தமிழகத்தைச் சேர்ந்த 83 குரூப்-1 அதிகாரிகளின் நியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தப் பிரச்னை குறித்து மாநில அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த 83 குரூப்-1 அதிகாரிகளின் நியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தப் பிரச்னை குறித்து மாநில அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

http://alleducationnewsonline.blogspot.in/2014/07/83-1.html

2013 -14 -ஆம் ஆண்டு முதல், GPF சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் www.agae.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

http://alleducationnewsonline.blogspot.in/2014/06/2013-14-gpf-wwwagaetnnicin.html

D.ELE.ED HALL TICKET | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

http://alleducationnewsonline.blogspot.in/2014/06/deleed-hall-ticket.html

TEACHERS GENERAL COUNSELLING 2014-2015

http://alleducationnewsonline.blogspot.in/2014/06/teachers-general-counselling-2014-2015.html

TAMIL NADU TEACHERS PROMOTION PANEL 2014-2015 | TEACHERS PROMOTION PANEL 2014-2015 | தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் 2014-2015 | PROMOTION PANEL 2014-2015

http://alleducationnewsonline.blogspot.in/2014/06/tamil-nadu-teachers-promotion-panel.html

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் பெற வழிமுறை

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்களுக்கு மட்டுமே எஸ்.எஸ்.எல்.சி சிறப்புத் துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. பள்ளிகள் மூலமாகவும், தேர்வு மையங்கள் மூலமாகவும் தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த தேர்வர்கள் கடந்த 19–ந்தேதி முதல் www,tndge.in என்ற இணையதள முகவரியில் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது.

எனினும், சில தேர்வர்கள் தமக்குரிய ஹால் டிக்கெட்டை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை என தெரிவித்ததன் காரணமாக, இவ்வாறான தேர்வர்கள் தாங்கள் தேர்வுக் கட்டணம் செலுத்திய பள்ளி அமைந்துள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தை உடன் தொடர்பு கொண்டு தேர்வுக் கூட அனுமதி சீட்டினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தேர்வுக் கட்டணத்தினை பள்ளியில் செலுத்தியதற்கு ஆதாரமாக, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து ‘தேர்வர் தேர்வுக் கட்டணம் செலுத்தியுள்ளார் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத் தேர்வெழுத தகுதியானவர்’ என கடிதம் பெற்று மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் தேர்வர் சமர்ப்பித்த பிறகே ஹால் டிக்கெட் வழங்கப்படும்.

மேலும், தேர்வர் 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தினை எடுத்து, ஒன்றினை தேர்வுக்கூட அனுமதி சீட்டில் ஒட்ட வேண்டும். மற்றொரு புகைப்படத்தினை தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 4,477 பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில் 933 பேர் (20 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான சுய விவரப் படிவம், அடையாளப் படிவம், அங்கீகாரப் படிவும் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதில் பங்கேற்பதற்காக அழைப்புக் கடிதங்கள் தனியாக அனுப்பப்படாது. மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் சலுகை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அவர்கள் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேறு யாரையாவது நியமிக்கலாம். அதற்காக அங்கீகாரக் கடிதத்தை தேர்வர் அந்த நபருக்கு வழங்க வேண்டும்.
CV Center

எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

எட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற  தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம் வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2013–2014 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ –மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.1,50,000–க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தலைமை ஆசிரியர்கள் வெற்று விண்ணப்பங்களை எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.
புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் 25–12–2013–க்குள் ஒப்படைத்தல் வேண்டும். தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் www.tndge.in என்ற இணையதளம் மூலம் 23–ந்தேதி முதல் 31–ந்தேதிக்குள் பதிவு செய்தல் வேண்டும்.
இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ளார்.

நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் 1 தேர்வு அறிவிப்பு 17ம் தேதி வெளியாகிறது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கி வந்த நிதியை நிறுத்திக் கொண்டதைத் தொடர்ந்து, இத்திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாநில கல்வி திட்டத்திற்கு மாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அதனையொட்டி வட்டார வளமைய மேற்பார்வையாளர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி மாநிலம் முழுவதும் 280 வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்கவும், 248 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடந்தது.

தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், "பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை’ (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர், அமெரிக்காவில் பயிலும் மாணவருடன் “வீடியோகான்பரன்ஸ்’ மூலம் கலந்துரையாடும் திட்டம், பள்ளி கல்வித் துறையில் விரைவில் அமலாக உள்ளது.
தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், “பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை’ (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இணையதளம் மூலம் “பள்ளி விட்டு பள்ளி, மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு’ என்ற அடிப்படையில், கல்வியறிவு, கற்பதற்கான புதிய வழிகளை வேறுபட்ட முறையிலும், மாறுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் கற்கும் வாய்ப்பு இதனால் ஏற்படும். தமிழகத்தில் 160 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், 128 நடுநிலைப் பள்ளிகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சோதனை ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தொழிற்நுட்ப கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், இணையதள வசதி, கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப், 3 ஜி டேட்டா கார்டு, வெப் கேமரா, மைக்ரோ போன், ஸ்பீக்கர்கள் வசதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் ஜெயலலிதாவின் தேதிக்காக, கல்வித்துறையினர் காத்திருக்கின்றனர். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், தமிழக பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருக்கும்.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வரின், “விஷன் 2023′ திட்டத்தின்கீழ் திட்டம் அமல்படுத்தப்படும். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், இடைநிலைக் கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்தவும் பயன்படும். முதற்கட்டமாக, மாநில பள்ளிகளில் “வீடியோகான்பரன்சிங்’ வசதி செய்யப்படும். தொடர்ச்சியாக, வெளிநாட்டு மாணவர்களுடம் நம் மாணவர்கள் கலந்துரையாட விரைவில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான தீவிர பணிகளில் கல்வித்துறை செயலாளர் சபிதா தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, நூலகப் புத்தகங்களை பயன்படுத்தத் தூண்டும். வேறுபட்ட வட்டார மொழிச் சொற்களின் அறிமுகம் பெறவும், மொழியாளுகைத் திறனும் மாணவர்களிடம் வளரும், என்றார்.

துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது.

துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது.துணை கலெக்டர், 3; வணிக வரித்துறை அலுவலர், 30; ஊரக வளர்ச்சித் துறையில், 30 பணியிடம் உட்பட பல்வேறு துறைகளில், 70 முதல் 80 பணியிடங்கள் வரை, அறிவிப்பில் இடம்பெறும் என, தெரிகிறது. 17ம் தேதிக்குள், மேலும் கூடுதல் காலி பணியிடங்கள், அரசு துறைகளில் இருந்து, தேர்வாணையத்திற்கு வரும் பட்சத்தில், காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் என, 15 ஆயிரம் பேர், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை, பள்ளி கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும், தமிழக அரசுக்கு அனுப்பியது. பள்ளி கல்வி இயக்குனர், 3,487 பணியிடங்களுக்கும், தொடக்க கல்வி இயக்குனர், 694 இடங்களுக்கும், அரசின் அனுமதி கோரி, பட்டியலை அனுப்பினர். இதை, அரசு ஆய்வு செய்து, 3,525 இடங்களை நிரப்ப அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது.
கல்வித்துறை செயலர், சபிதா, 10ம் தேதி வெளியிட்ட அரசாணை விவரம்:நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 314; ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 380 பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப, அரசு அனுமதி அளிக்கிறது. மேலும், முதுகலை ஆசிரியர், 809; பட்டதாரி ஆசிரியர், 979; இடைநிலை ஆசிரியர், 887; சிறப்பு ஆசிரியர் (ஓவியம், இசை, தையல்), 156 பணியிடங்கள் என, 3,525 பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் நிரப்ப, சம்பந்தப்பட்ட துறைகள், நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களில், 71 பேர், முதுகலை ஆசிரியராகவும், 115 வட்டார வள மைய பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியராகவும், பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

1. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் வட்டார வளமையங்களில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்களுக்கு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படவேண்டியுள்ளது. எனவே வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.

2. 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

IGNOU -M.Ed., நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது | M. Ed. Entrance Test, 2013 Results.

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு .

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா 312 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில: 
 * மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படித்தொகை மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிப்பு. 
* அரசு ஊழியர்களுக்கான குளிர்காலபடி மாதம் 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. 
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர் சேர்க்கப்படுவதில்லை. 
இந்த நிலையை மாற்றி, இரு துறைகளிலும் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கும், தேர்வுப்பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், வரும் பொது தேர்வில், நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரையும், தேர்வுப் பணியில் ஈடுபடுத்த, தேர்வுத் துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

BRC-வட்டார வளமையம் | அரசாணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013-சொல்வது என்ன?

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றி வந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் 324 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகவும்; 71 பேர் முதுகலை ஆசிரியராகவும்; 115 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிமாறுதல் அளிக்க உள்ளதாகவும், மேலும் வட்டார வளமையத்தினை மூத்த ஆசிரியர் பயிற்றுனர் வழிநடத்துவார். , ஒரு ஆசிரியர் பயிற்றுனருக்கு 10 பள்ளிகளை ஒதுக்கீடு செய்வது எனவும், அரசு ஆணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013- இன் படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.

1. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் வட்டார வளமையங்களில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்களுக்கு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படவேண்டியுள்ளது. எனவே வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.

2. 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

TEACHERS PROMOTION PANEL – 2013-2014

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

காவல்துறையின் பணிச் சுமையைக் குறைத்து, சட்டம் ஒழுங்கையும் சிறப்பாகப் பராமரிக்கும் வகையிலும் காவல்துறைக்கு துணையாக தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.

இளைஞர்களைக்கொண்டு மாவட்ட எஸ்.பி. மற்றும் காவல் ஆணையர்களால் உருவாக்கப்படும் இந்தப் படை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துதல், கூட்ட நெரிசல்களை சரிசெய்தல் போன்ற வேலைகளோடு இரவு ரோந்துப் பணியிலும் ஈடுபடுத்த தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.

இந்தப் படையில் இவ்வாண்டு பத்தாயிரம் பேரையும், அடுத்த ஆண்டு 15 ஆயிரம் பேரையும் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் 10-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு சீருடையாளர் பணியாளர் தேர்வு குழுமம் நடத்தியது.

இந்தத் தேர்வு 31 மாவட்டங்கள், 6 மாநகரங்கள் ஆகியவற்றில் மொத்தம் 94 மையங்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 120 பேர் எழுதினர். இத் தேர்வின் முடிவு தமிழ்நாடு சீருடையாளர் பணியாளர் குழுமத்தின் http://www.tnpolice.gov.in என்ற இணையத்தளத்திலும்,ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ர்ப்ண்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையத்தளத்திலும் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த இணையத்தளத்தைப் பார்த்து தேர்வின் முடிவைத் தெரிந்துக் கொள்ளலாம்.

இத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவை நடைபெறும்.

இதற்கான அழைப்புக் கடிதம் இம் மாதம் 26ம் தேதிக்குள் கிடைக்கப்பெறாதவர்கள், அவர்கள் விண்ணப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அழைப்பு கடிதத்தின் நகலை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும அலுவலகத்தை 044-28413658 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

இத் தகவலை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இத் தேர்வில் பிழையான கேள்விகள் இடம் பெற்றிருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்த எஸ்.விஜயலெட்சுமி, ஜே.ஆன்டனி கிளாரா ஆகியோருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 21 இல் நடத்திய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர். பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், இதை தனி நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ், ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமாகிறது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், மறுதேர்வு நடத்துவதால் இந்தப் பணி மேலும் தாமதமாகும். 31 ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப் பாடத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும் செலவினத்தை ஏற்படுத்தும். அதோடு, முந்தைய தேர்வை நன்றாக எழுதியவர்கள், மறுதேர்வில் அதே அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். மறுதேர்வை சில தேர்வர்கள் எழுத முடியாமலும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். ஆகவே, மறுதேர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 
அதையடுத்து எம்.ஜெய்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, பி வரிசை கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழை, அச்சுப்பிழை தான், இதனால் கேள்வியின் அர்த்தம் எவ்விதத்திலும் மாறுபடாது. இத்தேர்வை எழுதும் முதுகலைப் பட்டதாரிகள், எளிதில் புரிந்து கொள்ள முடியும். மறுதேர்வு நடத்துவது அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தும். ஆகவே, தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அதையடுத்து மனுதாரர்கள் இருவருக்கும் 21 மதிப்பெண்களை வழங்க வேண்டும். மனுதாரர்களுக்கு இரு பணியிடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உத்தரவிட்டனர். 
மேலும், தமிழ் பாடத்துக்கான திருத்தப்பட்ட ரேங்க் பட்டியலைத் தயாரித்து, டிசம்பர் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த துறைகள் சார்பில் எம்.ஃபில். மற்றும் ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தெற்காசியாவிலேயே இருக்கும் ஒரே கல்வியியல் பல்கலைக்கழகம் என்ற பெருமை கொண்டது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தின் கீழ், 674 கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.

கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்குவது, ஆண்டுக்கு ஆண்டு இணைப்பு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து அந்த இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிப்பது, பாடத் திட்டங்களை வகுப்பது, இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி, முடிவுகளை அறிவிப்பது என்பன உள்ளிட்ட பணிகளை மட்டுமே இத்தனை ஆண்டுகளாக இந்தப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் இப்போது முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் எம்.ஃபில்., மற்றும் பிஎச்.டி. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் புதன்கிழமை அளித்த பேட்டி:

பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கலை அறிவியல் துறை, மதிப்பு சார்ந்த கல்வித் துறை, கல்வி உளவியல் துறை, கல்வி தொழில்நுட்பத் துறை, பாடத் திட்டம் தயாரிப்பு மற்றும் நிர்வாகத் துறை, கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத் துறை என 6 துறைகள் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளன.

இந்த துறைகள் சார்பில் வரும் 2014 ஜனவரி முதல் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எம்.ஃபில். படிப்பில் அதிகபட்சமாக 20 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். பிஎச்.டி.-யை பொருத்தவரை ஒரு பேராசிரியர் 8 பேருக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.

இந்த படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பரில் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டு ஜூலை மற்றும் ஜனவரியில் வகுப்புகள் தொடங்கப்படும்.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள துறைகளில் 5 துறைகளுக்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு துறைக்கும் 2 இணைப் பேராசிரியர்கள், 4 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த 4 கல்வி வாரியத்தை கலைத்து விட்டு பொது கல்வி வாரியம் 2008ல் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது. இந்த முறை வரவேற்பு பெற்றது.

தமிழகத்தில் உள்ள 16 பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் சில பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்றதல்ல என்று நிராகரிக்கப்படுகிறது.

சில பட்ட படிப்புகள் இணையில்லை என்றும் நிராகரிக்கப்படுகிறது.இதனால் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுபவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை தொடர்ந்து ஒரே சமச்சீரான கல்வியை நடைமுறைபடுத்த அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டம் நடந் தது. அதில், கல்லூரிகளில் சமச்சீர் கல்வி கொண்டுவருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான துணை வேந்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சமச்சீர் கல்வி தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்து அறிய உயர் கல்வி துறை திட்டமிட்டுள்ளது. எனவே விரைவில் சமச்சீர் கல்வியை கொண்டுவருவதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழை காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று டிசம்பர் 13 விடுமுறை

கனமழை காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று டிசம்பர் 13 விடுமுறை அளிக்கப்படுவதாக, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். எனினும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் பின்பற்றப்படும்

அரசுப் பொதுத் தேர்வுகளான பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும். ஒவ்வொரு தேர்வும் முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு தபால்துறை மூலம் மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். தபால்துறையின் பல்வேறு விதமான பார்சல்களுடன் விடைத்தாள் கட்டுகளும் பயணம் செய்யும்.

இவ்வாறு தபாலில் அனுப்பும்போது விடைத்தாள் கட்டுகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. கடந்த ஆண்டு நடந்த 2 சம்பவங்கள் விடைத்தாள் கட்டுகளின் பாதுகாப்பின்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தபாலில் அனுப்பப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகள் சில மாயமாகிவிட்டன. இதேபோல், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆர்.எம்.எஸ். மூலம் அனுப்பிய விடைத்தாள் கட்டுகள், ரயிலில் இருந்து கீழே விழுந்து சேதமடைந்தன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான விடைத்தாள் கட்டுகள் தேர்வுத்துறையைப் போல் இல்லாமல் தனி வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் மதிப்பீட்டு மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நிகழ்ந்த சம்பவங்களை மனதில் கொண்டும், எதிர்காலத்தில் இதுபோன்று தவறுகள் நடந்துவிடக் கூடாது என்பதாலும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்களை தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு எடுத்துச் செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி, விடைத்தாள் கட்டுகளை ஒவ்வொரு மையத்துக்கும் சென்று சேகரித்து பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டுவர மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சார்பில் ஒரு காப்பாளரும் (கஸ்டோடியன்), தேர்வுத்துறை சார்பில் பொறுப்பு அதிகாரியும் நியமிக்கப்படுவர். பல்வேறு தேர்வு மையங்களில் விடைத்தாள்களை சேகரித்து ஒரு குறிப்பிட்ட மையத்துக்கு கொண்டு வந்துவிடுவார்கள். அங்கிருந்து தனி வாகனங்களில் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்படும்.

பழைய முறையில், விடைத்தாள் கட்டுகளை தபால் அலுவலகத்தில் புக்கிங் செய்வதை வைத்து அந்தக் கட்டுகள் எந்த மதிப்பீட்டு மையத்துக்கு செல்கின்றன என்பது தெரிந்துவிடும்.

ஆனால், புதிய முறையில் விடைத்தாள் கட்டுகள் அனுப்பப்படும் மதிப்பீட்டு மையம் எளிதில் வெளியே தெரியாது. விடைத்தாள் கட்டுகளின் பாதுகாப்புக்கான இந்த புதிய நடைமுறையை அடுத்த ஆண்டு மார்ச் பொதுத்தேர்வு முதல் அமல்படுத்த தேர்வுத்து றை முடிவு செய்துள்ளது.

“நெட்” தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்.

கலை பட்டதாரிகளுக்கான நெட் தகுதித் தேர்வை பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்துகிறது. இதே போல் அறிவியல், கணித பட்டதாரி களுக்கான நெட் தகுதித் தேர்வு சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு வருகிற 22-ம் தேதி சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த வர்களுக்கு ஆன்லைனிலேயே ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. ஆன்லைன் ஹால்டிக்கெட்டை http://www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் ஹால்டிக்கெட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் தெளிவாக இல்லாவிட்டால். அத்தகைய விண்ணப்பதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்ப டங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைஆகியவற்றை தேர்வு மையத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று சி.எஸ்.ஐ.ஆர். அறிவித்துள்ளது.

மத்திய அரசு நிதிக்குறைப்பு காரணமாக, SSA மேற்பார்வையாளர் பணியிடங்களை நீக்குவது உட்பட சில மாற்றங்கள் கொண்டுவர தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.