்கப்படும். அந்தக் குழுக்களிடமிருந்து பணத்தைப் பெற்று, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் சம்பளத்தை வழங்குவார்.
இந்தப் பகுதிநேர ஆசிரியர்களின் சேவையை அருகில் உள்ள 4 பள்ளிகள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும்போது அதற்குரிய சம்பளத்தை அவர் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்
Schedule for posting of Part-time Instructors
1.Advertising in the Dailies
1.12.2011 to 10.12.2011 (10days)

2.Last date for receiving of application form
15.12.2011 (5 days)

3.Scrutiny of received application form
16.12.2011  to  18.12.2011 (3 days)

4.Sending of call letters
19.12.2011 –  25.12.2011 (7 days)

5.Conducting of interview  and Selection of Candidates
26.12.2011  to  15.01.2012  (21 days)

6.Sending of appointment order, posting in the notice board and website
16.1.2012  to 20.01.2012  (5 days)

7.Date of Joining
on or before 27.01.2012  (7 days)

8.Sending of final report to SPO
30.01.2012  (3 days)

தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
தஞ்சாவூர்: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு முடிய 100 மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளிகளில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் மற்றும் தையல் ஆசிரியர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் மாதம் ரூபாய் ஐந்தாயிரம் மட்டும் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் 158 உடற்கல்வி ஆசிரியர்களும், 155 ஓவிய ஆசிரியர்களும், 209 இசை மற்றும் தையல் ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இப்பதவிக்கான நியமனம் தொடர்பான கல்வித்தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவம் மாவட்டத்திலுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலும், மாவட்ட கல்வி அலுவலங்கங்கள் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், மாவட்டத் தொடக்க கல்வி அலுவலகம் தஞ்சாவூர் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் அனைவருக்கும் கல்வி இயக்கம், மேம்பாலம், தஞ்சாவூர், அனைத்து ஒன்றியங்களிலுள்ள அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்கள் மற்றும் அனைத்து உதவித் தொடக்கக் கல்விஅலுவலங்களில் தகவல்களை நேரடியாக அறிந்து கொள்ளலாம். 

விண்ணப்பங்களை http://www.thanjavur.nic.in என்ற வலைத்தளத்திலும் பதவியிறக்கம் செய்து கொள்ளலாம். அ4 தாளில் தட்டச்சு அல்லது கம்ப்யூட்டர் அச்சு மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 12ம் தேதி மாலை ஐந்து மணிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மை கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலம், பனகல் கட்டிடம், தஞ்சாவூர் -613001.விண்ணப்பத்துடன் வயது டி.சி., சாதி சான்றிதழ், வேலை வாய்ப்பக பதிவு அட்டை, பணி அனுபவச் சான்று மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றொப்பமிட்ட நகல்களை ஜெராக்ஸ் காப்பி எடுத்து விண்ணப்பத்துடன் கண்டிப்பாக இணைத்து அனுப்ப வேண்டும்.

APPLICATION FOR PART TIME TEACHERS


தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

தூத்துக்குடி : 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமனம் செய்யப்பட உள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் வழங்கப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தையல் மற்றும் இசை ஆசிரியர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் (சி.இ. ஓ ஆபிஸ்), கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலகத்தில் (டி.இ.ஓ ஆபிஸ்) வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பம் செய்ய வயது வரம்பு கிடையாது. உடற்கல்வி ஆசிரியரை பொறுத்தமட்டில் 31 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 7 நடுநிலைப்பள்ளிகளில் காலியிடங்கள் உள்ளன.
ஓவிய ஆசிரியரை பொறுத்தமட்டில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 20 பணியிடங்களும், 7 நடுநிலைப்பள்ளிகளிலும் காலியிடங்கள் உள்ளன. தையல் ஆசிரியரை பொறுத்தமட்டில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 20 பணியிடங்களும், 3 நடுநிலைப்பள்ளிகளிலும் காலி பணியிடங்கள் உள்ளன. இசை ஆசிரியரை பொறுத்தமட்டில் 25 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 4 நடுநிலைப்பள்ளிகளிலும் காலியிடங்கள் உள்ளன.தொடக்க கல்வித்துறையில் நடுநிலைப்பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே காலி பணியிடங்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இம் மாவட்டத்தில் 126 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தகுதியுள்ளவர்கள் இதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்டதின் கீழ் அரசு, நகராட்சி, மாநகராட்சி, கள்ளர், ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
 இது குறித்து மதுரை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் ஸ்ரீதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, உள்ளாட்சி நிர்வாகங்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர அடிப்படையில் தொகுப்பூதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியமாக கொடுக்கப்படும்.
இதற்குத் தேவையான தகுதி, விண்ணப்பபடிவம் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகல்வித்துறை, தொடக்ககல்வித்துறையின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு பலகைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. அந்தப் படிவத்தின் மாதிரியில் விண்ணபத்தைத் தட்டச்சு செய்து உரிய சான்றிதழ்களுடன் ரூ.5 ஸ்டாம்பு ஒட்டிய சுய முகவரியுடன் கூடிய கவருடன் வருகிற 15-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் அல்லது மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு தபால் மூலமாகவோ,நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
பெரம்பலூர்:”சிறப்பாசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதுஎன பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலை ஆகியப்பள்ளிகளில் பகுதிநேர தொழில் ஆசிரியர், சிறப்பாசிரியர், உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆசிரியர் ஆகிய பணியிடங்கள் தற்காலிக நியமனம் மற்றும் தொகுப்பூதியம் முறையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் தகுதியான சிறப்பாசிரியர்களின் கல்வி தகுதி மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கல்வி தகுதிகள் பெற்றவர்கள் பெரம்பலூர் சி.இ.ஓ., அலுவலகத்தில் பணியிடம் தொடர்பான விவரங்கள் தகவல் பலகைகள் ஒட்டப்பட்டுள்ளது. இதைப் பார்ர்த்து தெரிந்து கொண்டு உரிய விண்ணப்பத்தை சி.இ.ஓ., அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து அளிக்க கடைசி தேதி 9ம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காலக்கெடு வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
புதுக்கோட்டை: அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள், பஞ்சாயத்து யூனியன் பள்ளிகள் மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் 6,7 மற்றும் 8வது வகுப்புகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் விதமாக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தகுதியுடைய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பகுதிநேர அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்படும் பதிவுமூப்பு பட்டியலின் அடிப்படையில் மட்டுமே இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் புதுக்கோட்டை அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இம்மாதம் 10ம் தேதி மாலை ஐந்துமணி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம், ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், புதுக்கோட்டை-1 என்ற முகவரிக்கும் இம்மாதம் 15ம் தேதிக்குள் ஒப்படைக்கவேண்டும். இதுகுறித்து மேலும் தகவல் பெற விரும்புவோர் புதுக்கோட்டையில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பகுதிநேர சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஓவிய ஆசிரியர் 402, உடற்கல்வி ஆசிரியர் 405, தையல், இசை, பாட்டு ஆசிரியர்கள் 414 பேர் உள்ளிட்ட 1221 ஆசிரியர் பணிக்கான காலி இடங்கள் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


ஓவியம் : எஸ்.எஸ். எல்.சி.,யுடன், தொழில் கல்வியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் 3 ஆண்டு டிராயிங் இளங்கலை பட்டம் அல்லது அண்ணாமலை பல்கலையில் டிராயிங் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். இதேப்போல் அரசின் தொழில்நுட்ப தேர்வில் பிரிஹேண்ட் அவுட்லைன் அன்ட் மாடல் டிராயிங் அல்லது தமிழக அரசின் மாமல்லபுர சிற்பகலை இன்ஸ்டியூட்டில் டிப்ளமோ சான்று பெற்று ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.
உடற்கல்வி : பிரி யூனிவர்சிட்டியில் ஹயர்செகன்டரி அல்லது (செகன்டரி கிரேடு சீனியர் பேசிக்) டி.எஸ்.எல்.சி., முடித்து அரசின் உடற்கல்வி ஆசிரியர் சான்றிதழ்(ஹயர் கிரேடு) பயிற்சி அல்லது எஸ்.எஸ்.எல்.சி.,யுடன் அரசின் (லோயர் கிரேடு) பிசிக்கல் எஜிகேஷன் சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும். இதேபோல் இளங்கலையில் உடற்கல்வி பட்டம் அல்லது ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வி கல்லூரியில் பி.பி. இ.எஸ்., பெற்றிருத்தல் வேண்டும்.
நேரடியாக அண்ணாமலை பல்கலையில் எம்.பி.இ.எஸ்., பட்டம்(இளங்கலை படிக்காமல்) அல்லது சென்னை ஒய்.எம்.சி.ஏ.,உடற் கல்வி கல்லூரியில் பி.எம்.எஸ்., அல்லது அதே அந்தஸ்த்தில் ஏதேனும் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சியில் கல்லூரியில் இளங்கலை பட்டம் அல்லது உடற்கல்வி முதுகலை முழுநேர பட்டம் பெற்றிருத்தல் அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருத்தல்வேண்டும்.
தையல் : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், தொழிற்கல்வி நீடில் ஒர்க் அண்ட் டிரஸ் மேக்கிங்(ஹயர் கிரேடு) மற்றும் எம்ராய்டரி மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.
இசை, பாட்டு: பத்தாம் வகுப்பு முடித்து தொழிற்கல்வியில் இசையில் இளங்கலை பட்டம் அல்லது அண்ணாமலை பல்கலையில் சங்கீத பூஷண் பட்டம் அல்லது சென்னை அரசு தேர்வுத்துறையால் சங்கீத வித்வான் விருதுடன் ஆசியர் பயிற்சி முடித்திருத்தல் வேண்டும்.
மாதிரி விண்ணப்பங்கள் சி.இ.ஓ., அலுவலகம் மற்றும் எஸ்.எஸ்.ஏ., திட்ட அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம், நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகம், மருத்துவமனை வீதி, விழுப் புரம் என்ற முகவரியில் சேர்ப்பிக்க வேண் டும். விண்ணப்பங்கள் வரும் 15ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டுமென மாவட்ட எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ.,(பொ) குப்புசாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளில் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிய 756 பகுதி நேர சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் சிவசண்முகராஜா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழக அரசு, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, அரசு நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 756 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய உள்ளது. இப்பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


பகுதி நேர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படும் பணியிடம் மற்றும் அதற்கான கல்வித் தகுதி, தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியமனம் செய்யப்படும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 5,000 மட்டும் ஊதியம் வழங்கப்படும். இந்த நியமனம் எக்காரணத்தை கொண்டும் நிரந்தரம் ஆக்கப்பட மாட்டாது. இத்திட்டம் முடிவடைந்தால் நியமனம் ரத்து செய்யப்படும். இதன்படி 262 உடற்கல்வி ஆசிரியர்கள், 250 கலை ஆசிரியர்கள், மற்றும் இசை, தையல், தோட்டக்கலை, கணினி பயன்பாடுகள், வாழ்வியல் மற்றும் பேச்சுத்திறன், கட்டுமானப்பணி ஆகிய 274 தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இப்பணியிடங்களுக்கான விண்ணப்பம், காஞ்சிபுரம் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் (எஸ்.எஸ்.ஏ) டிசம்பர் 1ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்குள், காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலக்ததில் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் சிவசண்முகராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குழப்பங்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தியதில் எடுக்கப்பட்ட முடிவுகள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குழப்பங்கள் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். தகுதித் தேர்வில் உள்ள பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் தீர்க்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆசிரியர் பணிக்கு வர விரும்பும் அனைவரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்லூரி ஆசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு, “நெட்அல்லது, “ஸ்லெட்எப்படி ஒரு தகுதித் தேர்வாக இருக்கிறதோ, அதேபோல் தான், “டிஇடிதேர்வும். ஆசிரியர் பணிக்குச் செல்ல, இது ஒரு தகுதித் தேர்வு;   

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.

இத்தேர்வு ஆண்டுதோறும் நடக்கும். ஆசிரியர் பணிக்கு படித்த அனைவரும், இந்த தகுதித் தேர்வை எழுதலாம்.

இத்தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, பணி நியமனம் நடைபெறாது. எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் இருக்கும்.

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு முடியும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படும்.

வழக்கு முடிவுக்கு வந்தபின், இடைநிலை ஆசிரியர்களை எந்த வகையில் நியமனம் செய்வது என்பது குறித்து, தமிழக அரசு முடிவு செய்யும்.

அதே நேரத்தில், அவர்கள் தகுதித் தேர்வில் பங்கேற்று, தகுதி ஏற்படுத்திக்கொள்ள எந்தத் தடையும் இல்லை.

பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகிய பணியிடங்கள், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படும்.

விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள முதுகலை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படுவார்கள்.

இனிமேல், பதிவுமூப்பு அடிப்படையில், எவ்வித பணி நியமனங்களும் இருக்காது.

இந்த வகை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கு முன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.பட்டதாரி தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில், கணிதம்-அறிவியல் அல்லது சமூகக் கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ், 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என இருப்பதை மாற்றி, தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் இருந்தே, 60 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதிலும் எவ்வித பிரச்னையும் இருக்காது.
மே அல்லது ஜூன் மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. அதன்பின், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தேதியில் இத்தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு, அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும்" என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.

“ஒவ்வொரு மாவட்டத்திலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு, அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும்என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில், 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளிகளில், 5,253 பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள், 5,392 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் 5,904 தையல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சி.இ.ஓ., தலைமையில் குழு:அறிவிக்கப்பட்டுள்ள 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்களையும், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பள்ளிக் கல்வித் துறை) தலைமையிலான குழு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யும்.

இந்தக் குழுவில், அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மை கல்வி அலுவலர், உறுப்பினர்-செயலராக இருப்பார். மேலும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட அளவில் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி அலுவலர் ஒருவர், சிறந்த ஓவிய ஆசிரியர் ஒருவர், தையல் மற்றும் இசை, பாட்டு ஆகியவற்றில் சிறப்பு வாய்ந்த ஒருவர் ஆகியோரும் குழுவில் இடம் பெறுவர்.

நியமன அதிகாரம்:உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான நியமனங்களை, முதன்மை கல்வி அதிகாரிகளும், தொடக்கப் பள்ளிகளுக்கான நியமனங்களை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் மேற்கொள்வர்.

*பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, நேர்முகத் தேர்வு மூலம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்.

* பகுதி நேர ஆசிரியர்கள், நியமிக்கப்படும் பள்ளிகளில் வாரத்திற்கு குறைந்தது 9 மணி நேரம் பணிபுரிய வேண்டும். அதாவது, ஒரு வாரத்திற்கு மூன்று நாட்களில், தலா அரை நாட்கள் பணிபுரிய வேண்டும். காலை 9.30 – 12.30 மணி அல்லது பிற்பகல் 2 – 5 மணி ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு நேரம், ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும். இவர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

* மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (அனைவருக்கும் கல்வித் திட்டம்) மூலம், கிராம கல்விக்குழுவிடம் சம்பளப் பணம் ஒப்படைக்கப்பட்டு, அந்தக் குழு மூலம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

* ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர், அதிகபட்சமாக நான்கு பள்ளிகளில் நியமிக்கப்படுவார். அவர், அந்த நான்கு பள்ளிகளிலும் தலா மூன்று அரை நாட்கள் பணிபுரிய வேண்டும். இதற்கான சம்பளத்தை நான்கு பள்ளிகளும் வழங்கும்.

* 10 சதவீத ஆசிரியர்கள், காத்திருப்போர் பட்டியலுக்காக தேர்வு செய்யப்படுவர். அதிக கல்வித் தகுதி கொண்டவர்கள் மற்றும் பெண்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.

* இந்த பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது தான். திட்டக் காலம் முடியும் வரை மட்டுமே, இந்த ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டியிருக்கும். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, எந்நேரத்திலும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்வதற்கும் வழிவகை உள்ளது.

* அரசால் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற அனைத்து நாட்களிலும், இந்த வகை ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீதர் கூறியுள்ளார்.

முதுகலை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதுகலை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்என, தமிழக அரசு அறிவித்துள்ளது.பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் வெளியிட்ட அரசாணை: 

முதுகலை ஆசிரியர்கள், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், இதுவரை நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இந்த முறையை மாற்றி, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம், முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டு, அதன்படி நடைமுறைப்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு செயலர் கூறியுள்ளார்.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முதுகலை ஆசிரியர் நியமனம் குறித்து மட்டும் எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது, எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டதன் மூலம், குழப்பம் தீர்ந்துள்ளது. புதிய முறையில், விரைவில் 1,500 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

5 முதல், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது.

கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.

இந்நிலையில், “தமிழகத்தில், மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” என, 2008ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில அளவிலான வேலைவாய்ப்பு, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும்.

பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை, அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, எழுத்துத் தேர்வு அடிப்படையில், நியமனம் செய்யப்படுவர்.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும். தேசிய கவுன்சில் வகுத்துள்ள கல்வித் தகுதி உள்ளவர்கள் தான், ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.
தேர்வு முறை

* தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.

* இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.

* முதல் தாள், மொத்தம் 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும்.

* இரண்டாம் தாள், 150 கேள்விகள் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.

* அறிவியல் ஆசிரியர்களுக்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து 60 கேள்விகளும், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, அதில் இருந்து 60 கேள்விகளும் கேட்கப்படும்.

* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். எனினும், பள்ளி நிர்வாகம், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு, இடஒதுக்கீடு கொள்கையின்படி, சலுகைகள் வழங்கலாம். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்விச் சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலை, கல்வியியல் ஆணையமாக மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் தொடக்கக் கல்விக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி தான் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளது.
  
  தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.டி.இ.டி., முடித்திருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.

இதுதவிர, இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆணையம் வகுத்துள்ள குறைந்தபட்ச தகுதி இல்லாத ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த தகுதியை பெற வேண்டும்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க தகுதித் தேர்வு நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

34 உதவி தொடக்க கல்வி அலுவலர் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் , போட்டித் தேர்வு மூலம் 34  உதவி தொடக்க கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பம் வழங்கும் தேதி 04.11.2011, விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2011, தேர்வு நாள் :08.01.2012. விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 50. விண்ணப்பம் வழங்கப்படும் இடம் அனைத்து மாவட்ட CEO அலுவலகம் .

1. Advertisement / Notification

2. Prospectus

தொடக்க கல்வித் துறையில் காலியாக உள்ள 34 உதவித் தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களில் நேரடியாக பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர். மேற்கண்ட அலுவலர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தொடக்க கல்வி துறையில் 34 உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ்3, ஆங்கிலம்4, கணக்கு 3, இயற்பியல்3, வேதியியல் 6, தாவரவியல்4, விலங்கியல் 4, வரலாறு 3, புவியியல் 4 பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர். பி.ஏ, பிஎஸ்சி மற்றும் பி.எட் படித்த 35 வயதுக்குட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு 3 மணி நேரம் நடக்கும். முதன்மைப் பாடம் 110 மதிப்பெண், கற்பித்தல் முறை 30, பொது அறிவு 10 மதிப்பெண் என மொத்தம் 150 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 45 மதிப்பெண்ணும், இதர மாணவர்கள் 60 மதிப்பெண்ணும் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
தேர்வு மையங்கள் 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்படும். ஒரு பதவிக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் சான்று சரிபார்ப்பு நடத்தி பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அப்போது இன சுழற்சி முறையும் கடைபிடிக்கப்படும். தேர்வுக் கட்டணமாக ரூ. 300 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை என்ற பெயரில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.
ஸ்டேட் பாங்க, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கார்ப்ரேஷன் வங்கி ஆகியவற்றில் ஏதாவது ஒரு வங்கியில் டிடி எடுக்க வேண்டும். பாஸ்போர்ட் போட்டோ, டிடி ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேற்கண்ட தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 4ம் தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ரூ. 50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

மாறுதலுக்குப் பின், புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் ஆறு பாடங்களுக்கு 1,110 பேரும், தொடக்க கல்வித்துறையில் மூன்று பாடங்களுக்கு 216 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள, 3,665 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மாநில பதிவுமூப்பு அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களின் தேர்வுப் பட்டியலை, கடந்த பிப்ரவரி இறுதியில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இந்நிலையில், மாநில பதிவு மூப்பில் விடுபட்டவர்களின் பட்டியலை, காலதாமதமாக வேலை வாய்ப்பு இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அளித்தது.இதனால், அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டன. அப்பட்டியலில் இருந்த பலர், தேர்வுப் பட்டியலில் இடம்பெறும் நிலை ஏற்பட்டதால், ஏற்கனவே தயாரித்திருந்த தேர்வுப் பட்டியலை திருத்தி, புதிய பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. அதன்படி, பாட வாரியாக புதிய பட்டியலை தயாரித்துள்ளது.

முதற்கட்டமாக, பள்ளிக் கல்வித்துறையில், தமிழ், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியில் ஆகிய ஆறு பாடங்களுக்கும், தொடக்க கல்வித்துறையில் இயற்பியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. மீதமுள்ள பாடங்களுக்கு, பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது.

பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழில் 210 பேர், இயற்பியலில் 444, தாவரவியலில் 193, விலங்கியலில் 58 மற்றும் புவியியலில் 12 பேர் என மொத்தம் 1,110 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பெயர் விவரங்கள் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தொடக்க கல்வித்துறைக்கு, இயற்பியலில் 116 பேர், தாவரவியலில் 50 பேர், விலங்கியலில் 50 பேர் என 216 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறைக்கான ஒதுக்கீட்டில், 29 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இன சுழற்சிகளில் 131 பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பணியிடங்கள், கோர்ட் உத்தரவுப்படி, “ரிசர்வ்’ செய்யப்பட்டுள்ளன. தொடக்க கல்வித்துறையில், எட்டு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இல்லை என்றும், 9 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பணியிடம்,”ரிசர்வ்’ செய்யப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, 15ம் தேதிக்குப் பின் வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

பதிவு மூப்பு விடுபட்டவர்கள் மற்றும் கோர்ட்டில் உத்தரவு பெற்றவர்கள் என, மொத்தம் 76 பேரின் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் அனுப்பியது. இவர்களுக்கு, நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தன.இந்தப் பட்டியலை தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேர்வுப் பட்டியலில் இருப்பவர்களை விட, இவர்களில் பல பேருக்கு பதிவு மூப்பு தகுதி இருப்பதை கண்டறிந்துள்ளது.

இதனால், தேர்வுப் பட்டியலில் திருத்தம் செய்து, புதிய பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுத்துள்ளது.இதனால், ஏற்கனவே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றிருந்த பலர், புதிய பட்டியலில் இடம் பெறாமல் போவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. புதிய தேர்வுப் பட்டியலில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கென தனியாக 286 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.திருத்தப்பட்ட புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, 15ம் தேதிக்குப் பின் வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை முடிவு ஆசிரியர் நியமனத்துக்கு தேர்வு நடத்த திட்டம்

தேர்வு நடத்தி ஆசிரியர்களை தெரிவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். பல ஆயிரம் ஆசிரியர்கள் கடந்த ஆட்சியில் பணி நியமனம் பெற்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு 6,000 பேர் பணி நியமனம் செய்ய அறிவிக்கப்பட்டது. அதில் 5,800 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அதிமுக அரசு தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது. சமச்சீர் கல்வியில் திருத்தம் கொண்டு வரவும் முயற்சி செய்து வருகிறது.
இதற்கிடையே தெரிவுப் பட்டியலில் இடம்பெற்ற பட்டதாரிகள், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பட்டதாரிகள் நியமனத்தில் தேர்வு நடத்தியே ஆசிரியர்களை தெரிவு செய்து வந்தது. அதன் அடிப்படையில், தற்போதும் தேர்வு நடத்துவார்களா அல்லது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் தெரிவு செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும், தற்போதுள்ள சலுகைகள் தொடரும் என்று முதல்வர் ஜெயலலிதா தேர்தலின்போது தெரிவித்தார். அதனால், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தேர்வு நடத்தியே பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதிகாரிகளின் கருத்தின்படி தேர்வு நடத்தலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது இதற்கிடை யே, ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்ட 5,800 பேரையும், சான்று சரிபார்ப்பு முடித்து நிலுவையில் உள்ள 12,000 பேரையும் இந்த ஆண்டில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், கல்வி அதிகாரிகள் கல்வித் தரத்தை முன்வைத்து, தேர்வு நடத்தியே ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு மட்டும் முதல் மூன்று இடங்களில் அதிக அளவு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 வகுப்பிலும் அதிக அளவில் செண்டம் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டில் அதிக அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதால்தான் இந்த அளவு தேர்ச்சி வீதம் கிடைத்துள்ளது என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டதுபோல 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர் நியமிக்கப்பட்டால் தரமும், தேர்ச்சியும் அதிகமாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தேர்வு நடத்தியே ஆசிரியர்களை தெரிவு செய்யப் போவதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதை அரசும் வரவேற்றுள்ளது. இதையடுத்து, ஆசிரியர்களை தேர்வு செய்ய நடத்த வேண்டிய தேர்வுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. சமச்சீர் கல்வி தொடர்பான பிரச்னை முடிவுக்கு வந்ததும், அடுத்தபடியாக ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆசிரியர் பணியிடங்களுக்கு பரிந்துரை பட்டியல் வெளியீடு

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 2,030 மற்றும் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்கள் 175 ஆகியோருக்கான சான்றிதழ் சரிபார்த்தலுக்கான வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரைப் பட்டியலை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில வழியிலான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 1,961, தெலுங்கு பிரிவில் 45 பணியிடங்கள், கன்னட பிரிவில் எட்டு பணியிடங்கள், மலையாள பிரிவில் நான்கு பணியிடங்கள் மற்றும் உருது பிரிவில் 12 பணியிடங்கள் என, மொத்தம் 2,030 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளன. மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம், சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வேலை வாய்ப்பு இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கான முழு விவரங்கள், தமிழக அரசு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. அதேபோல், 175 கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்களுக்கான பரிந்துரைப் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்த்தல் நிகழ்ச்சியை நடத்தி, இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது

KALVISOLAI | TRBNEWS